முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா












"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற.

அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர்.

ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார்.

அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள் அரசியை காக்க தகவல் கூற மறைத்து மறுத்ததால் அவளின் சிரத்தைக் கொய்த ஆங்கிலேயர் செயலறிந்த அரசி தன் உயிரைக் காக்க உயிர்த் தியாகம் செய்த பெண்ணிற்கு “வீரக்கல்” அமைத்து வழிபட்டு தனது திருமாங்கல்யத்தை முதல் காணிக்கையாக அளித்தார். அரசியைக் காத்த அந்தப் பெண் தெய்வமே  வெட்டுடையார் அம்மை காவல் தெய்வமாக காளியாக அருள் தரும் கோவிலாய் அமர்ந்தாள.           பின் நாளில் பிரசித்தமானதால் இத்தளம் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் கோவில் என அழைக்கபடுகிறது.  வெட்டுடைய அய்யனாருக்கு நேர் எதிரில் மேற்கு நோக்கிய படி ஸ்ரீ காளியம்மன் அருள்பாலிக்கிறார்.

எட்டு திருகரத்துடன், வலது கால் மடக்கி இடது கால் அரக்கன் மீதூன்றி கருணை பொங்கும் முகத்தோடு காட்சியளிக்கிறார். பக்தர்களின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கிறார். பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை  முறையிட்டால் உடனே தீர்வு கிடைக்கும் .நீதி வழங்கும்              ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன்

“வெட்டு ஒன்று துண்டு இரண்டு” என்பது பேச்சுவழக்கிலுள்ள வார்த்தையாகும். அதற்கேற்ப கோவிலில் அநீதிக்கு உடனடியாகத் தண்டனை அளிக்கிறாள்.

நல்லோர்க்கு தீங்கிழைப்பவர்கள், திருடர்கள், ஏமாற்றுப் பேர்வழிகள், காமுகர்களென எந்தப் பிரச்சினையாய் இருந்தாலும் நியாயமான கோரிக்கைகளை ஏற்று அவர்களுக்கு தக்க தண்டனை வழங்கும் நீதிமானாக இன்றும் விளங்குகிறார் ஸ்ரீ காளியம்மன்.கடன் வாங்கியவன் கொடுக்கவில்லை, கடன் கொடுத்தவன் கொடுத்த கடனை நீதிமன்றத்தில் உறுதிப்படுத்த முடியவில்லை. இச் சூழ்நிலையில் கடன் கொடுத்தவன் அரியாகுறிச்சியில் உலகைக் காக்கும் நீதிபதியான ஸ்ரீ வெட்டுடைய காளியின் சந்நிதியில் வந்து முறையிட்டு வருந்திக் காசு வெட்டிப் போட்டு விட்டுப் போய்விட்டான் என்றால், ஸ்ரீ காளி முறையாகக் கடனை வசூலித்துக் கொடுப்பார். நியாயமான காரணங்களுக்காகக் காசு வெட்டிப்போட்டால் அன்னை பராசக்தி காளியாகவே பழிவாங்குவார். வம்புக்கே வந்து வருத்திப் பயமுறுத்தும் தெம்புள்ளார் செய்துவரும் தீங்குகளை - அம்பிகை முன் சொல்லிமனம் கொதித்துத் துட்டொன்றை வெட்டிவிடக் கல்லி எடுப்பாள் வேர் களைந்து, என்று வெட்டுடையாள் வீரச்சக்கரம் நூல் போற்றுகிறது. அன்னையை வழிபட்டவர்களுக்கு மட்டுமல்லாமல் தங்கள் வீட்டிலிருந்தே அன்னையை நினைத்து காசு முடிந்து வைப்பவர்களுக்கும் தீராத நோய் தீருகிறது. கணவன் உயிர்பிழைக்க மாங்கல்யம் நிலைக்கிறது. வீட்டில் விளையாட வைக்கும் வெட்டுடைய காளி அந்த வீட்டில் தானும் குழந்தையாய் தங்கிருந்து தழைக்கச் செய்கிறாள். நீதிமன்ற வழக்குகளில் நீதிபதிகளின் ஆணையின்படி அன்னையின் சந்நிதியில் சத்தியம் செய்தும் முடிவு காண்பதுண்டு.

