தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு களின் கூற்றுப்படி தமிழகத்தில் அமமுக பிரிக்கும் வாக்கு வங்கியால் அஇஅதிமுக ஆட்சி அதிகாரத்தை இழக்கும் என்பது ஏற்கனவே பல அரசியல் அறிந்த பத்திரிகை சாணக்கியர்கள் கணித்த போதும் எக்ஸிட்ஃபோல் முடிவுகள் வரும் வரை காத்திருக்க வேண்டிய நிலை அது தற்போது தெளிவாகிறது. தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக் கிழமை நடைபெற உள்ளது. தமிழகத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகள் யார் ஆட்சிக் கட்டிலில் அமரப்போகிறார்கள் என்பதற்கு மக்கள் அளித்த தீர்ப்பை அன்றைய தினமே பார்த்துவிடலாம்.
தேர்தலுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கும் சுமார் ஒரு மாத இடைவெளி இருந்த நிலையில் இன்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு அல்லது வாக்கு கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன
தமிழகத்தில் 234 தொகுதிகளில் அ.தி.மு.க., கூட்டணி 56 முதல் 68 தொகுதிகளிலும், தி.மு.க, கூட்டணி 160- 170 தொகுதிகளிலும் அமமுக 6 தொகுதிகளிலும் வெற்றிபெறும்
கேரளாவில் 140 தொகுதிகளில் இடது சாரிகள் கூட்டணி 72 முதல் 80 தொகுதிகளிலும், காங்கிரஸ்., கூட்டணி 58 முதல் 64 தொகுதிகளிலும், பா.ஜ.,க 5 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.
மேற்குவங்கத்தில் 294 தொகுதிகளில் பா.ஜ.,க கூட்டணி 138 முதல் 148 தொகுதிகளிலும், திரிணாமுல் காங்கிரஸ்., 126 முதல் 136 தொகுதிகளிலும், காங்கிரஸ்., கூட்டணி 10 முதல் 17 தொகுதிகளிலும் வெற்றிபெறும்.
அசாமில் 126 தொகுதிகளில் பா.ஜ.க, கூட்டணி 75 முதல் 85 தொகுதிகளிலும், காங்கிரஸ். கூட்டணி 40 முதல் 50 தொகுதிகளிலும், வெற்றி பெறும்
புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும், பா.ஜ,க கூட்டணி 16 முதல் 20 தொகுதிகளிலும், காங்கிரஸ்., கூட்டணி 11 முதல் 13 தொகுதிகளிலும் வெற்றி பெறும். தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக் கிழமை நடைபெற உள்ளது. தமிழகத்தில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு தமிழகத்தில் 160 முதல் 172 வரையிலான தொகுதிகளை கைப்பற்றுகிறது என்ற நிலை திமுக கூட்டணி ஏபிபி - சி ஓட்டர் நடத்திய பிரம்மாண்ட கருத்து கணிப்பில் தகவல்
அதன்படி, 10 வருடத்திற்கு பிறகு மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது திமுக, முதல்வராகிறார் மு.க.ஸ்டாலின்
ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த முடிவுகளே பிரதிபலிக்கும்
கருத்துகள்