முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மிகவும் சக்தி வாய்ந்த ஒரு கிலோ போதைப்பொருள் பறிமுதல் - இருவர் கைது

மிகவும் சக்தி வாய்ந்த ஒரு கிலோ போதைப்பொருள் பறிமுதல் - இருவர் கைது போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவின் சென்னை மண்டல அதிகாரிகள் சென்னை கிண்டியில் உள்ள கொரியர் அலுவலகத்தில் இருந்து 0.990 கிலோ அம்பேட்டமைனை 2021 ஏப்ரல் 24 அன்று பறிமுதல் செய்தனர். கிரிக்கெட் கையுறைகள் மற்றும் தொடைக் கவசங்களை கொண்ட பார்சலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது. ஆஸ்திரேலியாவில் உள்ள ஆக்லாந்திற்கு இந்த பார்சல் செல்லவிருந்தது. போதைப்பொருளை பரிசோதித்த போது அது மிக தீவிர அம்பேட்டமைன் என தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, சென்னை மண்டல இயக்குநர் திரு அமித் கவாதே மேற்பார்வையில் எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கையின் காரணமாக சென்னையை சேர்ந்த அஷ்வின் டி மற்றும் சுரேந்திரன் சி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கின் வலைப்பின்னலை கண்டறிவதற்காக மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது. போதைப்பொருள் தடுப்பு பிரிவின் சென்னை மண்டல இயக்குநர் திரு அமித் கவாதே, கண்காணிப்பாளர் திரு ஆர் பிரகாஷ் மற்றும் இதர அலுவலர்களை அவர்களது அர்ப்பணிப்பு மிக்க முயற்சிகளுக

இரஷ்ய அதிபர் திரு புடினுடன் பிரதமர் தொலைபேசி உரையாடல்

பிரதமர் அலுவலகம் இரஷ்ய அதிபர் திரு புடினுடன் பிரதமர் தொலைபேசி உரையாடல் ரஷிய அதிபர் மேன்மைமிகு விளாடிமிர் புடினுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொலைபேசி மூலம் உரையாடினார். தற்போதைய கொவிட்-19 பெருந்தொற்று நிலைமை குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர். இந்திய அரசு மற்றும் மக்களுக்கு தமது ஆதரவை தெரிவித்த ரஷ்ய அதிபர், தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் ரஷியா செய்யும் என்று கூறினார். அதிபர் திரு புடினுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் திரு மோடி, இந்தியாவுக்கான ரஷியாவின் சிறப்பான ஆதரவு இரு நாடுகளின் உறவுக்கான அடையாளம் என்றார். சர்வதேச பெருந்தொற்றை எதிர்த்து போராடுவதில் இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர். ஸ்புட்னிக்-வி தடுப்பு மருந்தின் அவசர கால பயன்பாட்டுக்கு இந்தியாவில் அனுமதி அளிக்கப்பட்டதற்கு அதிபர் புடின் பாராட்டு தெரிவித்தார். இந்தியா, ரஷியா மற்றும் உலக நாடுகளில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ரஷிய தடுப்பு மருந்து பயன்படுத்தப்படும் என்றும் தலைவர்கள் தெரிவித்தனர். இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் சிறப்பான மற்றும் பாரம்பரியம் மிக்க உறவின் பின்னணியில்

கொவிட் மேலாண்மைக்கு ராணுவத்தின் தயார் நிலை குறித்து பிரதமர் ஆய்வு

பிரதமர் அலுவலகம்  கொவிட் மேலாண்மைக்கு ராணுவத்தின் தயார் நிலை குறித்து பிரதமர் ஆய்வு ராணுவ தளபதி எம்எம் நரவானே பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்து பேசினார். கொவிட் மேலாண்மை நடவடிக்கையில் உதவ, ராணுவம் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் குறித்து அவர்கள் ஆலோசித்தனர். பல மாநிலங்களுக்கு, ராணுவ மருத்துவ குழுவினரின் சேவை கிடைக்கச் செய்துள்ளதை பிரதமரிடம் ஜெனரல் எம்எம் நரவானே தெரிவித்தார். நாட்டின் பல பகுதிகளில், தற்காலிக மருத்துவமனைகளை ராணுவம் அமைத்துள்ளதாக பிரதமரிடம் அவர் விளக்கினார்.  சாத்தியமான இடங்களில் ராணுவ மருத்துவமனைகளை பொது மக்களுக்கு திறந்துள்ளதாக பிரதமரிடம் ஜெனரல் எம்எம் நரவானே எடுத்துக் கூறினார். பொதுமக்கள் அருகில் உள்ள ராணுவ மருத்துவமனைகளை அணுகலாம் என அவர் மேலும் தெரிவித்தார. இறக்குமதி செய்யப்படும் ஆக்ஸிஜன் டேங்கர்கள் மற்றும் வாகனங்களை நிர்வகிப்பதற்கு ராணுவம் தனது படையினரை அனுப்பி உதவி வருவதாகவும் பிரதமரிடம் ஜெனரல் எம்எம் நரவானே தெரிவித்தார்.

