சட்டீஸ்கர் உயர்நீதிமன்ற நீதிபதியாக திருமதி விம்லா சிங் கபூர் நியமனம்.நீதிபதி சரத் குமார் குப்தா பதவி விலகினார்
சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் சட்டீஸ்கர் உயர்நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதி சரத் குமார் குப்தா பதவி விலகினார்
சட்டீஸ்கர் உயர்நீதிமன்ற நீதிபதி சரத்குமார் குப்தா, 2021 மார்ச் 31ம் தேதி முதல் பதவி விலகியுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை, மத்திய சட்டம், நீதி அமைச்சகத்தின் நீதித்துறை வெளியிட்டுள்ளது.
நீதிபதி திரு சரத் குமார் குப்தா, பி.எஸ்சி., எல்எல்.பி, கடந்த 1985ம் ஆண்டு நீதித்துறையில் இணைந்தார். பல இடங்களில் அவர் நீதித்துறை அதிகாரியாக பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார். அவர் சட்டீஸ்கர் உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக கடந்த 2017ம் ஆண்டு நியமிக்கப்பட்டார் மற்றும் நிரந்தர நீதிபதியாக கடந்த 2019ம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.
சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவல்
சட்டீஸ்கர் உயர்நீதிமன்ற நீதிபதியாக திருமதி விம்லா சிங் கபூர் நியமனம்
சட்டீஸ்கர் உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதி திருமதி விம்லா சிங் கபூரை, அதே நீதிமன்றத்தில் நீதிபதியாக குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார். அவர் பதவி ஏற்கும் நாளில் இருந்து இது அமலுக்கு வரும். இது தொடர்பான அறிவிப்பை மத்திய சட்டம், நீதி அமைச்சகத்தின் நீதித்துறை இன்று வெளியிட்டுள்ளது.
திருமதி விம்லா சிங் கபூர், பி.எஸ்.சி எல்எல்.பி., கடந்த 1987ம் ஆண்டு இரண்டாம் நிலை சிவில் நீதிபதியாக நீதித்துறையில் சேர்ந்தார். கடந்த 2018ம் ஆண்டு, இவர் சட்டீஸ்கர் உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக 2 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் கடந்த 2020ம் ஜூன் மாதத்திலிருந்து மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது.
கருத்துகள்