தனிவழிக்குத் துணையிருக்கும் தாயாகவும், சத்தியத்தை காக்கும் சங்கரியாகவும் ஸ்ரீ காளிதேவி கருணை செய்கிறார். குறிப்பிட்ட சில கொடுமைக்காரர்களின் கொடுமைகளைத் தாங்க முடியாமல் அன்னையிடம் முறையிட்டவர்கள் விரைவில் நலவாழ்வு பெறுவதும், திருட்டுக் கொடுத்தவர்கள் பொருட்கள் தானே திரும்பி வருவதும்  நாள்தோறும் நடக்கின்றன. அன்னையின் சந்நிதிக்குப் பின்புறமுள்ள சிறிய பீடத்தில் வெட்டிப் போடப்பட்ட காசுகள் எண்ண முடியாதவை. ஒரு கூண்டுக்குள் நிறைந்து கிடக்கும் காசுகளைத் தொடுவதற்கே மக்கள் அஞ்சுகிறார்கள். தாங்க முடியாத அளவுக்குத்தொல்லை கொடுக்கும் எதிரிகளுக்காக யாராவது காசு வெட்டிப் போட்டால் அந்தக் கொடியவர்கள் உயிரை இழக்கிறார்கள். வறுமை மாறவும் தொழில் வளமுறவும் செய்யும் அன்னை, கொடியவர்களை வதைத்துக் கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாய்த் காட்சியளிக்கிறார். இங்கே பொய்யாகச் சத்தியம் செய்தவர்கள் பிழைத்ததாகச் சரித்திரம் இல்லை. உலகத்திலேயே பெரிய நீதிமன்றம் அரியாகுறிச்சியில் இருக்கின்றது. இந்த நீதிமன்றத்தில் நீதிபதி அன்னை ஸ்ரீ வெட்டுடையாள் காளி. மற்ற நீதிமன்றத் தீர்ப்புகளை உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்யலாம். இந்த நீதிபதியின் தீர்ப்புக்கு மேல் தீர்ப்பில்லை.  ஏழைகளுக்காக இரங்கி வந்து இலவச நீதிமன்றம் நடத்தும் ஏந்திழை. சில சமயங்களில் நீதியை நிதி அசைத்து விடக் காணுகிறோம். இவர் சந்நிதியில் நிதியும் நீதியும் கைகட்டி நிற்கின்றன. பரிகாரம் கேட்டு நிற்பவரும், பலன் கிடைத்தும் காணிக்கை செலுத்துபவருமாக இவர் சந்நிதி எப்பொழுதும் நிறைந்துள்ளது. வரலாற்றுச் சாட்சியாக.                    எனக்கு தெரியாமல் என் பெயரில் யாரோ கடன் வாங்கி விட்டார்கள். என்னுடைய cibil கணக்குல அதை சேர்துது விட்டார்கள். யார், எங்கு கடன் வாங்கினார்கள் என்று தெரியவில்லை. அதாவது வங்கியா அல்லது வேறு எங்கு என்று தெரியவில்லை. தவணை முறை கட்டவில்லை என்று என்னுடைய CIBIL கணக்கில். காட்டுகிறது. என்ன செயவது என்று சொல்லுங்கள். தீர்வு   ஸ்ரீ வெட்டுடையார் காளி ஆலயம் சென்று முறையிடு விடை தெரியும்.

தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் ஒன்றியத்தில் கொல்லங்குடியில் அமைந்துள்ளது. வெட்டுடையார் காளியம்மன் கோவில்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமை வாய்ந்த தலமாகும். ஆலயம் அமர்ந்து இருக்கும் ஸ்ரீ காளியின் தோற்றமோ காண்பவரை கண்களில் பக்திமயமாக்கி நம்பிக்கையூட்டும் கத்தி, கேடயம் தீவினைகளை வேரோடு அகற்றுவேன் என்று அமைந்திருக்கும். அம்மனைக் காணும் காட்சி நேரம் காலை 6.00 மணிமுதல் மாலை 6.00 மணிவரை. பௌர்ணமி நாளில் இரவு 10.00 மணிவரை.கண் கொள்ளாக் காட்சியாக மிளிரும் 

சங்கா அபிஷேகம் ஆண்டுதோறும் பங்குனி மாதம் பத்துத் தினங்களும் நடைபெறும். 108 சங்காபிஷேகம் நடைபெறும். ஆடிப்பெருக்கன்று பூச்சொரிதல் விழாவும் நடைபெற்றுப் பெருமை சேர்க்கும். இராணி வேலுநாச்சியார் இக்கோவிலுக்கு வழங்கிய 20 கிலோ பொன்னால் கோவிலின் கொடி மரம் தங்கக் குதிரை வாகனத்துடன் கோவில் தேர்த்திருப்பணியும் செய்யப்பட்டது  பெருமைக்கு பெருமை சேர்ப்பதாகும். இங்குள்ள தெப்பத்தில் குளித்தால் பிரச்சனைகள் தீரும் என்பது ஐதீகம். இங்கு பிரார்த்தனைகளும் கூடுதல் பிரார்த்தனைகளும் நடைபெறும்.

