பிரதமர் அலுவலகம் முன்னாள் பிரதமர் திரு எச்.டி. தேவகவுடாவுடன் பிரதமர் பேசினார்
முன்னாள் பிரதமர் திரு எச்.டி தேவகவுடாவுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி பேசினார். அவருடைய மற்றும் அவரது மனைவியின் உடல் நலம் குறித்தும் விசாரித்தார்.
சுட்டுரையில் பிரதமர் விடுத்துள்ள செய்தியில், ‘‘முன்னாள் பிரதமர் திரு எச்.டி.தேவகவுடாவுடன் பேசினேன். அவரைப் பற்றியும், அவரது மனைவியின் உடல்நலம் குறித்தும் விசாரித்தேன். அவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்