அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
ஜாதிக்காய் மிட்டாய் தயாரிப்பதற்கான செயல்முறை தொழில்நுட்பத்தை வணிகமயமாக்குவதற்கான ஒப்பந்தம்
ஜாதிக்காய் மிட்டாய் தயாரிப்பதற்கான செயல்முறை தொழில்நுட்பத்தை வணிகமயமாக்குவதற்கான ஒப்பந்தம் கோவாவில் உள்ள மத்திய கடலோர வேளாண் ஆராய்ச்சி மையம் (ICAR-Central Coastal Agricultural Research Institute (ICAR-CCARI) மற்றும் கோவா மாநில பல்லுயிர் வாரியம் இடையே கடந்த 19 ஆம் தேதி கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தில் மத்திய கடலோர வேளாண் ஆராய்ச்சி மையம் இயக்குநர் டாக்டர் இ.பி.சாகுர்கர், மற்றும் கோவா மாநில பல்லுயிர் வாரிய உறுப்பினர் டாக்டர் ஏ.ஆர் தேசாய் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
ஜாதிக்காயில் 80-85 சதவீதம் விதையறை தோல் பகுதி இருக்கும். அதிகம் விளைச்சல் உள்ள ஒரு மரத்திலிருந்து 100 கிலோ விதையுறை தோல் பெற முடியும்.
தற்போது ஜாதிக்காயில் விதை மட்டும் எடுக்கப்பட்டு விதையுறை தோல் பகுதி வீணாக்கப்பட்டு வயல்களில் வீசப்படுகிறது.
ஆனால் இதை பயன்படுத்தி மிட்டாய் தயாரிக்கும் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு கூடுதல் வருமானத்தை அளிக்கும். இந்த மிட்டாயை எந்தவித ரசாயண கலப்பும் இல்லாமல் 12 மாதங்களுக்கு கெடாமல் வைத்திருக்க முடியும்.
கருத்துகள்