மணல் மாஃபியா வைகுண்டராஜன் குற்றவாளி: டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றம் அறிவிப்பு.
வி.வி.மினரல்ஸ் நிர்வாக இயக்குனர் வைகுண்டராஜன் மீது சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் அவர் பல்வேறு சதி செயல்கள், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துதனக்கு சாதகமாக உதரவுகளைப் பெற்றது என பல குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது. அவருக்கு தண்டனை என்ன எவ்வளவு என்பது நாளை அறிவிக்கப்படும்.பிரபல தனியார் தொலைக்காட்சியின் உரிமையாளர் வைகுண்டராஜன். இவர் தாது மணல் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களில் ஒன்றான வி.வி. மினரல்ஸ் நிறுவனருமாவார். நெல்லை மாவட்டம், திசையன்விளை என்ற ஊரை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது வி.வி.மினரல்ஸ் நிறுவனம்.
பல தொழில்கள் செய்து வரும் இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு வருமான வரித்துறையிடம் சிக்கினார். முறைகேடாக சொத்து சேர்த்ததாக அவருக்கு சொந்தமான அலுவலகங்கள், வீடுகள் என 100க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது சுற்றுச்சூழல் அனுமதி பெற லஞ்சம் கொடுத்த S.வைகுண்டராஜனுக்கு 3 ஆண்டுகள் சிறை,5 லட்சம் அபராதம். லஞ்சம் பெற்ற மத்திய சுற்றுச்சூழல்துறை அதிகாரியாக பணியாற்றியவருக்கு 5 ஆண்டு சிறை, 5 லட்சம் அபராதம் விதிப்பு.
கருத்துகள்