சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் பட்டியலின பிரிவின் தேசிய ஆணைய தலைவராக
விஜய் சம்ப்லா பொறுப்பேற்பு
பட்டியலின பிரிவு தேசிய ஆணையத்தின் தலைவராக திரு. விஜய் சம்ப்லா புதுதில்லியில் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் மத்திய சமூக நீதித்துறை இணையமைச்சர் திரு. கிரிஷன் பால் குர்ஜார், மத்திய அமைச்சர் சோம் பிரகாஷ், பட்டியலின தேசிய ஆணையத்தின் முன்னாள் தலைவர், பா.ஜ.க.எம்பி ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திரு.விஜய் சம்ப்லா, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையில் 2014ம் ஆண்டு முதல் 19ம் ஆண்டு வரை மத்திய இணை அமைச்சராக இருந்தார்.
புதிய பொறுப்பேற்றபின் பேட்டியளித்த திரு. விஜய் சம்ப்லா, ‘‘பட்டியலின மக்களின் நலன் மற்றும் உரிமைகளை காக்க ஒய்வின்றி பணியாற்றுவேன். பட்டியலின மக்களுக்கு நீதியை உறுதி செய்வதற்காக மட்டும் பணியாற்றாமல், எந்தவித அநீதியையும் தடுக்கும் வகையில் செயல்படுவேன் என்று கூறினார்.
பட்டியல் இனத்தவரின் சமூக பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளின் திட்டமிடலில் தேவையான ஆலோசனையை ஆணையம் வழங்கும் ’’ என்றார் அவர்.
கருத்துகள்