மத்திய அமைச்சரவை உணவு பதப்படுத்துதல் துறைக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
மத்திய துறை திட்டமான ' உணவு பதப்படுத்துதல் துறைக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்திற்கு' பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய இயற்கை வளங்களுக்கு ஏற்ற சர்வதேச உணவு தயாரிப்பு நிறுவனங்களை உருவாக்குவதற்கும், சர்வதேச சந்தைகளில் இந்திய உணவுப் பொருட்களை ஆதரிப்பதற்கும் ரூ 10,900 கோடி மதிப்பிலான இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
திட்டத்தின் நோக்கங்கள்
குறிப்பிட்ட, குறைந்தபட்ச விற்பனையுடன் கூடிய உணவு தயாரிப்பு நிறுவனங்களை ஆதரித்து, அவற்றின் திறனை அதிகரிப்பதற்காக குறைந்தபட்ச மற்றும் குறிப்பிட்ட முதலீட்டை செய்தல், வலிமை மிகுந்த இந்திய வணிகப்பெயர்களை உருவாக்குவதற்காக வெளிநாடுகளில் இந்திய நிறுவனங்களை பிரபலப்படுத்துதல்
சர்வதேச உணவு உற்பத்தி வீரர்களை உருவாக்குவதற்கு ஆதரவளித்தல்
குறிப்பிட்ட இந்திய உணவு பொருட்களை சர்வதேச அளவில் தெரியப்படுத்துவதற்கான வலுவூட்டல் நடவடிக்கைகள், சர்வதேச சந்தைகளில் அதிகளவில் ஏற்றுக்கொள்ளும் தன்மையை உருவாக்குதல்
விவசாய நிலங்களுக்கு வெளியே வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்
பண்ணை பொருட்களுக்கு அதிக விலை மற்றும் விவசாயிகளுக்கு அதிக வருவாயை உறுதி செய்தல்
முக்கிய அம்சங்கள்:
சமைக்க தயாராக உள்ள/சாப்பிட தயாராக உள்ள உணவுகள், பதப்படுத்தப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள், கடல் சார் பொருட்கள், மொசரல்லா வெண்ணெய் ஆகிய நான்கு முக்கிய உணவு பிரிவுகளுக்கு முதல் கூறு பொருந்தும்,
முட்டை, பண்ணை இறைச்சி, முட்டை பொருட்கள் போன்ற பல்வேறு சிறு மற்றும் குறு நிறுவனங்களின் புதுமையான/இயற்கை பொருட்களும் இப்பிரிவின் கீழ் வரும்.
2021-22 மற்றும் 2022-23 ஆகிய முதல் இரண்டு வருடங்களில் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளவாறு முதலீட்டை விண்ணப்பதாரர் மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பிட்ட முதலீட்டை எட்டுவதற்கு 2020-21-ல் செய்த முதலீடும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
குறைந்தபட்ச விற்பனை மற்றும் கட்டாய முதலீடு ஆகிய நிபந்தனைகள் புதுமையான/இயற்கை பொருட்கள் உற்பத்திக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு பொருந்தாது.
வலிமையான இந்திய வணிகக் குறியீடுகளை வெளிநாடுகளில் உருவாக்க உதவுவதற்கான பிரபலப்படுத்துதல் மற்றும் சந்தைப்படுத்துதல் நடவடிக்கைகளை ஆதரிப்பதை தொடர்புடையது இரண்டாம் கூறு ஆகும்.
இந்திய நிறுவனங்களை வெளிநாடுகளில் பிரபலப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளுக்காக 2021-22 முதல் 2026-27 வரையிலான ஆறு அண்டுகளுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
வேலைவாய்ப்புகள் உருவாக்கம் உள்ளிட்ட தாக்கங்கள்:
இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதன் மூலமாக உணவுப்பதப்படுத்துதல் திறன் ரூ 33,494 கோடியாக விரிவடையும்.
2026-27-ஆம் ஆண்டுக்குள் 2.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
செயல்படுத்தும் முறை மற்றும் இலக்குகள்:
அகில இந்திய அளவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்
திட்ட செயல்படுத்தும் முகமை ஒன்றின் மூலமாக இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
2026-27 வரையிலான ஆறு ஆண்டுகளுக்கு இத்திட்டத்தின் கீழான ஊக்கத் தொகை வழங்கப்படும்.
செயல்படுத்துதல்:
அமைச்சரவை செயலாளர் தலைமையிலான அதிகாரமளிக்கப்பட்ட செயலாளர்கள் குழு இத்திட்டத்தை மத்திய அளவில் கண்காணிக்கும்.
பயனாளிகளுக்கு உணவு பதப்படுத்துதல் அமைச்சகம் ஒப்புதல் அளிக்கும்.
மூன்றாம் நபர் மதிப்பீடு மற்றும் ஆய்வு நடவடிக்கை செயல்படுத்தப்படும்.
தேசிய இணையதளம்:
தேசிய அளவிலான இணையதளம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கலாம்.
அனைத்து திட்ட நடவடிக்கைகளும் தேசிய தளத்தில் மேற்கொள்ளப்படும்.
கருத்துகள்