டில்லி, ஹரியானா, சண்டிகரில் சில இடங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜுன் 3 ல் துவங்கும்
புவி அறிவியல் அமைச்சகம்
தில்லி, ஹரியானா, சண்டிகரில் ஒரு சில இடங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு
தில்லி, ஹரியானா, சண்டிகரில் ஒரு சில இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது.
பீகார், மேற்கு வங்கம், சிக்கிம், அசாம், மேகாலயா, கேரளா மற்றும் மாஹேவில் ஒரு சில இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
வட மாநிலங்கள் பலவற்றில் ஒரு சில இடங்களில், இன்றும் நாளையும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றும் வீசும் எனவும் வானிலை முன்னறிவிப்பு மையம் தகவல் புவி அறிவியல் அமைச்சகம்
கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் 3 ஆம் தேதி தொடங்க வாய்ப்பு
கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் 3 ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது.
அந்த மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சமீபத்திய வானிலை அறிகுறிகளின் படி, தென் மேற்கு பருவக்காற்று ஜூன் 1 ஆம் தேதி முதல் படிப்படியாக வலுவடைந்து கேரளாவில் மழைப் பொழிவை அதிகரிக்கும் என தெரிகிறது. ஆகையால், கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் 3 ஆம் தேதி தொடங்கும் எனத் தெரிகிறது.
அரபிக் கடலின் கிழக்கு மத்திய பகுதியில் கர்நாடக கடலோர பகுதிக்கு மேலே 3.1 கி.மீ தொலைவில் புயல் சுழற்சி காணப்படுகிறது.
இந்த புயல் சுற்று தமிழகம் மற்றும் அதன் அருகேயுள்ள பகுதிகளில் கடல் மட்டத்தில் இருந்து 5.8 மற்றும் 7.6 கி.மீ உயரத்தில் உள்ளது.
கருத்துகள்