ஆண்டுதோறும்  நடைபெறும் விழாக்கள் ஆடிப்பெருக்கு, கந்த சஷ்டி, தைப் பொங்கல், சிவராத்திரி, விநாயகர் பூஜை, மார்கழி பூஜை, பௌர்ணமி பூஜை, ஆடி, தை வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள்,  நடைபெறும். இது சுற்றுலாத் தலமாக இருப்பதால் வெள்ளிக்கிழமைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும். அன்னையின் அருளைப் பெற, “அம்மனின் காட்சியே அருள்வாக்கு ஆனந்தத்தைப் பெறும் திருவாக்கு.அய்யனார் சன்னதியைச் சுற்றியே ஆஞ்சநேயர், மீனாட்சி சுந்தரேசுவரர், சோலைமலை, திருமால், கருப்பசாமி, வீரப்பர், வீரபத்திரர், வீரப்பசாமி, முனியப்பசாமி, பேச்சியம்மன், சூலாட்டுகாளி, பைரவர் ஆகிய பரிவார தெய்வங்கள் உள்ளனர். கோவிலுக்கு வெளியே சோணைக்கருப்பசாமி சன்னதி உள்ளது. இவரே அம்பிகையின் உத்தரவுகளைக் கேட்டுப் பணி செய்யும் காவல் தெய்வமாவார்.பங்குனி மாதம் 10 நாள் திருவிழாவில், சிவனைப்போல அம்பிகைக்கு 108 சங்காபிஷேகம்  சிறப்பு.  பத்து நாட்கள் விழாவில்

அம்பிகை கேடயம், பூதகி, கிளி, அன்னம், காமதேனு, காளை, சிம்மம், தங்கக்குதிரை ஆகிய வாகனங்களில் உலா வருவார். விழாவின் 9ம் நாளில் தேர்பவனியும் உண்டு. ஆடிப்பெருக்கன்று அம்பாள் சன்னதி முழுதும் பூக்களை நிரப்பி, பூச்சொரிதல் விழா விசேஷமாக நடக்கும்.

சிவகங்கை சமஸ்தானத்தின் மேதகு இராணி வேலுநாச்சியாருக்கு பிறந்த குழந்தை வெள்ளச்சி நாச்சியார் பேசாமல் இருக்க. அக்குழந்தை பேச வைக்கும்படி அம்பிகையை வேண்டி, குழந்தைக்கு பேச்சு வந்ததனால், மகிழ்ந்த வேலுநாச்சியார் அம்பிகைக்கு வைரத்தாலி காணிக்கை செய்து கொடுத்தார்.

குழந்தை வரம் கிடைக்கவும், பேசாத குழந்தைகளுக்கு பேச்சு நன்கு வரவும் இங்கு வேண்டிக் கொள்கின்றனர். வேண்டிய பிரார்த்தனை நிறைவேறி, பக்தர்கள் உபயமாகக் அளித்த 20 கிலோ தங்கத்திலிருந்தே கோவில் கொடிமரம், தங்க குதிரை வாகனம் மற்றும் திருத்தேர் திருப்பணி செய்யப்பட்டுள்ளது 

தினமும் சூரியபூஜை: அய்யனார் பூரணா, புஷ்கலாவுடன் பிரதான சன்னதியில் காட்சி தருகிறார். இவருக்கு எதிரே யானை வாகனம் உள்ளது. இவரது சன்னதிக்கு முன்புறம் ஸ்ரீ வெட்டுடையார் காளி சன்னதி இருக்கிறது. இவரே பிரதானி என்பதால் கொடிமரம் இவரது சன்னதி எதிரேயே அமைந்துள்ளது. தினமும் காலையில் அய்யனார் மீதும், மாலையில் ஸ்ரீ காளியம்மன் மீதும் சூரிய ஒளி விழும்படி கோவில் அமைப்பு அமைந்துள்ளது.

இங்கு குளம் உண்டு.குளத்தை நம்பிக்கையுடன் சுற்றினால் பிரச்னைகள் தீரும் என்பது ஜதீகம். ஸ்ரீ காளியையும், அய்யனாரையும் தரிசித்து விட்டு பக்தர்கள் அடுத்துள்ள சோணைக் கருப்பண்ணசாமி சன்னதிக்குத் தான். இத்திருக்கோயிலின் தினசரி பூசைகளை கொல்லங்குடி கிராமத்தில் உள்ள காரி வேளார் கருப்ப வேளார் எனும் குலாளர் வகுப்பினர் செய்து வருகின்றனர்.

