பாதுகாப்பு அமைச்சகம் கொவிட்டால் பாதிக்கப்பட்ட முன்னாள் வீரர்களின் நலனுக்கு இந்திய ராணுவம் உறுதி பூண்டுள்ளது
முன்னாள் வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோரிடையே
கொவிட் பாதிப்புகள் அதிகமாகி வரும் நிலையில், தன்னுடைய மருத்துவ சிகிச்சை திறன்களை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை இந்திய ராணுவம் மேற்கொண்டு வருகிறது.
இந்த கடினமான காலகட்டத்தில் நம்முடைய முன்னாள் வீரர்களுக்கு கொவிட் பராமரிப்பு மற்றும் சிகிச்சையை அளிக்க உறுதி பூண்டுள்ள இந்திய ராணுவம், எந்தவிதமான உதவிக்கும் அருகில் உள்ள ராணுவ மையத்தை அவர்கள் தொடர்பு கொள்ளலாம் என்று உறுதியளிக்கிறது.
முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோருக்கு தொடர்ந்து ஆதரவு கிடைப்பதை ஒருங்கிணைப்பதற்காக முன்னாள் படைவீரர்கள் பங்களிப்பு சுகாதார திட்டம் மற்றும் மண்டல மற்றும் துணை மண்டல தலைமையகங்களுடன் இந்திய ராணுவ முன்னாள் படைவீரர்கள் இயக்குநரகம் செயலாற்றி வருகிறது.
கொவிட்டால் பாதிக்கப்பட்ட முன்னாள் படைவீரர்கள் மருத்துவ ஆலோசனை மற்றும் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதி பெறுவதற்கு வழிகாட்டுதல்களும், உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
தில்லியில் உள்ள பேஸ் மருத்துவமனை மற்றும் அனைத்து ராணுவ மையங்களில் உள்ள சேவை மருத்துவமனைகள் அதிகளவில் முன்னாள் படைவீரர்களை அனுமதிப்பதற்காக ஓய்வின்றி பணியாற்றி வருவதோடு, படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் தொடர்ந்து செயலாற்றி வருகின்றன.
கொவிட்டால் பாதிக்கப்பட்ட முன்னாள் படைவீரர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வரும் நிலையில், முன்னாள் படைவீரர்கள் தங்களது வீடுகளிலேயே இருக்குமாறும், கொவிட் தொடர்பான அனைத்து வழிகாட்டுதல்களையும் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப் படுகிறது. கொவிட் நிலைமை குறித்து ஈஎஸ்எம் பிரிவுகளோடு தொடர்பில் இருக்குமாறும் பல்வேறு மையங்களின் மூத்த கர்னல்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு, 24 மணி நேரமும் செயல்படக்கூடிய அவசரகால எண்களும் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.
இந்திய ராணுவத்தின் அனைத்து கொவிட் உதவி எண்களையும் www.indianarmyveterans.gov.in என்ற முகவரியில் காணலாம். அனைத்து கொவிட் உதவி எண்கள் குறித்த தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்
தில்லி கன்டோன்மென்ட்டில் சிறப்பு கொவிட் மருத்துவமனையை நிறுவியது இந்திய ராணுவம்
முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோருக்கு விரிவான மருத்துவ உதவி வழங்குவதற்காக இந்திய ராணுவம் போர்க்கால அடிப்படையில் ஏராளமான கொவிட்- 19 சிகிச்சை மையங்களை ஏற்படுத்தி வருகின்றது.
அது போன்ற ஓரு வசதி, தில்லி கண்டோன்மென்ட்டில் உள்ள பேஸ் மருத்துவமனையில் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த முழு மருத்துவமனையுமே, அனைத்து நோயாளிகளுக்கும் அவசர சிகிச்சைகளை வழங்கக்கூடிய விரிவான ஏற்பாடுகளுடன் கொவிட் மருத்துவமனையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
துவக்கத்தில் ஏற்படுத்தப்பட்ட 340 கொவிட் படுக்கைகளில் 250 படுக்கைகள் பிராணவாயு வசதியுடன் கூடியவை. இந்த மொத்த எண்ணிக்கையை வரும் ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் மொத்த படுக்கைகளில் எண்ணிக்கையை 650-ஆக உயர்த்தவும், அவற்றுள் 450 படுக்கைகளை பிராணவாயு வசதியுடன் ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது
மற்றொரு முன்முயற்சியாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவல்களை அனைத்து நாட்களும் 24 மணி நேரமும், மூத்த அதிகாரி மேற்பார்வையில் வழங்கும் தொலை ஆலோசனை மற்றும் தகவல் மேலாண்மை பிரிவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சராசரியாக 1200-1300 அழைப்புகள் இந்த பிரிவிற்கு வருகின்றன.
கருத்துகள்