“அற்பக் காரணங்களுக்காக வழக்குத் தொடரக்கூடாது”புதிய தமிழகம் கட்சி கிருஷ்ணசாமி
வழக்கைத் தள்ளுபடி செய்தது நீதிமன்றம்
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் பணப்பட்டுவாடா செய்ததால் வாக்கு எண்ணிக்கைக்குத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது இன்று 30 ஏப்ரல் 2021 லவ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கிருஷ்ணசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பணப்பட்டுவாடா தொடர்பாக விசாரிப்பதற்காக உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும். தற்போதைய நிலையில் வாக்கு எண்ணிக்கைக்குத் தடை விதிக்க வேண்டும்" எனக் கோரிக்கை வைத்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், " அற்பக் காரணங்களுக்காக வழக்குத் தொடரக்கூடாது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் நீங்கள் புகார் அளித்துள்ளீர்கள், அவர்கள் தான் முடிவெடுக்க வேண்டும். மேலும், உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைப்பதற்கு உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை மே 2 ஆம் தேதி அன்று எண்ணத் தடை இல்லை” எனக் கூறிய நீதிபதிகள், கிருஷ்ணசாமி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
கருத்துகள்