பங்குனியில் பிரம்மோத்சவமும் ஆடிப்பெருக்கும், கந்தசஷ்டி, தைப்பொங்கல், சிவராத்திரி, ஆடி, தை வெள்ளி, நவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, மார்கழி பூசை, பவுர்ணமி பூசையின் போதும் நோய் நீங்க, திருமணம் நடக்க, புத்திர தோஷங்கள் நீங்க, அம்பிகைக்கு அபிசேகம் செய்வித்தும், முடிக்காணிக்கை செலுத்தியும் வழிபடுகின்றனர். மாங்கல்ய தோசம் நீங்க, அம்பாள் பாதத்தில் தாலி வைத்து வாங்கிச் செல்கின்றனர். குழந்தைச் செல்வம் கிட்ட, கோயிலுக்கு வெளியே உள்ள விசிறி மரத்தில் தொட்டில் கட்டுகின்றனர். பேசாத குழந்தைகளுக்கு பேச்சு நன்கு வரவும் இங்கு வேண்டிக் கொள்கின்றனர்.

கூடுதலாக நான்தான் பெரியவன் என்னும் கருவத்தால் கூட்டுக் குடும்பத்தில் பிரிந்தவர்கள் பலர். மீண்டும் ஒன்று சேர வழிபடும் பிரதானத் தலம் இது. பிரச்னையால் பிரிந்துவிட்டு மீண்டும் சேர விரும்பும் தம்பதியர், உறவினர், சகோதரர்கள் இங்கு “கூடுதல் வழிபாடு” என்னும் பிரார்த்தனை செய்கின்றனர். பிரிந்து சென்றோர் இங்கு வந்து அம்பாளுக்கு பொங்கல் வைத்து, அதை அம்பிகை சன்னதி முன் வைத்து ஒன்றாகக் கூடுகின்றனர். பின், அம்பிகைக்கு முன், பிரச்னை ஏற்பட்டவர்கள் தங்களுக்குள் சமரசம் செய்து, தாங்கள் எப்போதும் ஒற்றுமையுடன் இருக்க வழிபடுகின்றனர். அம்பிகையே இவர்களுக்கு நடுநாயகமாக இருந்து சேர்த்து வைப்பதாக ஐதீகம்.

பக்தர்கள் தங்களுக்கு தீங்கு செய்தவர்களைத் தண்டிக்க அம்மனிடம் முறையிடுவதும், தீய சக்திகளால் பிரிய நேர்ந்தவர்கள் இக்கோயிலுக்கு வந்து சேர்ந்து கொள்வதும் இக்கோவிலின் தனிச்சிறப்பு.இது நாம் கண்ணால் கண்ட உண்மை.இந்தாண்டு திருவிழா மார்ச் 22 ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் இரவு பூதகி வாகனம், கிளி வாகனம், அன்ன வாகனம், காமதேனு வாகனம், காளை வாகனம், சிம்ம வாகனம், தங்க குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

தேரோட்டம்  நடைபெற்றதையொட்டி அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அம்மன் எழுந்தருளினார். காலை 8 மணிக்கு தேர்வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. இதி்ல் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் கோவிலைச் சுற்றி நான்கு இரத வீதி வழியாக வந்து நிலையையடைந்தது. இரவு அம்மன் யானை வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 10 ஆம் திருநாளான நேற்றுக் காலை தீர்த்தவாரி நிகழ்ச்சியும், மாலை சந்தனக்குடம், பால்குடம் ஆகிய நிகழ்ச்சிகளும், இரவு மலர் கொண்ட பூப்பல்லக்கில் அம்மன் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. இன்று காலை விடையாற்றி ஊஞ்சல் உற்சவம் மற்றும் இரவு மூலஸ்தான அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தங்க ரத புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தானத்தின் மேதகு இராணி மதுராந்தகி நாச்சியார் தேவஸ்தான மேலாளர் இளங்கோ மற்றும்  இந்து சமய அறநிலையத்துறை சிவகங்கை இணை ஆணையர் தனபால் உத்தரவில் தக்கார் மற்றும் உதவி ஆணையர் சிவலிங்கம், கோவில் செயல் அலுவலர் நாகராஜன் ஆகியோர் சிறப்பாகச் செய்திருந்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...