நான்கு
ஆண்டுகளாக தமிழகத்தில் எங்கும் ஊழல் எதிலும் ஊழல் . இலஞ்சத்தை நம்பும் அரசியல்வாதிகள், ஊழலுக்கு உதவும் அதிகாரிகள் என்பதாக தமிழக அரசு நிர்வாகம் அதகளப்பட்டுள்ளது.. அதிகாரமென்பதே பொதுப் பணத்தை சூறையாடக் கிடைத்த வாய்ப்பாகக் கருதும் மன நிலை சில அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் உள்ளது. அரசியல்வாதிகளுக்குத் தோதாக சட்ட,திட்டங்களை வளைத்து சதி செய்து சம்பாதிக்கும் வழிமுறைகளை செய்வதற்கென்றே அதிகாரிகள் கூட்டம் காத்துக் கிடக்கிறது. நெடுஞ்சாலைத் துறையில் நூதனமாக நிகழ்த்தப்பட்டு வரும் ஊழல் சதிகள் தான் அதற்கு சான்று. மணல் கொள்ளை அடித்து அதில் நடக்கும் ஒரு தனியார் தொலைக்காட்சி 234 தொகுதிகளில் வேட்பாளர் நிறுத்தவும் அந்த ஒருவர் பின் நிற்பதே ஒரு ஊழல் இது இந்த மக்களால் அறியப்படவில்லை. தற்போது பத்துப் பதினைந்து. நாளாக கருத்துக் கணிப்புகளை வெளியீடுகிறார்கள. அவரவர் சௌகரியத்திற்கு ஏற்றாற் போல் வாங்கிய பணத்திற்க்கு வஞ்சமில்லாமல் ஒளிபரப்பு செய்து மக்களை நன்றாகவே குழப்பி விட்டுருக்க..
சரி அதனால் நமக்கென்னவென்று நாம் விட்டுப் போக முடியாது உண்மை உரைக்க வேண்டும்
ஒருசில தொகுதிகளில் 25 சதவிகிதத்திற்கும் மேலான வாக்குகளும்.
பல இடங்களில் 14 சதவிகிதம் முதல் 18 சதவிகிதம் வரையிலான வாக்குகளும்..
மீதமுள்ள தொகுதிகளில் அது சராசரியாக 6 சதவிகிதம் முதல் 9 சதவிகிதம் வாக்குகளும் அமமுக தலமையிலான கூட்டணி பெற்றுவிடும் என்பதாகதான் எல்லா எக்ஸீட் போல் நிலவரமும் சொல்கிறது.
அப்படியே சரியாக கனித்தோமென்றால் தினகரனின் அமமுக கூட்டணி 15 சதவிகித வாக்குகளைப் பெறும் என்பதைத்தான் உறுதியாக சொல்லபடுகிறது.
அதாவது ,இது ரொம்ப ஆரோக்கியமான விசயமாகதான் நாம் பார்க்கலாம்.
ஐந்தரை சதவிகித கட்சி அமமுக என்பதை தான்டி 2021-தேர்தல் களத்தில் கதாநாயகன் தினகரன் என்பது நிருபனமாகிறது.
தற்போது மொத்தம் 12 இடங்களில் உள்ள கோவில்களுக்கு வி.கே.சசிகலா நடராஜன் பயணம் செய்கிறார்.. இந்த 12 இடங்கள் என்பது 12 தொகுதிகளாகும்.. கோவில்பட்டி, பாபநாசம், பாப்பிரெட்டிப்பட்டி, மேலூர், திருப்பரங்குன்றம், முதுகுளத்துார், குன்னூர், காரைக்குடி, பொள்ளாச்சி, உசிலம்பட்டி, திருவாடானை போன்றவையே அவைகள். இது ஆன்மீகத் தேடலின் அரசியல் பூச்சு நடிகர் ரஜினிகாந்த் கடைசி நேரத்தில் கைவிரித்து விட்டார். தம்பி பக்கம் சாய்ந்து மு.க.அழகிரி உதவவில்லை கமல்ஹாசன், சகாயம் ஆகியோர் மக்களிடம் எடுபடவில்லை
வன்னியர் இட ஒதுக்கீடு என்று பிரச்சாரம் செய்தால் முக்குலத்தோர் வோட்டு இழக்க வேண்டியிருக்கிறது. வன்னியர் இட ஒதுக்கீடு தற்காலிகமானது என்று முக்குலத்தோரிடம் கூறியதால் தற்போது வன்னியர் வோட்டையும் இழக்க நேரிடுகிறது.
எய்ம்ஸ் சாதனை என்று கூறலாம் என்றால் எய்ம்ஸ் மருத்துவமனையைத் திருடி விட்டார்களா ஏன் கண்டு பிடித்து தர கேட்டு பலர்.
நடந்து முடிந்த நான்கு வருட ஆட்சியில் சொல்வதற்கு எந்தச் சாதனையும் இல்லை.
சுயமாக தேர்தல் அறிக்கையும் முடியவில்லை. திமுக அறிக்கையை அப்படியே நகலாக்கியதால் மக்கள் இத்தனை நாள் ஏன் இதைச் செய்யவில்லை என்று கேட்கிறார்கள்.
பிரதமர் நரேந்திரமோடி படத்தைப் போட்டால் இருக்கும் கொஞ்ச நஞ்ச வாக்குகளும் பறிபோகுமோ என்ற பயம் பலருக்கு.
