கர்நாடக மாநிலத்தில் பெங்களூர் நகரில் 3000 கொரோனோ நோயாளிகள் மாயமா பீதியைக் கிளப்பிய கர்நாடக அமைச்சர்
24 மணிநேரத்தில் 39,047 ஆயிரம் பேருக்கு பாதிப்பு.. தொற்றுக்கு 229 பேர் உயிரிழப்புகள் 6 லட்சம் வடநாட்டு தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு பயணம்.
கர்நாடகாவில் நாளுக்கு நாள் கொரோனோ தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரித்து வருகிறது. கடந்த பல நாட்களாக 25 ஆயிரத்தைக் கடந்துள்ளது,
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 39.047 பேர் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சைப் பலனின்றி 229 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லி, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களைப் போல, கர்நாடகாவையும் கொரோனோவின் 2 வது அலை மிரட்டிக் கொண்டிருக்கிறது.
பெங்களுரில் மட்டும் 22,596 பேர் கொரோனோ தொற்றுக்கு ஆளாகியுள்ள நிலையில், 137 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இது மொத்த உயிரிழப்பில் பாதிக்கு மேற்பட்டவர்கள் பெங்களுரூவைத் சேர்ந்தவர்கள் என்பதுதான்.
இதைவிட அதிர்ச்சியான ஒரு விஷயத்தை கர்நாடக வருவாய் துறை அமைச்சர் அசோக் கிளப்பியுள்ளார். கொரோனோ பாதிப்பு தொடர்பாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட தில் 3000 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதும், அவர்கள் அனைவரும் தங்களது கைபேசியை அணைத்து விட்டு மாயமாகி விட்டார்கள் என்றும் பீதியை கிளப்பியுள்ளார் அமைச்சர்.
மாயமான தொற்றாளார்கள், தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சைப் பெற்று வந்தாலும், அவர்களின் இருப்பிடம் குறித்து அவர்களே தாமாக முன்வந்து அரசுக்கு தெரிவிக்க வேண்டும். அப்போதுதான், தொற்று பரவல் இணைப்பை துண்டிக்க முடியும் என்றும் அமைச்சர் அசோக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனோவை கட்டுக்குள் கொண்டு வர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கட்டுமானப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து வந்த வடமாநில தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊருக்கு கும்பல், கும்பல்க திரும்பிக் கொண்டிருகின்றனர். இதுவரை 4 லட்சம் பேர் கர்நாடகாவில் இருந்து வெளியேறியுள்ளதாக கூறும் கர்நாடக அரசு போக்குவரத்துறை அதிகாரிகள், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 2 லட்சத்திற்கு மேற்பட்டோர் தங்கள் மாநிலத்திற்கு திரும்ப பேருந்து உள்ளிட்ட வாகன வசதிகளை பயன்படுத்திக் கொண்டுள்ளனர் என்று தெரிவித்தார்கள்.
கர்நாடகாவை சூழ்ந்துள்ள பேராபத்து குறித்து அச்சம் தெரிவிக்கும் கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, கர்நாடகாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கு தேவையான தடுப்பூசிமருந்தை விலையின்றி அனுப்பி வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கருத்துகள்