சீமான்
தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில், ‘அவருடைய அசையும் சொத்தும் 31,06,500 ரூபாயும், அசையா சொத்து ஏதுமில்லை என்றும் தெரிவித்துள்ளார். அவருடைய மனைவிக்கு அசையும் சொத்து 63,25,031 ரூபாயும், அசையா சொத்து 25,30,000 ரூபாயும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் 65,500 ரூபாய் மட்டுமே வருமானம் வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 2019-2020-ஆம் ஆண்டு வருமானம் 1,000 ரூபாய் மட்டுமே என்று சீமான் குறிப்பிட்டுள்ளார். இவர் இனவாதம் பேசுகிறார், சர்வாதிகாரப் போக்குடன் நடந்துகொள்கிறார், தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரிக்கிறார், இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்துகளை முன்வைக்கிறார், பா.ஜ.க.வின் பி டீமாகச் செயல்படுகிறார்’... போன்ற எண்ணற்ற குற்றச்சாட்டுகள் மாற்றுக்கட்சி யினராலும், அவரது கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களாலும் இவர்மீது சுமத்தப்படுகின்றன. சீமான் 1966 ல் சிவகங்கை மாவட்ட, இளையான்குடி வட்டத்தில் அரனையூரில் பிறந்தார். செந்தமிழன் நாடார் அன்னம்மாள் மகனாவர்.பொருளாதார இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். காலம்சென்ற முன்னாள் சபாநாயகர் கா காளிமுத்துவுக்கும் அவரது இரண்டாவது மனைவிக்கும் மகளான கயல்விழியை திருமணம் தமிழ் முறைப்படி உலகத் தமிழர் பேரவை தலைவர் பழ நெடுமாறன் தலைமையில் சென்னை ஒய்.எம்.சி.ஏ திடலில் நடைபெற்றது.பல்வேறு நபர்களின் தகவல் பதிவிலிருந்து வரும் கருத்துக்களை நாம் புறந்தள்ள முடியாது. மணல் மாஃபியா வைகுண்ட ராஜன் ஆதரவு தொலைக்காட்சி சீயான் எனும் சைமனை தூக்கி வைத்து கொண்டாட நாம் நமது வாசகர்களுக்கு சில உண்மைகள் தெரிவித்தே ஆக வேண்டும். உலா வரும் தகவல் உண்மை எனில் அவர் பதில் சொல்ல வேண்டிய நேரமும் இது தான் இனி அந்தத் தகவல் பார்க்கலாம். சீமானின் சொத்து மதிப்பு விபரம். நெல்லை கோலா பாக்டரியில் 7%ஷேர். விவி மினெரல்ஸ் நிறுவனத்தில் மாதம் 1.5 லட்ச ரூபாய் பணம். சென்னை ECR சாலையில் 8 கிவுண்ட் நிலம். .பூந்தமல்லி தேசிய நெடுஞ்சாலையில் தங்கை பெயரில் 40 ஏக்கர் நிலம். ஆவடியில் 6 ஏக்கர் நிலம் .பெங்களூரில் 4 மாடி அபார்ட்மெண்ட் வீடுகள். சென்னையில் பிரபல கிருத்துவப் பள்ளி ஒன்றில் நிர்வாக இயக்குனர் சீமான் தம்பி. இலங்கையில் பவர் பிளான்ட் தொழில். விருகம்பாக்கத்தில் தம்பி பெயரில் வீடு மற்றும் டிரஸ்டி பெயரில் சர்ச். மற்றொரு சகோதரி பெயரில் நெல்லையில் 80 ஏக்கர் நிலம். கோவையில் தங்கை கணவன் பெயரில் 9 ஏக்கர் நிலம். மதுரை பைபாஸிசில் தென்னந்தோப்பு. நெல்லை குமரி மாவட்ட நாடார் முக்கிய சங்கத் தலைவர்கள் மாதம் தோறும் சிறந்த கவனிப்பு. ஸ்டெர்லைட் ஆலையில் கட்சி வளர்ச்சி நிதியாக இதுவரை மூன்று தவணைகளில் ரூபாய் 1.43 கோடி வரை வாங்கியது. பழனி அருகே தென்னந்தோப்பு. ஊட்டியில் எஸ்டேட் தொழில். இது போக ஈழத்தமிழரிடம் வசூல் வேட்டை, மாதம் தோறும் பெரிய கம்பெனிகளிடம் இருந்து ஒரு தொகை. ஒரு சாதாரண எளிய பிள்ளையாக இருப்பவரின் சொத்து இவ்வளவு தான்.
கடைசியில் இளையான்குடி அருகில்அரணையூரில் ஆறு கோடி செலவில் 6000 சதுர அடியில் பெரியதா ஒரு வீடு. வாடகை வீட்டில் குடியிருந்தபோது வாடகையே கொடுக்க முடியாமல் பார்ப்பவர்களிடம் எல்லாம் கையேந்தி பணம் வாங்கியவரிடம் இவ்வளவு சொத்து மதிப்பு எப்படி வந்தது? என்ற கேள்வியுடன் நீள்கிறது செய்தி
இதைப் பற்றி செய்தியாளர் ஒருவர் கேள்வி கேட்க.. "ஒரு தமிழ்ப் பிள்ளை சொத்து சேக்குறதுக்கு உரிமை இல்லையா தம்பி?" என்று பதிலளித்தார்
இன்னும் ஒரு எம்சி, எம்எல்ஏ, எம்.பி. என்ற நிலை கூட இல்லை. அதற்குள் இத்தனை கோடிகள் சொத்து என்றால். இவரது மாமனார் முன்னால் அமைச்சர் வேறு அவர் அதிகம் சேர்க்காதவர்.
இவரை நம்பி ஏமாந்ந்து சோற்றுக்கே திண்டாடும் தும்பிகள் நிலை தான் பரிதாபம். சீமானின் அரசியல் என்பது..
1982- 1985 திமுக 1986- 1988 அதிமுக 1988 - 1991 காங்கிரஸ 1992 - 1996 கம்யூனிஸ்ட் 1996 - 2004 திமுக 2005 - 2007 தேமுதிக (அப்போது விஜயகாந்த் தமிழன் )2007 - 2009 மதிமுக ஆதரவு 2009 - 2011 அதிமுக ஆதரவு 2012 - நாம் தமிழர் அதுவும் திருவாரூர் தங்கத் தமிழன் வைத்திருந்த அமைப்பு (பெரியார் வழி) 2014 -நாம் தமிழர் இவர் ( இலங்கை பிரபாகரன் வழி )2015 - நாம் தமிழர் (வீரத்தமிழர் முன்னணி) 2016 முதல் முப்பாட்டன் முருகன் வழி இப்படி நாளொரு கருத்துநாம் தமிழர் கட்சி சீமானின் கட்சி அல்ல அதை முதலில் பதிவு செய்தவர் ஆதித்தனார் பின் திருவாரூர்காரர் நாம் தமிழர் இரவல் கட்சி நடத்தி பின் இவ்வளவு சொத்து சீமானுக்கு எப்படி
இத்தனை வேட்பாளர் நிறுத்தவும் இவர் பரம்பரை கோடீஸ்வரரோ அல்ல இவர் பின்னர் உள்ள நபர்களின் பினாமியாகவே அணைவரும் பார்க்கும் நிலை இந்த நபர் எப்படி ஊழல் ஒழிக்க முடியும். இதுவே பலரது வினா.
கருத்துகள்