அசாமில் கடுமையாக நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.2 எனப் பதிவு
; வடகிழக்கு, வடக்கு வங்காளமும் குலுங்கியது
அசாம் மாநிலத்தில் இன்று காலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது, ரிக்டர் அளவு கோலில் இந்த பூகம்பம் 6.2 என்று பதிவாகியுள்ளது.
இந்தத் தகவலை ஐரோப்பிய மத்தியதரைக்கடல் நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து
அசாம் சுகாதார அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா, தகவல்“சற்று முன் பெரிய பூகம்பத்தை உணர்ந்தோம். விவரங்களுக்காக காத்திருக்கிறோம்” என்று ட்வீட் செய்துள்ளார்.
இந்த நிலநடுக்கத்தின் மையம் அசாமின் தேஜ்பூரிலிருந்து 43 கிமீ தொலைவில் மேற்கே இருந்ததாக தேசிய நில்நடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை 7:51 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமியின் மேற்பரப்பிலிருந்து 17 கிமீ ஆழத்தில் இந்தப் பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக மற்றும் ஒரு தகவல் தெரிவிக்கின்றது, ஆனால் 10 கிமீ ஆழம் என்கிறது தேசிய நிலநடுக்க மையம்.
நிலநடுக்கம் அசாம், வடக்கு வங்கம் மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் உணரப்பட்டுள்ளது.
பூகம்பம் ரிக்டர் அளவில் 6.2 என்று பதிவாகியிருப்பதாக தகவல் வெளியிட, இந்திய நிலநடுக்க மையம் 6.4 என்று பதிவானதாக செய்திகள் வெளியிட்டுள்ளன. இந்த ரிக்டர் அளவு அசாம் சோனிட்பூரிலிருந்து பதிவானதாக சில தகவல்கள் கூறினாலும் இன்னும் உண்மை நிலவரம் வரவில்லை.
பூமிக்குக் கீழ் 10 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்க மையம் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் அலுவலகம் வெளியிட்ட தகவல்
நில அதிர்வு குறித்து அசாம் முதல்வருடன் பிரதமர் உரையாடல், அனைத்து உதவிகளும் அளிப்பதாக உறுதி
பிரதமர் திரு.நரேந்திர மோடி, அசாம் மாநிலத்தின் சில பகுதிகளில் ஏற்பட்ட நிலஅதிர்வு குறித்து அம்மாநில முதல்வர் திரு.சர்பானந்த சோனோவாலுடன் பேசி நிலைமையை கேட்டறிந்தார்.
திரு.மோடி சுட்டுரை வாயிலாக வெளியிட்டுள்ள செய்தியில், “அசாம் மாநிலத்தின் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள நிலஅதிர்வு குறித்து அம் மாநில முதல்வர் திரு.சர்பானந்த சோனோவால் அவர்களுடன் பேசினேன். அசாம் மாநிலத்திற்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று உறுதி அளித்துள்ளேன். அசாம் மக்களின் நலத்திற்காக நான் பிரார்த்திக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
கருத்துகள்