ஹிந்தியில் பாடல் ஒலிக்கக் கோலாட்டம் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, கோயமுத்தூர் தெற்கு பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து கோலாட்டம் ஆடி வட இந்திய ஸ்டைலில் அசத்தியுள்ளார். இது தமிழக மக்கள் அரசியலில் புதுமையானதாகும்
கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். இதே தொகுதியில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் தன்னை பெரிய தலைவர் போல காட்டிய விதம் நடிகர் கமல்ஹாசன் திமுக அமமுக உள்ளிட்ட கட்சிகளைவிட குறைந்த வாக்குகள் தான் அவர் பெற முடியும் என்ற நிலையில் அவர் அதீதமான கற்பனை காரணமாக தனது நிலையை உனராமல் போட்டியிட திமுகவை விட வானதி சீனிவாசனை எப்படியாவது வெற்றி பெற வைத்து விட வேண்டும் என்பதற்காக மத்திய பாஜக தலைவர்கள் கோவை நோக்கி வரிசை கட்டிப் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.
வானதி சீனிவாசனும் தனது பிரச்சாரத்தை அடுத்தடுத்த நிலை மாற்றியுள்ளார். மாட்டு வண்டி ஓட்டிச் செல்வது, பேட்மிட்டன் ஆடுவது, கீரைக்காரிகளுடன் செல்பி எடுப்பது என்று மக்களோடு மக்களாக கலந்து பழக்கம் உள்ளது போல் தற்போது காட்ட வாக்கு சேகரித்து வருகிற நிலையில்தான், கோவை தெற்கு தொகுதிக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி வந்திருந்தார் ஒரு அரங்கத்தில், ஸ்மிருதி இராணி கோலாட்டம் ஆட, வானதி சீனிவாசனும் அவருடன் சேர்ந்து கோலாட்டம் ஆடினர். கூட சில ஹிந்தியில் பேசும் வட இந்தியப் பெண்களும் சுமார் இரண்டு சுற்றுகள் சுற்றி வந்து கோலாட்டம் போட்ட பின்னணியில் ஹிந்திப் பாட்டு பாடிக் கொண்டிருந்தது. சுற்றியிருந்த தொண்டர்கள் கரகோஷம் எழுப்பி உற்சாகப்படுத்தினர்.
இந்த நடனத்தை குஜராத்தின் பிரசித்தி பெற்ற தாண்டியா நடனம் என்று குறிப்பிட்ட ஏ.என்.ஐ செய்தி நிறுவனம். பாஜக தொண்டர்கள் இதை கோலாட்டம் என்கிறார்கள்.
அது ஒரு பக்கம் என்றால்.. ஹிந்தி மொழியில் பாடலை பாட விட்டு எப்படி ஆடலாம் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக, வட மாநில பெண்கள் பலரும் கோவை தெற்கு தொகுதியில் பிரச்சாரம் செய்வது இப்போது அவர் அகில இந்திய மகளிர் பொறுப்பில் உள்ளது தான் காரணம்.
கருத்துகள்