பல்சேட்டிங் உணர்திறன் சாதனம் அடிப்படையிலான மின் கடத்துத்திறன் மீட்டர்”, கல்பாக்கம்.அணு ஆராய்ச்சி மையம்

இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் “பல்சேட்டிங் உணர்திறன் சாதனம் அடிப்படையிலான மின் கடத்துத்திறன் மீட்டர்”,   கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் (ஐஜிசிஏஆர்), எலெக்ட்ரானிக்ஸ் & இன்ஸ்ட்ரூமென்டேஷன் குழுமத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பயன்பாடு, பகுப்பாய்வு மற்றும் தரக் கட்டுப்பாட்டுக்கான வேதியியல் ஆய்வகங்களில் மட்டும் அல்லாது, இது நீர்நிலைக் கரைசலின் மின் கடத்துத்திறனின் நிகழ்நேர கண்காணிப்புக்கு, தொழில்துறை மற்றும் களப் பயன்பாடுகளில் பொருத்தமானது. இந்த சாதனத்தின் செயல்திறன் ஐஜிசிஏஆரில் உள்ள பல பயன்பாடுகளில் சரிபார்க்கப்பட்டது. கடுமையான சூழல்களில் கூட நன்கு செயல்படும் திறன் வாய்ந்தது. இந்த தொழில்நுட்பத்தை இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் இன்று (29.4.2021) பெங்களூரில் உள்ள சர்வ் எக்ஸ்எல் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு பகிர்ந்தது. இன்குபேஷன் சென்டர், இந்நிறுவனத்துடன் ஏற்பாடு செய்த ஆன்லைன் சந்திப்பில், அணு ஆராய்ச்சி மைய இயக்குநர் டாக்டர் அருண்குமார் பாதுரி, தொழில்நுட்ப உரிம ஒப்பந்தம் மற்றும் தொழில்நுட்ப ஆவணங்களை சர்வ் எக்ஸ்எல் எண்டர்பிரைசஸ் உரிமையாளர் திரு விக்ரம

மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் திரு. சோலி சொராப்ஜி மறைவிற்கு குடியரசுத் துணை தலைவர் இரங்கல்

  குடியரசுத் துணைத் தலைவர் செயலகம் மத்திய அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் திரு. சோலி சொராப்ஜி மறைவிற்கு குடியரசுத் துணை தலைவர் இரங்கல் கொவிட் காரணமாக இன்று காலை உயிரிழந்த முன்னாள் தலைமை வழக்கறிஞர் திரு. சோலி சொராப்ஜிக்கு குடியரசுத் துணை தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு புகழஞ்சலி செலுத்தினார். சட்டத்துறையின் தலைசிறந்த வல்லுநர் என்று திரு சொராப்ஜியை வர்ணித்த குடியரசுத் துணை தலைவர், சட்டம் மற்றும் நீதித்துறை சார்ந்த அனைத்து விஷயங்களிலும் அவர் ஒரு தகவல் களஞ்சியமாக விளங்கினார் என்றார். மனித உரிமைப் போராளியாக திகழ்ந்த அவர், அவரது பணியின் மூலம் இந்தியாவுக்கு சர்வதேச புகழை தேடித் தந்தார் உண்மை மற்றும் நேர்மையின் அடையாளமாக விளங்கிய முன்னாள் தலைமை வழக்கறிஞரை தாம் எப்போதுமே மிகவும் மதித்ததாக திரு நாயுடு கூறினார். திரு சொராப்ஜியும் தம்மிடம் மிகவும் அன்பு செலுத்தியதாக கூறிய குடியரசுத் துணை தலைவர், அவரது மறைவின் மூலம் தலைசிறந்த சட்ட வல்லுனரை நாடு இழந்திருப்பதாகவும் அவரது மறைவு நீதித்துறையில் ஈடுசெய்ய முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் கூறினார். திரு சொராப்ஜியின் மனைவி மற்றும் குடும்ப உறுப்பி

இரயில்வே சாராத நோயாளிகளுக்கு கொவிட் பரிசோதனை கட்டணம் மற்றும்..உணவு கட்டணம் தள்ளுபடி

இரயில்வே அமைச்சகம் ரயில்வே சாராத நோயாளிகளுக்கு கொவிட் பரிசோதனை கட்டணம் மற்றும் கொவிட் தொடர்பான மருத்துவமனை சிகிச்சையின் போது வழங்கப்படும் உணவு கட்டணத்தை ரயில்வே தள்ளுபடி செய்தது ரயில்வே சாராத நோயாளிகளுக்கு கொவிட் பரிசோதனை கட்டணம் மற்றும் கொவிட் தொடர்பான மருத்துவமனை சிகிச்சையின் போது வழங்கப்படும் உணவு கட்டணத்தை இந்திய ரயில்வே தள்ளுபடி செய்தது. 'அரசின் அனைத்தும்'  எனும் அணுகுமுறையை இந்திய அரசு பின்பற்றி வருவது நினைவிருக்கலாம். இதன் மூலம், கொவிட் பெருந்தொற்றை எதிர்த்துப் போராடுவதில் அனைத்து அமைச்சகங்கள்/ துறைகள் ஒன்றாக பணியாற்றுகின்றன. இதன் தொடர்ச்சியாக, முகாம்கள் மற்றும் குழு அமைப்புகளில் ரயில்வே சாராதவர்களுக்கு ஆர்டிபிசிஆர் / துரித ஆண்டிஜன் பரிசோதனைக்கான கட்டணத்தை ரத்து செய்ய ரயில்வே வாரியம் முடிவெடுத்துள்ளது. மேலும், கொவிட் தொடர்பான மருத்துவமனை சிகிச்சையின் போது வழங்கப்படும் உணவு கட்டணத்தையும் ரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. கொவிட் பெருந்தொற்றுக்கு எதிரான போரில் ரயில்வே முன்னணியில் இருந்து தனது முழு பலத்துடன் போராடி வருகிறது. கொவிட் பராமரிப்பு பெட்டிகள், ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ

