இரயில்வே அமைச்சகம் ரயில்வே சாராத நோயாளிகளுக்கு கொவிட் பரிசோதனை கட்டணம் மற்றும் கொவிட் தொடர்பான மருத்துவமனை சிகிச்சையின் போது வழங்கப்படும் உணவு கட்டணத்தை ரயில்வே தள்ளுபடி செய்தது
ரயில்வே சாராத நோயாளிகளுக்கு கொவிட் பரிசோதனை கட்டணம் மற்றும் கொவிட் தொடர்பான மருத்துவமனை சிகிச்சையின் போது வழங்கப்படும் உணவு கட்டணத்தை இந்திய ரயில்வே தள்ளுபடி செய்தது.
'அரசின் அனைத்தும்' எனும் அணுகுமுறையை இந்திய அரசு பின்பற்றி வருவது நினைவிருக்கலாம். இதன் மூலம், கொவிட் பெருந்தொற்றை எதிர்த்துப் போராடுவதில் அனைத்து அமைச்சகங்கள்/ துறைகள் ஒன்றாக பணியாற்றுகின்றன.
இதன் தொடர்ச்சியாக, முகாம்கள் மற்றும் குழு அமைப்புகளில் ரயில்வே சாராதவர்களுக்கு ஆர்டிபிசிஆர் / துரித ஆண்டிஜன் பரிசோதனைக்கான கட்டணத்தை ரத்து செய்ய ரயில்வே வாரியம் முடிவெடுத்துள்ளது.
மேலும், கொவிட் தொடர்பான மருத்துவமனை சிகிச்சையின் போது வழங்கப்படும் உணவு கட்டணத்தையும் ரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கொவிட் பெருந்தொற்றுக்கு எதிரான போரில் ரயில்வே முன்னணியில் இருந்து தனது முழு பலத்துடன் போராடி வருகிறது. கொவிட் பராமரிப்பு பெட்டிகள், ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்கள், விநியோக சங்கிலிகளை பராமரித்தல், பயணிகள் ரயில்களை இயக்குவது என பல்வேறு விதங்களில் ரயில்வே பங்காற்றி வருகிறது.
:
கருத்துகள்