சட்டமன்ற தேர்தல் காரணமாக அரசு மதுபான விற்பனைக் கடைகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை .
உத்தரவை மீறி மதுபானங்கள் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரிக்கை ஏப்ரல் 4 ஆம் தேதி காலை 10 மணி முதல் வாக்குப்பதிவு நாளான 6 ஆம் தேதி வரையில் மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான மே 2 ஆம் தேதி தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் விதிகளின்படி மதுக் கடைகள், குடிகார ரன்கள் வரும் பார்கள், தமிழ்நாடு ஹோட்டல் யூனிட் ஆகியவற்றுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
இந்த நாட்களில் எவ்வித மதுபானங்களும் விற்பனை செய்யவோ, பிற இடங்களுக்கு எடுத்து செல்லவோ கூடாது. கடைகள் கட்டாயம் மூடி இருக்க வேண்டும். இந்த உத்தரவை மீறி மதுபானங்கள் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட நாட்களில் மதுக் கடைகள் திறந்து இருப்பது குறித்து புகார் தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
கருத்துகள்