கொவிட்-19 நிலைமையை எதிர்கொள்வதற்கு கடற்படையின் மேற்கு பிரிவு தயாராக உள்ளது

பாதுகாப்பு அமைச்சகம் கொவிட்-19 நிலைமையை எதிர்கொள்வதற்காக உள்ளூர் நிர்வாகங்களுக்கு உதவ கடற்படையின் மேற்கு பிரிவு தயாராக உள்ளது அதிகரித்து வரும் கொவிட்-19 பாதிப்புகளின் காரணமாக மருத்துவமனை வசதிகள் மற்றும் ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பி வரும் நிலையில், இந்திய கடற்படையின் மேற்கு பிரிவின் கீழ் உள்ள 3 மருத்துவமனைgalaana- ஐஎன்எச்எஸ் ஜீவந்தி, கோவா; ஐஎன்எச்எஸ் பதஞ்சலி, கார்வார்; மற்றும் ஐஎன்எச்எஸ் சந்தானி, மும்பை ஆகியவை உள்ளூர் நிர்வாகத்தின் பயன்பாட்டிற்காக சில கொவிட் படுக்கைகளை தயார் நிலையில் வைத்துள்ளன. இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லாமல் இருப்பதற்காக மும்பையில் உள்ள கடற்படை வளாகங்களில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. உள்ளூர் நிர்வாகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கும் கடற்படை அதிகாரிகள், தேவை ஏற்படும் பட்சத்தில் எந்த விதமான கொவிட் அவசரகால உதவியையும் செய்யத் தயாராக இருப்பதோடு, அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர். கார்வாரில் உள்ள கடற்படை அதிகாரிகளும் இதேபோன்று விரிவான வசதிகளை செய்துள்ளதோடு, சுமார் 1,500 இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அத்தியாவசிய பொருட

வானொலியில் வாக்கு எண்ணிக்கை பற்றிய ஐந்து நிமிட சிறப்பு செய்தி அறிக்கைகளை, தொடர்ச்சியாக ஒலிபரப்பாகும்.

வாக்கு எண்ணிக்கை குறித்து சிறப்பு அறிக்கை தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே இரண்டாம் தேதியன்று, சென்னை அகில இந்திய வானொலியின் மாநில செய்திப்பிரிவு, வாக்கு எண்ணிக்கை பற்றிய ஐந்து நிமிட சிறப்பு செய்தி அறிக்கைகளை, தொடர்ச்சியாக ஒலிபரப்ப உள்ளது. இந்த செய்திகள் மாநிலம் தழுவிய எஃப்எம் ரெயின்போ பண்பலை மற்றும் சென்னை-ஒன்று மத்திய அலைவரிசை நெட்வொர்க்கில் ஒலிபரப்பாகும். காலை, மணி எட்டு முப்பதிலிருந்து மாலை ஆறு மணிவரை ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கு ஒருமுறை வாக்கு எண்ணிக்கை பற்றிய சிறப்பு செய்திகள் ஒலிபரப்பாகும். மாலை ஏழு மணியிலிருந்து இரவு 11 மணிவரை இந்த சிறப்புச் செய்திகள் ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை ஒலிபரப்பாகும். சென்னை-1 மத்திய அலைவரிசை மற்றும் அதன் மாநில நெட்வொர்க்கில் வழக்கமாக ஒலிபரப்பாகிவரும் மாலை மணி ஆறு முப்பது மாநிலச் செய்திகள், இரவு மணி ஏழு பதினைந்து ஆகாசவாணி தமிழ்ச் செய்திகள், பிற்பகல் மணி ஒன்று 45-க்கு திருச்சியிலிருந்து ஒலிபரப்பப்படும் மாநிலச்செய்திகள் ஆகியவற்றின் ஒலிபரப்பு நேரம், பத்து நிமிடங்களிலிருந்து பதினைந்து நிமிடங்களாக நீட்டிக்கப்படுகின்றன. இதுதவிர, தில்லிய

ஆக்ஸிஜன் செறிவூட்டல் கருவியின் உற்பத்தியை அதிகரிக்க, நிறுவனங்களுக்கு தொழில்நுட்பத்தை பரிமாற்றம் செய்தது சிஎஸ்ஐஆர்- சிஎம்இஆர்

