தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக தபால் நிலையம்
பெருங்குடியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக வளாகத்தில் பிப்ரவரி 26-ஆம் தேதி 600113 என்ற அஞ்சல் குறியீட்டு எண்ணுடன் டிடிடிஐ தரமணி அஞ்சல் அலுவலகத்தின் வரையறைக்கு உட்பட்ட “தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக தபால் நிலையம்” என்ற பெயரில் புதிய தபால் நிலையம் துவங்கப்பட உள்ளது.
பல்கலைக்கழகத்தின் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் இதன் வாயிலாகப் பயனடைவார்கள்.
எனவே இந்த புதிய தபால் நிலையத்தின் சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை தெற்கு பிராந்திய அஞ்சல் அலுவலகங்களுக்கான மூத்த கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கேட்டுக்கொண்டுள்ளார்.
கருத்துகள்