கடைசி அஸ்திரம் தாய்ப் பாசம். கருத்தை, வார்த்தைகளால் இறந்த ஒரு தாயை இழிவுபடுத்தியதாகப் பரப்பி, அதற்கு அழுது நடிக்க வைக்க அதுவும் எடுபடவில்லை
இதை ஏற்கனவே தேர்தலுக்கு தேர்தல் மத்தியில் செய்து வருகிறது. ஏழைத்தாயை க்யூவில் நிற்க வைப்பது, ஆட்டோவில் செல்ல வைப்பது பிறகு அதை ஊடகங்களில் பரப்புவது என தன் தாயை பகடையாக தேர்தலுக்கு பயன் படுத்த முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமியையும் அதை செயல்படுத்த வைக்கிறது .என்பதும் விவாதமாக மாறியது . மக்களைப் பாதிக்கும்
நீட் மரணம், தூத்துக்குடிப் படுகொலைகள், பொள்ளாச்சி பாலியல் பலாத்காரங்கள், சாத்தான்குளம் படுகொலைகள் என எதற்குமே அழாத முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி தற்போது கண்ணீர் வடிக்கிறார்.
தமிழகம் ஏற்கனவே இது போன்ற பல பார்த்து விட்டது.
முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி ஆட்சி அப்பட்டமான நாடகம் போல் தற்போது அம்பலப்பட்டு நிற்கிறது.
தமிழர்களை முட்டாள்கள் என்று நினைக்கிறார்களோ. என்ற விமர்சனம் உண்டு தமிழர்கள் பெண்மையை மதிப்பவர்கள்.. ஆனால், தமிழைப் புரிந்து கொள்ள முடியாத தற்குறிகள் அல்ல.
சொல்லாத ஒன்றை சொன்னதாக பரப்பி தமிழர்களை திசைதிருப்பி விடலாம் என்று நினைத்தால் அதை நம்பி ஏமாற தமிழர்கள் வட இந்தியர்கள் அல்ல. என்ற நிலை இப்போது பலருக்குப் புரிந்திருக்கும். அமைச்சர் உதயகுமார் நடை பயணம் கிளம்ப காரணமே அமமுக வேட்பாளர் ஆதிநாராயணன் தான். அமைச்சர் உதயகுமாருக்குத் தொல்லை கொடுக்கவே தேர்தலில் நிற்கிறார் கொஞ்சம் மெனக்கெட்டா ஜெயிச்சிடுவார என்ற .நிலை .பார்ப்போம் திருமங்கலத்துல அமைச்சர் உதயகுமார் நிலை பரிதாபம் தான்.அதோடு போடிநாயக்கனூர் தொகுதி, நாகலாபுரத்தில் பிரச்சாரத்திற்கு சென்ற "ஓபிஎஸ் "மீது பூவுக்குள் சாணியை வைத்து வீசிய சம்பவம் . மேலும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கொளுத்தின பட்டாசு வெடித்து சிதறி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மீது விழுந்ததால் இரு கோஷ்டியினருக்கும் மோதல் அதிமுக ஒன்றிய செயலாளர் மண்டை உடைப்பு, ஐடி விங் மாநில நிர்வாகியை ஓட விட்டு அடித்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் .விபரீதத்தை உணர்ந்த வேட்பாளர் தளவாய் சுந்தரம் பிரச்சாரத்தை பாதியிலேயே நிறுத்தி விட்டு தப்பியோட்டம்.
என்ற நிகழ்வுகள் பல அரங்கேற்றம் நாள் தோறும் நடைபெற மக்கள் வேடிக்கை பார்க்கும் நிலை தேர்தல் களத்தில் அமமுகவுக்கு பயங்கரமான வரவேற்பு, நாமே எதிர்பார்க்காத அளவுக்கு ஆதரவு ஆனால்
அவர்கள் நோக்கம் ஆட்சியைப் பிடிப்பதல்ல அதிமுகவை வீழ்த்துவது வீட்டுக்கு அனுப்புவது தான்னு முடிவு பண்ணி பணி செய்துவர
ஆதரவு தெரிவிக்கும் விதமாக அதிமுக வுக்கு எதிராக ஓட்டு போடுவோம்னு உறுதியாக கூறியும் வருகிறார்கள்...வட மாவட்டங்களில் தொடங்கி திருச்சி தாண்டி மதுரை வரை இது தான் கள நிலவரம்.
தென் மாவட்டங்களில் குறிப்பாக நகரம் மற்றும் தெற்கு டெல்டாவில் மட்டும் ஓட்டு வந்து சேரும். எப்படிப் பார்த்தாலும் இரட்டை இலக்க எண்ணை எட்டி விடலாம் போல். ஒரு வருஷத்துக்கு முன்பே அவர்களின் நோக்கத்தை தெளிவு படுத்தியிருந்தால் கூடுதலாக 20-30 தொகுதிகளில் வெற்றி கிடைத்திருக்கும் நிலை தான் உள்ளது.
தினகரனுக்கு ஆதரவாக திமுக கூட்டணிக்கு மட்டும் 12 முதல் 20 சதம் ஓட்டுக்கள் பதிவாகும் என்கிறது தான் பொதுவான கணிப்பு.
கருத்துகள்