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை ஆக்ஸிஜன் செறிவூட்டல் கருவியின் உற்பத்தியை அதிகரிக்க, நிறுவனங்களுக்கு தொழில்நுட்பத்தை பரிமாற்றம் செய்தது சிஎஸ்ஐஆர்-சிஎம்இஆர் துர்காபூரில் உள்ள அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் -  மத்திய இயந்திர பொறியியல் ஆராய்ச்சி மையம் (சிஎஸ்ஐஆர்-சிஎம்இஆர்ஐ), தான் உருவாக்கிய ஆக்ஸிஜன் செறிவூட்டல் கருவி  தொழில்நுட்பத்தை இன்று காணொலி காட்சி மூலம்,  சிஎஸ்ஐஆர் -சிஎம்இஆர்ஐ இயக்குனர் பேராசிரியர் டாக்டர் ஹரிஸ் ஹிரானி முன்னிலையில்  ராஜ்கோட்டில் உள்ள ஜோதி சிஎன்சி ஆட்டோமேஷன் நிறுவனம் மற்றும் குருகிராமில் உள்ள கிரிட் இன்ஜினியர்ஸ் நிறுவனம் ஆகியவற்றுக்கு பரிமாற்றம் செய்தது. தற்போதை கொவிட் தொற்று சூழலில், குறிப்பாக ஆக்ஸிஜன் விநியோக உத்திகளை, மேம்படுத்துவதன் அவசியத்தை பேராசிரியர் ஹிரானி குறிப்பிட்டார்.  சராரியாக, ஒருவருக்கு 5-20 எல்பிஎம் காற்று, குறிப்பிட்ட சதவீத ஆக்ஸிஜனுடன் தேவை.  சிஎஸ்ஐஆர்-சிஎம்இஆர்ஐ உருவாக்கிய தொழில்நுட்பம், வீட்டிலேயே ஆக்ஸிஜன் செறிவூட்டலை வழங்குகிறது. மிகப் பெரிய ஆக்ஸிஜன் சிலிண்டர்களை சார்ந்திருக்க தேவையில்லை. சிஎஸ்ஐஆர்-சிஎம்இஆர்ஐ உருவாக்கிய ஆக்ஸிஜன் ச

டில்லி கன்டோன்மென்ட்டில் சிறப்பு கொவிட் மருத்துவமனையை நிறுவியது இந்திய ராணுவம்

பாதுகாப்பு அமைச்சகம் கொவிட்டால் பாதிக்கப்பட்ட முன்னாள் வீரர்களின் நலனுக்கு இந்திய ராணுவம் உறுதி பூண்டுள்ளது முன்னாள் வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோரிடையே கொவிட் பாதிப்புகள் அதிகமாகி வரும் நிலையில், தன்னுடைய மருத்துவ சிகிச்சை திறன்களை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை இந்திய ராணுவம் மேற்கொண்டு  வருகிறது. இந்த கடினமான காலகட்டத்தில்  நம்முடைய முன்னாள் வீரர்களுக்கு கொவிட் பராமரிப்பு மற்றும் சிகிச்சையை அளிக்க உறுதி பூண்டுள்ள இந்திய ராணுவம், எந்தவிதமான உதவிக்கும்  அருகில் உள்ள ராணுவ மையத்தை அவர்கள் தொடர்பு கொள்ளலாம் என்று உறுதியளிக்கிறது. முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோருக்கு தொடர்ந்து ஆதரவு கிடைப்பதை ஒருங்கிணைப்பதற்காக முன்னாள் படைவீரர்கள் பங்களிப்பு சுகாதார திட்டம் மற்றும் மண்டல மற்றும் துணை மண்டல தலைமையகங்களுடன் இந்திய ராணுவ முன்னாள் படைவீரர்கள் இயக்குநரகம் செயலாற்றி வருகிறது. கொவிட்டால் பாதிக்கப்பட்ட முன்னாள் படைவீரர்கள் மருத்துவ ஆலோசனை மற்றும் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதி பெறுவதற்கு வழிகாட்டுதல்களும், உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. தில்லியில் உள்ள பேஸ் மருத்துவமனை

சட்டீஸ்கர் உயர்நீதிமன்ற நீதிபதியாக திருமதி விம்லா சிங் கபூர் நியமனம்.நீதிபதி சரத் குமார் குப்தா பதவி விலகினார்

சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் சட்டீஸ்கர் உயர்நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதி சரத் குமார் குப்தா பதவி விலகினார் சட்டீஸ்கர் உயர்நீதிமன்ற நீதிபதி சரத்குமார் குப்தா, 2021 மார்ச் 31ம் தேதி முதல் பதவி விலகியுள்ளார்.  இது தொடர்பான அறிவிப்பை, மத்திய சட்டம்,  நீதி அமைச்சகத்தின் நீதித்துறை வெளியிட்டுள்ளது.  நீதிபதி திரு சரத் குமார் குப்தா, பி.எஸ்சி., எல்எல்.பி, கடந்த 1985ம் ஆண்டு நீதித்துறையில் இணைந்தார். பல இடங்களில் அவர் நீதித்துறை அதிகாரியாக பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார். அவர் சட்டீஸ்கர்  உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக கடந்த 2017ம் ஆண்டு நியமிக்கப்பட்டார் மற்றும் நிரந்தர நீதிபதியாக கடந்த 2019ம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.  சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவல் சட்டீஸ்கர் உயர்நீதிமன்ற நீதிபதியாக திருமதி விம்லா சிங் கபூர் நியமனம் சட்டீஸ்கர் உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதி திருமதி விம்லா சிங் கபூரை, அதே நீதிமன்றத்தில் நீதிபதியாக குடியரசுத் தலைவர்  திரு ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார்.  அவர் பதவி ஏற்கும் நாளில் இருந்து இது அமலுக்கு வரும். இது தொடர்பான அறிவிப்பை ம

