பல்சேட்டிங் உணர்திறன் சாதனம் அடிப்படையிலான மின் கடத்துத்திறன் மீட்டர்”, கல்பாக்கம்.அணு ஆராய்ச்சி மையம்
இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம்
“பல்சேட்டிங் உணர்திறன் சாதனம் அடிப்படையிலான மின் கடத்துத்திறன் மீட்டர்”, கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் (ஐஜிசிஏஆர்), எலெக்ட்ரானிக்ஸ் & இன்ஸ்ட்ரூமென்டேஷன் குழுமத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பயன்பாடு, பகுப்பாய்வு மற்றும் தரக் கட்டுப்பாட்டுக்கான வேதியியல் ஆய்வகங்களில் மட்டும் அல்லாது, இது நீர்நிலைக் கரைசலின் மின் கடத்துத்திறனின் நிகழ்நேர கண்காணிப்புக்கு, தொழில்துறை மற்றும் களப் பயன்பாடுகளில் பொருத்தமானது. இந்த சாதனத்தின் செயல்திறன் ஐஜிசிஏஆரில் உள்ள பல பயன்பாடுகளில் சரிபார்க்கப்பட்டது. கடுமையான சூழல்களில் கூட நன்கு செயல்படும் திறன் வாய்ந்தது.
இந்த தொழில்நுட்பத்தை இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம் இன்று (29.4.2021) பெங்களூரில் உள்ள சர்வ் எக்ஸ்எல் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு பகிர்ந்தது. இன்குபேஷன் சென்டர், இந்நிறுவனத்துடன் ஏற்பாடு செய்த ஆன்லைன் சந்திப்பில், அணு ஆராய்ச்சி மைய இயக்குநர் டாக்டர் அருண்குமார் பாதுரி, தொழில்நுட்ப உரிம ஒப்பந்தம் மற்றும் தொழில்நுட்ப ஆவணங்களை சர்வ் எக்ஸ்எல் எண்டர்பிரைசஸ் உரிமையாளர் திரு விக்ரம் படாக்கிக்கு வழங்கினார். சந்திப்பில் டாக்டர். பி. வெங்கட்ராமன், இயக்குநர் SQRMG (IGCAR), திரு. ௭ஸ். ரகுபதி, இயக்குநர் EIG (IGCAR), டாக்டர் என். சுப்பிரமணியன், தலைவர், இன்குபேஷன் சென்டர்-IGCAR, திரு. ஜி பிரபாகரராவ், தலைவர், SISD (IGCAR) மற்றும் பிற மூத்த வி்ஞ்ஞானிகளும், சர்வ் எக்ஸ்எல் நிறுவனத்தை சார்ந்தவர்களும் கலந்துக்கொண்டனர்.
௮ணுசக்தி துறையால் இன்குபேஷன் சென்டர்- ஐஜிசிஏஆர் சமீபத்தில் அமைக்கப்பட்டது. இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் இன்குபேஷன் பற்றிய கூடுதல் தகவலுக்கு “incubation@igcar.gov.in” என்கின்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம
இந்தத் தகவலை இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
கருத்துகள்