வானொலியில் வாக்கு எண்ணிக்கை பற்றிய ஐந்து நிமிட சிறப்பு செய்தி அறிக்கைகளை, தொடர்ச்சியாக ஒலிபரப்பாகும்.
வாக்கு எண்ணிக்கை குறித்து சிறப்பு அறிக்கை தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே இரண்டாம் தேதியன்று, சென்னை அகில இந்திய வானொலியின் மாநில செய்திப்பிரிவு, வாக்கு எண்ணிக்கை பற்றிய ஐந்து நிமிட சிறப்பு செய்தி அறிக்கைகளை, தொடர்ச்சியாக ஒலிபரப்ப உள்ளது.
இந்த செய்திகள் மாநிலம் தழுவிய எஃப்எம் ரெயின்போ பண்பலை மற்றும் சென்னை-ஒன்று மத்திய அலைவரிசை நெட்வொர்க்கில் ஒலிபரப்பாகும்.
காலை, மணி எட்டு முப்பதிலிருந்து மாலை ஆறு மணிவரை ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கு ஒருமுறை வாக்கு எண்ணிக்கை பற்றிய சிறப்பு செய்திகள் ஒலிபரப்பாகும். மாலை ஏழு மணியிலிருந்து இரவு 11 மணிவரை இந்த சிறப்புச் செய்திகள் ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை ஒலிபரப்பாகும்.
சென்னை-1 மத்திய அலைவரிசை மற்றும் அதன் மாநில நெட்வொர்க்கில் வழக்கமாக ஒலிபரப்பாகிவரும் மாலை மணி ஆறு முப்பது மாநிலச் செய்திகள், இரவு மணி ஏழு பதினைந்து ஆகாசவாணி தமிழ்ச் செய்திகள், பிற்பகல் மணி ஒன்று 45-க்கு திருச்சியிலிருந்து ஒலிபரப்பப்படும் மாநிலச்செய்திகள் ஆகியவற்றின் ஒலிபரப்பு நேரம், பத்து நிமிடங்களிலிருந்து பதினைந்து நிமிடங்களாக நீட்டிக்கப்படுகின்றன.
இதுதவிர, தில்லியிலிருந்து வழக்கமாக ஒலிபரப்பாகும் ஆங்கிலம் மற்றும் இந்தி தேசியச் செய்திகள், முன்பு போலவே சென்னை-1, சென்னை-2, எஃப்எம் கோல்ட் பண்பலை ஆகியவற்றில் அஞ்சல் செய்யப்படும்.
சென்னை அகில இந்திய வானொலி நிலையத்தின், துணை இயக்குநர் திரு எம் ஜெய்சிங் (செய்தி) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது
கருத்துகள்