பெங்களூர் நகரில் 3000 கொரோனோ நோயாளிகள் மாயமா பீதியைக் கிளப்பிய கர்நாடக அமைச்சர்

கர்நாடக மாநிலத்தில் பெங்களூர் நகரில் 3000  கொரோனோ நோயாளிகள் மாயமா பீதியைக் கிளப்பிய கர்நாடக அமைச்சர் 24 மணிநேரத்தில் 39,047 ஆயிரம் பேருக்கு பாதிப்பு.. தொற்றுக்கு 229 பேர் உயிரிழப்புகள் 6 லட்சம் வடநாட்டு தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு பயணம். கர்நாடகாவில் நாளுக்கு நாள் கொரோனோ தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்து வருகிறது. கடந்த பல நாட்களாக 25 ஆயிரத்தைக் கடந்துள்ளது,  கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 39.047 பேர் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சைப் பலனின்றி 229 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லி, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களைப் போல, கர்நாடகாவையும் கொரோனோவின் 2 வது அலை மிரட்டிக் கொண்டிருக்கிறது. பெங்களுரில் மட்டும் 22,596 பேர் கொரோனோ தொற்றுக்கு ஆளாகியுள்ள நிலையில், 137 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இது மொத்த உயிரிழப்பில் பாதிக்கு மேற்பட்டவர்கள் பெங்களுரூவைத் சேர்ந்தவர்கள் என்பதுதான். இதைவிட அதிர்ச்சியான ஒரு விஷயத்தை கர்நாடக வருவாய் துறை அமைச்சர் அசோக் கிளப்பியுள்ளார். கொரோனோ பாதிப்பு தொடர்பாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட தில் 3000 பேருக்கு பாதிப்பு இ

ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு பி எஸ் ஜி மருத்துவக் கல்லூரி வாழ்நாள் மருத்துவ உதவி’

 ‘ஒரு ரூபாய் இட்லி பாட்டி’ கோயம்புத்தூர் மக்களால் அன்பாக அறியப்படுவது, சமூகத்திற்கு சேவை செய்ய விரும்பும் எல்லா இடங்களிலும் உன்னதமான இதயங்களுக்கு ஒரு உத்வேகம். இந்த 85 வயதான ஆக்டோஜெனியரின் பரோபகார முயற்சிகளுக்கு உதவுவதற்காக, பி.எஸ்.ஜி & சன்ஸ் அறக்கட்டளைகளின் நிர்வாக அறங்காவலர் ஸ்ரீ எல். கோபாலகிருஷ்ணன், பி.எஸ்.ஜி இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸின் வாழ்நாள் மருத்துவ உதவியை ஸ்ரீ கமலதலுக்கு வழங்க முன்வந்துள்ளார். வருங்கால மேலாளர்கள் சமூக ரீதியாக உணர்திறன் மிக்கவர்களாகவும், சமூகத்தின் மீது பொறுப்புள்ளவர்களாகவும் இருக்க ஒரு இடத்தை வழங்குவதற்காக, பி.எஸ்.ஜி இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் அவர்களின் பாடத்திட்டத்தில் ‘மேலாளர்களுக்கான சமூக உணர்திறன்’ என்ற பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கோயம்புத்தூரின் ஒரு ரூபாய் இட்லியின் பின்னால் உள்ள பரபரப்பை தனிப்பட்ட முறையில் நேர் காணல் செய்து தகவல்

அற்பக் காரணங்களுக்காக வழக்குத் தொடரக்கூடாது”புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமிக்கு நீதிமன்றம் அறிவுரை

 “அற்பக் காரணங்களுக்காக வழக்குத் தொடரக்கூடாது”புதிய  தமிழகம் கட்சி கிருஷ்ணசாமி  வழக்கைத் தள்ளுபடி செய்தது நீதிமன்றம் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் பணப்பட்டுவாடா செய்ததால் வாக்கு எண்ணிக்கைக்குத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது  இன்று 30 ஏப்ரல் 2021  லவ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கிருஷ்ணசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பணப்பட்டுவாடா தொடர்பாக விசாரிப்பதற்காக உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும். தற்போதைய நிலையில் வாக்கு எண்ணிக்கைக்குத் தடை விதிக்க வேண்டும்" எனக் கோரிக்கை வைத்தார்.  அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், " அற்பக் காரணங்களுக்காக வழக்குத் தொடரக்கூடாது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் நீங்கள் புகார் அளித்துள்ளீர்கள், அவர்கள் தான் முடிவெடுக்க வேண்டும். மேலும், உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைப்பதற்கு உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை மே 2 ஆம் தேத

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் அஇஅதிமுக ஆட்சி அதிகாரத்தை இழக்கும்

