ரூ. 28.26 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல். ஒருவர் கைது
உளவுப் பிரிவினரிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஈகே-544 விமானத்தில் சென்னை வந்த திருச்சூரைச் சேர்ந்த முகமது ஷெகில் என்பவர் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
அவரிடம் நடைபெற்ற சோதனையில் 709 கிராம் எடையிலான தங்கப் பசை அடங்கிய 3 பொட்டலங்கள் அவரது உடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
அவரிடமிருந்து ரூ. 28.26 லட்சம் மதிப்பில் 621 கிராம் தங்கம் சுங்கச் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அவர் கைது செய்யப்பட்டார்.
மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்