51 ஈசிஹெச்எஸ் மருத்துவமனைகளில் கூடுதல் ஒப்பந்த பணியாளர்களை தற்காலிகமாக பணியமர்த்த மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஒப்புதல்
பாதுகாப்பு அமைச்சகம்
51 ஈசிஹெச்எஸ் மருத்துவமனைகளில் கூடுதல் ஒப்பந்த பணியாளர்களை தற்காலிகமாக பணியமர்த்த மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ஒப்புதல்
கொவிட்- 19 நெருக்கடி தருணத்தில், நாடு முழுவதும் உள்ள 51 முன்னாள் ராணுவ வீரர்கள் பங்களிக்கும் சுகாதார திட்டத்தின் (ஈசிஹெச்எஸ்) மருத்துவமனைகளில் சேவை புரிவதற்காக கூடுதல் ஒப்பந்த பணியாளர்களை தற்காலிகமாக பணியில் அமர்த்துவதற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.
மருத்துவ அலுவலர், உதவி செவிலியர், மருந்தாளுநர், ஓட்டுநர், பாதுகாப்பு பணியாளர் உள்ளிட்டோர் நிலைய தலைமையகங்களின் வாயிலாக பணியமர்த்தப்பட்டு, ஈசிஹெச்எஸ் மருத்துவமனைகளில் சாதாரண பணி நேரம் தவிர இரவு நேர பணியிலும் மூன்று மாதங்களுக்கு சேவையாற்றுவார்கள்.
சென்னை, வேலூர் உட்பட நாடு முழுவதும் உள்ள 51 ஈசிஹெச்எஸ் மருத்துவமனைகள் இதில் அடங்கும். தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள மூத்த ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களுக்கு இரவு நேரம் உட்பட உடனடி மருத்துவ சேவை வழங்குவதை இந்த நடவடிக்கை உறுதி செய்யும். ஆகஸ்ட் 15, 2021 வரை இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கருத்துகள்