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு களின் கூற்றுப்படி தமிழகத்தில் அமமுக பிரிக்கும் வாக்கு வங்கியால் அஇஅதிமுக ஆட்சி அதிகாரத்தை இழக்கும் என்பது ஏற்கனவே பல அரசியல் அறிந்த பத்திரிகை சாணக்கியர்கள் கணித்த போதும் எக்ஸிட்ஃபோல் முடிவுகள் வரும் வரை காத்திருக்க வேண்டிய நிலை அது தற்போது தெளிவாகிறது.  தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக் கிழமை நடைபெற உள்ளது. தமிழகத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகள் யார் ஆட்சிக் கட்டிலில் அமரப்போகிறார்கள் என்பதற்கு மக்கள் அளித்த தீர்ப்பை அன்றைய தினமே பார்த்துவிடலாம். தேர்தலுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் சுமார் ஒரு மாத இடைவெளி இருந்த நிலையில் இன்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு அல்லது வாக்கு கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன தமிழகத்தில் 234 தொகுதிகளில் அ.தி.மு.க., கூட்டணி 56 முதல் 68 தொகுதிகளிலும், தி.மு.க, கூட்டணி 160- 170 தொகுதிகளிலும் அமமுக 6 தொகுதிகளிலும் வெற்றிபெறும் கேரளாவில் 140 தொகுதிகளில் இடது சாரிகள் கூட்டணி 72 முதல் 80 தொகுதிகளிலும், காங்கிரஸ்., கூட்டணி 58 முதல் 64 தொகுதிகளிலும், பா.ஜ.,க 5 தொகுதிகளிலும் வெற்றி பெறும். மேற்குவங்கத்தி

ரெம்டெசிவிர் ஊசி மருந்து விற்பனையை மாவட்ட அளவிலும் விரிவாக வேண்டும்

ரெம்டெசிவிர் ஊசி மருந்து விற்பனையை மாவட்ட அளவிலும் தொடங்க வேண்டும்!  தமிழ்நாட்டில் ரெம்டெசிவிர் ஊசி மருந்துக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவும் சூழலில், தேவைப்படும்  கொரோனா நோயாளிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், தமிழக அரசே  அந்த மருந்தை நேரடியாக விற்பனை செய்யத் தொடங்கியிருக்கிறது. அதேபோல், 18 வயது நிறைவடைந்தோருக்கு தடையின்றி தடுப்பூசி போடுவதற்காக ஒன்றரை கோடி டோஸ் தடுப்பூசிகளை நேரடியாக கொள்முதல் செய்யவும் அரசு தீர்மானித்திருக்கிறது. கொரோனா தடுப்புக்கான இந்நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை.  கொரோனா வைரஸ் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, நோயின் தீவிரத்தைக் குறைப்பதற்காக ரெம்டெசிவிர் ஊசி மருந்து செலுத்தப்படுகிறது. கொரோனா இரண்டாவது அலையில்  லட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து ரெம்டெசிவிர் மருந்துக்கான தேவை பல மடங்கு அதிகரித்திருக்கிறது. அனைத்து மக்களுக்கும் இந்த மருந்து கிடைக்க வேண்டும் என்பதற்காக   இந்த மருந்தின் விலை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு ஆணையிட்டதைத் தொடர்ந்து ரூ.5400 வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு டோஸ் ரெம்டெசிவிர் மருந்தின் விலை ரூ.899 முதல் ரூ.3490

வாக்கு எண்ணிக்கைக்கு முதல்நாளில் முழு ஊரடங்கை அறிவிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை

முழு ஊரடங்குக்கு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை வாக்கு எண்ணிக்கைக்கு முதல்நாளில் முழு ஊரடங்கை அறிவிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. தமிழகத்தில் நிலவும் கொரோனா பரவவல் சூழ்நிலையை கருதி, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு விசாரணையை நடத்தியது அதில் தமிழக அரசுக்கு சில பரிந்துரைகளை அளித்த சென்னை உயர்நீதிமன்றம், ஏற்கெனவே வாக்கு எண்ணிக்கை நாளான மே மாதம் 2 ஆம் தேதி முழு ஊரடங்கு இருப்பதாகவும், வாக்கு எண்ணிக்கைக்கு முந்தைய நாளான மே ஒன்றாம் தேதியும் முழு ஊரடங்கை அறிவிக்கலாமென்றும் கூறியது மே மாதம் ஒன்றாம் தேதி அமலாகும் முழு ஊரடங்கு குறித்து ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதியே அறிவிக்கலாம் என்றும், வாக்கு எண்ணிக்கை நாளில் வாக்கு எண்ணிக்கை  தொடர்பான வாகனங்களை மட்டுமே அனுமதிக்கலாம் எனவும் அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியதுடன் மேலும்  தடுப்பூசி மருந்தை கூடுதலாக விநியோகிக்க அரசு பரிசீலிக்க வேண்டும் எனக்கூறிய உயர்நீதிமன்றம் தமிழகம், புதுச்சேரியின் நிலவரங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும், ரெம்டெசிவிர் மருந்து கள்ளச்சந்தையில் விற்கப்படுவதை தவிர்க்க நட

