இந்தியாவில் நடைபெற்ற சுதந்திரப் போர் வரி கொடா இயக்கம்
1764 ஆம் ஆண்டு வெள்ளையர்களுக்கு (கேப்டன் ரூம்லே) எதிராகப் போராடி உயிர்த்தியாகம் செய்த 5000 வெள்ளலூர் நாட்டு வீரர்களுக்கு நினைவுச் சின்னம்
எழுப்ப நடவடிக்கை எடுக்கப்படுமென டிடிவி தினகரன் அறிவிப்பு....அதன் வரலாற்று நிகழ்வைக் காண்போம்.அலெக்ஸாண்டர்ஸ் கிழக்கு இந்தியா மற்றும் காலனித்துவ இதழ் எனும் ஆங்கிலப் புத்தகம் கிபி 1835 ஆம் ஆண்டில் இலண்டனில் வெளியிடப்பட்டது. இப் புத்தகத்தில் பக்கம் 220 ல் கேப்டன் ரூம்லே எனும் கிழக்கிந்திய கும்பெனி ஆங்கிலேயத் தளபதியால் கொல்லப்பட்ட தன்னாடசி வெள்ளளூர் நாட்டுக் கள்ளர்களைப் பற்றிய தகவல் ஒரளவுக்கு இங்கு விரிவாக உள்ளது.
நவாப் மற்றும் ஆங்கிலேயருக்கு எதிராக திரும்பிய யூசுப்கான் கிபி 1764 ல் கொல்லப்பட்டான். பின் மதுரை நவாபின் கட்டுப்பாட்டில் வந்தது, அடுத்த 5 ஆண்டுகளில் மற்ற பாளையக்காரர்களை நவாப் அடக்கினான்.
இந்த 5 வருடங்களில்(1764 முதல் 1769 வரை) கள்ளர்கள் நவாபின் மேலாண்மையை ஏற்காமல், தன்னாட்சி புரிந்தனர். இதனால் கள்ளர்களை ஒடுக்க எண்ணிய நவாப் முதலில் மேலூரைக் குறி வைத்தான். தளபதி கேப்டன் ரூம்லே தலைமையில் 5 பட்டாலியன் குழு
சிப்பாய்களையும், 1500 குதிரைப்படை வீரர்களையும் நவாப் அனுப்பி. மேலூரில் முகாமிட்ட ரூம்லே, மேலூர் நாட்டார்களுக்கு , அடிபணிந்து வரி செலுத்துமாறு தூது அனுப்பி பதினான்கு நாள் முகாமிட்டான். மேலூர் நாட்டார்கள் அடிபணிய மறுத்து வரி செலுத்த முடியாது என கூறி. வெள்ளையர் சிப்பாய்களின் மீதும் தாக்குதல்களை தொடங்கவே
பின் மேலூரை விட்டு அகன்ற ரூம்லே தன் படையுடன் வெள்ளளூர் நாட்டை அடைந்து சுற்றி வளைத்து நாட்டார்களை தங்களிடம் வந்து அடிபணிய மிரட்டினான்.
கிராமத்தைச் சுற்றியுள்ள முட்புதர்களில் கள்ளர் நாட்டார்கள் திரண்டனர். ஆனால் வெள்ளளூர் நாட்டார்கள் அடிபணிய மறுத்து, அவர்களது இயல்பான முரட்டுத் தனத்துடன், வெள்ளையர்களை நோக்கி ஆவேசமாக குரல் எழுப்பி ஆயுதங்களைக் கொண்டு தாக்கதீ தயாராக
முட்புதர்களையும், வீடுகளிலும் நெருப்பு வைத்தனர் ஆங்கிலேயர். வீடுகளில் இருந்த பெண்கள், குழந்தைகள் என அனைவரும் வெளியேறி ஒரிடத்தில் திரண்டனர். தாக்குதலை தொடங்கினான் கேப்டன் ரூம்லே. ஆண்கள், பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என 3000 பேர் ஒரே நாளில் கொல்லப்பட்டனர்.
வெள்ளளூர் நாட்டின் முக்கிய நாட்டார்களை கைது செய்தனர். கைதிகளுடன் மேலூரை அடைந்தான் ரூம்லே. வெள்ளளூரில் நடந்த பெரும் படுகொலையை அறிந்து மேலூர் நாட்டார்கள், ரூம்லேயோடு ஒத்துழைக்க தற்காலிகமாக சம்மதித்தனர்.
மல்லாக்கோட்டை மற்றும் சிவகங்கை பிரதிநிதிகள் செலுத்தும் வரியின் அளவு மற்றும் சட்டங்களை தாங்களும் ஏற்றுக்கொள்வதாக உறுதி அளித்தனர். பல நூற்றாண்டுகளாக தன்னரசாக் திகழ்ந்த கள்ளர் நாடுகள் ரூம்லேயின் கொடூரத் தாக்குதலுக்குப் பின்
நவாபின் பிரதிநிதி முகமது கோலி என்பவன் மேலூர் பகுதிக்கு அமில்தார் பதவியிலிருந்தான். வெள்ளளூர் நாட்டில் சில ஆய்வுகளைச் செய்ய 10 பியூன் அதாவது ஏவலர்களை அனுப்பினான் வெள்ளையனுக்கு கட்டுப்பட விரும்பாத கள்ளர்கள் கடுங்கோபத்தில் பழிவாங்க காத்திருந்ததையடுத்து வெள்ளளூருக்கு வந்த 10 பியூன்களையும் கள்ளர்கள் கொன்றனர். இந்தச் சண்டையில் கிராமம் தீக்கிரையானது. அங்கிருந்த கள்ளர்கள் வடக்கு நோக்கி நகர்ந்து, புதுக்கோட்டை தொண்டைமான் ஆதரவில் குடியேற முயற்சித்தனர். அதற்குள் படுகொலையை அறிந்த ரூம்லே பெரும் படை ஒன்றை வெள்ளளூர் அனுப்பினான்.
நடந்த மோதலில் 2000 வெள்ளளூர் கள்ளர்கள் கொல்லப்பட்டனர்.
இதற்குப் பின் தான் கள்ளர் நாட்டில் அமைதி நிலவியது. மக்கள் சுமூக வாழக்கை வாழத் தொடங்கினர். மேலூர் நாட்டில் இருந்து வெள்ளையர் படை விளக்கிக் கொள்ளப்பட்டது.
சில ஆண்டுகள் அமைதியாக இருந்தவர்களை மீண்டும் ஹைதர் அலியின் தூண்டுதலில் தாக்குதல்கள் தொடங்கினர்.
மதுரை, தஞ்சை கள்ளர்கள் எதிரிகளைத் தாக்குதல் நடத்தும் போது தீ பற்றும் துப்பாக்கியை பயன் படுத்தி எவ்வளவு மறைவான பகுதிகளில் இருந்தாலும குறிதவறாமல் சுடுவதில் வள்ளவர்கள், குதிரைகளை கடிவாளம் இல்லாமலே வேகமாகச் செலுத்தும் திறனுடையவர்கள். மேலூர் கள்ளர்கள் தங்களது கோட்டைகளில் மலபார் துப்பாக்கிகளை வைத்திருந்தனர், அவற்றை உபயோகிப்பதிலும் சிறந்து விளங்கினர்.
கருத்துகள்