சர்வதேச வர்த்தகம் தொடர்பான பிரச்னைகளை தீர்க்க ‘கொவிட்-19 உதவி மையம்’: வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குனரகம் தொடங்கியது
வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
சர்வதேச வர்த்தகம் தொடர்பான பிரச்னைகளை தீர்க்க ‘கொவிட்-19 உதவி மையம்’: வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குனரகம் தொடங்கியது
கொவிட் - 19 அதிகரிப்பு சமயத்தில், நாட்டில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிலவரங்கள், இதில் சம்பந்தப்பட்டவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் ஆகியவற்றை வர்த்தகத்துறை மற்றும் வெளிநாட்டு வர்த்தகம் தலைமை இயக்குனரகம் ஆகியவை கண்காணிக்கின்றன. சர்வதேச வர்த்தகத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காண ‘கொவிட்-19 உதவி மையத்தை’ வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குனரகம் செயல்படுத்தியுள்ளது.
வர்த்தகத்துறை/வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குனரகம், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி உரிமம், சுங்கத்துறை அனுமதி கிடைப்பதில் தாமதம், அதன்பின் ஏற்படும் சிக்கல்கள், ஏற்றுமதி/இறக்குமதி ஆவணங்கள், வங்கி விஷயங்கள் தொடர்பான பிரச்னைகளை இந்த ‘கொவிட்-19 உதவி மையம்’ தீர்த்து வைக்கும்.
இதர அமைச்சகங்கள்/துறைகள்/மத்திய மற்றும் மாநில அரசுகளின் முகமைகள் ஆகிவற்றின் தகவலை சேகரித்து இணைத்து, ஒருங்கிணைந்து செயல்பட்டு இந்த உதவி மையம் தீர்வுகளை வழங்கும்.
அதனால் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள், தங்கள் பிரச்னை குறித்த தகவல்களை வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குனரகத்தின் இணையதளத்தில், கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றி தெரிவிக்கலாம்.
வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குனரகத்தின் இணையதளத்துக்குள் https://dgft.gov.in- சென்று உதவி மையத்தின் சேவையை நாடலாம்.
இல்லையென்றால், dgftedi@nic.in என்ற மின் அஞ்சல் முகவரியிலும் தங்கள் பிரச்னைகளை தெரிவிக்கலாம். கொவிட்-19 உதவி மையத்தை 1800-111-550 என்ற போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
அதன்பின் தீர்வுகளின் நிலவரத்தையும் அறிந்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1714061
கருத்துகள்