அசாமில் கடுமையாக நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.2 எனப் பதிவாகியுள்ளது

  அசாமில் கடுமையாக நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.2 எனப் பதிவு ; வடகிழக்கு, வடக்கு வங்காளமும் குலுங்கியது அசாம் மாநிலத்தில் இன்று காலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது, ரிக்டர் அளவு கோலில் இந்த பூகம்பம் 6.2 என்று பதிவாகியுள்ளது. இந்தத் தகவலை ஐரோப்பிய மத்தியதரைக்கடல் நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அசாம் சுகாதார அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா, தகவல்“சற்று முன் பெரிய பூகம்பத்தை உணர்ந்தோம். விவரங்களுக்காக காத்திருக்கிறோம்” என்று ட்வீட் செய்துள்ளார். இந்த நிலநடுக்கத்தின் மையம் அசாமின் தேஜ்பூரிலிருந்து 43 கிமீ தொலைவில் மேற்கே இருந்ததாக தேசிய நில்நடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை 7:51 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமியின் மேற்பரப்பிலிருந்து 17 கிமீ ஆழத்தில் இந்தப் பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக மற்றும் ஒரு தகவல் தெரிவிக்கின்றது, ஆனால் 10 கிமீ ஆழம் என்கிறது தேசிய நிலநடுக்க மையம். நிலநடுக்கம் அசாம், வடக்கு வங்கம் மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் உணரப்பட்டுள்ளது. பூகம்பம் ரிக்டர் அளவில் 6.2 என்று பதிவாகியிருப்பதாக தகவல் வெளியிட, இந்திய நிலநடுக்க மையம் 6.4 என்று பதிவானதாக செய்திகள்

சர்வதேச வர்த்தகம் தொடர்பான பிரச்னைகளை தீர்க்க ‘கொவிட்-19 உதவி மையம்’: வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குனரகம் தொடங்கியது

வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் சர்வதேச வர்த்தகம் தொடர்பான பிரச்னைகளை தீர்க்க ‘கொவிட்-19 உதவி மையம்’: வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குனரகம் தொடங்கியது கொவிட் - 19 அதிகரிப்பு சமயத்தில், நாட்டில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிலவரங்கள், இதில் சம்பந்தப்பட்டவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் ஆகியவற்றை வர்த்தகத்துறை மற்றும் வெளிநாட்டு வர்த்தகம் தலைமை இயக்குனரகம் ஆகியவை  கண்காணிக்கின்றன.  சர்வதேச வர்த்தகத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காண ‘கொவிட்-19 உதவி மையத்தை’ வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குனரகம் செயல்படுத்தியுள்ளது.  வர்த்தகத்துறை/வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குனரகம், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி உரிமம், சுங்கத்துறை அனுமதி கிடைப்பதில் தாமதம், அதன்பின் ஏற்படும் சிக்கல்கள், ஏற்றுமதி/இறக்குமதி ஆவணங்கள், வங்கி விஷயங்கள் தொடர்பான பிரச்னைகளை இந்த ‘கொவிட்-19 உதவி மையம்’ தீர்த்து வைக்கும்.  இதர அமைச்சகங்கள்/துறைகள்/மத்திய மற்றும் மாநில அரசுகளின் முகமைகள் ஆகிவற்றின் தகவலை சேகரித்து இணைத்து, ஒருங்கிணைந்து செயல்பட்டு இந்த உதவி மையம் தீர்வுகளை வழங்கும்.  அதனால் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழிலில் ஈட

15 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகளை மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு இந்திய அரசு இது வரை இலவசமாக வழங்கியுள்ளது

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் 15 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகளை மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு இந்திய அரசு இது வரை இலவசமாக வழங்கியுள்ளது பரிசோதனை, கண்காணிப்பு, சிகிச்சை மற்றும் சரியான கொவிட் தடுப்பு  நடத்தை விதிமுறை ஆகியவற்றை உள்ளடக்கிய பெருந்தொற்றை எதிர்த்து போராடுவதற்கான இந்திய அரசின் ஐந்து அம்ச திட்டத்தில் முக்கிய அம்சமாக திகழ்வது தடுப்பு மருந்து வழங்கல் ஆகும். 2021 ஜனவரி 16 அன்று உலகின் மாபெரும் தடுப்புமருந்து வழங்கல் திட்டத்தை இந்தியா தொடங்கியது. 2021 மே 1 முதல் பரவலாக்கப்பட்ட மற்றும் விரிவுபடுத்தப்பட்ட மூன்றாம் கட்ட கொவிட்-19 தடுப்புமருந்து திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தடுப்பு மருந்தின் விலையை தாராளமயமாக்கவும், அதிகம் பேரை தடுப்பு மருந்து சென்றடையவும் மூன்றாம் கட்ட தடுப்புமருந்து திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது. பரவலாக்கப்பட்ட தடுப்புமருந்து திட்டத்தின் கீழ் தடுப்பூசிகளின் கொள்முதல், தகுதியான வயது மற்றும் தடுப்பு மருந்து வழங்கல் ஆகியவை இணக்கமான வழிமுறைகளுடன் உருவாக்கப்பட்டுள்ளன. 15 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகளை (15,65,26,140) மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்

51 ஈசிஹெச்எஸ் மருத்துவமனைகளில் கூடுதல் ஒப்பந்த பணியாளர்களை தற்காலிகமாக பணியமர்த்த மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஒப்புதல்

பாதுகாப்பு அமைச்சகம் 51 ஈசிஹெச்எஸ் மருத்துவமனைகளில் கூடுதல் ஒப்பந்த பணியாளர்களை தற்காலிகமாக பணியமர்த்த மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ஒப்புதல் கொவிட்- 19 நெருக்கடி தருணத்தில், நாடு முழுவதும் உள்ள 51 முன்னாள் ராணுவ வீரர்கள் பங்களிக்கும் சுகாதார திட்டத்தின் (ஈசிஹெச்எஸ்) மருத்துவமனைகளில் சேவை புரிவதற்காக கூடுதல் ஒப்பந்த பணியாளர்களை தற்காலிகமாக பணியில் அமர்த்துவதற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். மருத்துவ அலுவலர், உதவி செவிலியர், மருந்தாளுநர், ஓட்டுநர், பாதுகாப்பு பணியாளர் உள்ளிட்டோர் நிலைய தலைமையகங்களின் வாயிலாக பணியமர்த்தப்பட்டு, ஈசிஹெச்எஸ் மருத்துவமனைகளில் சாதாரண பணி நேரம் தவிர இரவு நேர பணியிலும் மூன்று மாதங்களுக்கு சேவையாற்றுவார்கள். சென்னை, வேலூர் உட்பட நாடு முழுவதும் உள்ள 51 ஈசிஹெச்எஸ் மருத்துவமனைகள் இதில் அடங்கும்.  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மூத்த ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களுக்கு இரவு நேரம் உட்பட உடனடி மருத்துவ சேவை வழங்குவதை இந்த நடவடிக்கை உறுதி செய்யும். ஆகஸ்ட் 15, 2021 வரை இத்திட்டத்திற்கு அனுமதி

கொவிட்-19 புதிய வழிகாட்டுதல்களை ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

ஆயுஷ் கொவிட்-19 புதிய வழிகாட்டுதல்களை ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. பெருந்தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கத்தின் காரணமாக புதிய வழிகாட்டுதல்களுக்கு ஏற்பட்டுள்ள தேவையை கருத்தில் கொண்டு, ஆயுர்வேதம் மற்றும் யுனானி மருத்துவர்களுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கொவிட்-19 நோயாளிகளுக்காகவும், கொவிட்-19 பெருந்தொற்றின் போது சுய பராமரிப்புக்கான ஆயுர்வேத மற்றும் யுனானி மருத்துவ நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காகவும் இந்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. சுய பராமரிப்பு மற்றும் வீட்டு மேலாண்மை நடவடிக்கைகள் மீது இந்த வழிகாட்டுதல்கள் பெரிதும் கவனம் செலுத்தியுள்ளன. பண்டைய ஆயுர்வேதம் மற்றும் யுனானி மருத்துவ முறைகள், ஆராய்ச்சி படிப்புகள், பல்முனை குழுவின் அறிக்கை மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் கொவிட்-19 நோயாளிகளுக்கான இந்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் மூலம் அதிகரித்து வரும் கொவிட்-19 நிலைமையை கட்டுப்பாட்டில் வைப்பதற்கான நமது போருக்கு மேலும் வலு கிடைக்கும். ஆயுஷ் அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட ஆயுஷ் ஆராய்ச்சி மற்றும் மேம்பா

பிராணவாயு 20 கிரையோஜெனிக் டேங்கர்களை இறக்குமதி செய்தது மத்திய அரசு

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் நாட்டில் நிலவும் பிராணவாயு டேங்கர்களின் பற்றாக்குறையை சரி செய்ய, 20 கிரையோஜெனிக் டேங்கர்களை இறக்குமதி செய்தது மத்திய அரசு நாட்டில் ஏற்பட்டுள்ள பிராணவாயு டேங்கர்களின் பற்றாக்குறையை எதிர்கொள்வதற்காக, 10 மெட்ரிக் டன் மற்றும் 20 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 20 கிரையோஜெனிக் டேங்கர்களை மத்திய அரசு இறக்குமதி செய்து, மாநிலங்களுக்கு ஒதுக்கியுள்ளது. உற்பத்தி ஆலைகளில் இருந்து திரவ மருத்துவ பிராணவாயுவை பல்வேறு மாநிலங்களுக்கு கிரையோஜெனிக் டேங்கர்கள் வாயிலாக கொண்டு செல்வதும், நாட்டின் கிழக்கு பகுதியிலிருந்து இதர பகுதிகளுக்கு அவற்றை எடுத்துச் செல்வதும் சவாலாக இருப்பதால் பிராணவாயுவின் போக்குவரத்தை விரைவுபடுத்தும் நோக்கத்தில் 20 கிரையோஜெனிக் கொள்கலன்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. அதிகாரமளிக்கப்பட்ட குழு-2-இன் வழிகாட்டுதலின்படி தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறையின் ஆலோசனையின் பேரில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், இந்த கொள்கலன்களை மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு ஒதுக