முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு.
நடிகையின் புகாரில்
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது வழக்கு
நாடோடிகள் படத்தின் நடிகை சாந்தினி மணிகண்டன் மீது கொடுத்த பாலியல் புகார் மீது தற்போது முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
புகாரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாகவும் மூன்று முறை கருக்கலைப்பு செய்ய கட்டாயப்படுத்தியதுமட்டுமின்றி அடித்துத் துன்புறுத்தியதாகவும் ஆதாரங்களுடன் காவல் நிலையத்தில் அளித்த புகார் முற்றிலும் பொய்யானது என முன்னாள் அமைச்சர் மணிகண்டன் விளக்கம் அளித்த நிலையில் நடிகை சாந்தினி அளித்த புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல் நிலையம் அவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல், நம்பிக்கை மோசடி, அடித்துக் காயம் ஏற்படுத்துதல், பெண்ணின் அனுமதி இல்லாமல் கட்டாயப்படுத்தி கருவை கலைத்தல் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது மணிகண்டன் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது என்னையும் சட்டப்பேரவைக்கு வரச் சொல்லி இருந்தார் என நடிகை பேட்டி அளித்தார்
சினிமா நடிகை சாந்தினி எல்லா மாஜி அதிமுக அமைச்சர்களோடும் நின்று படம் எடுத்துள்ளார். காக்கிவாடன்பட்டி ஜெயலட்சுமி மாதிரி அதிமுகவில் அதிகாரம் செலுத்தியுள்ளார் என்பதும் தெரிகிறது. மலேஷியாவிலிருந்து வந்த இவரின் சொந்த ஊர் சேலம் என்று சொல்லப்படுகிறது.
இந்தப் புகார் குறித்து முன்பே விளக்கமளித்துள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ’சாந்தினி என்ற பெண் யாரென்று தனக்கு தெரியாது என்றும், புகைப்படம் இருப்பதாகவும் பணம் கொடுத்தால் வெளியே சொல்ல மாட்டோம் என்ற அவரது கும்பல் மிரட்டியதாகவும், நேரில் சென்று விசாரித்த போது அந்த கும்பல் பணம் பறிக்கும் கும்பல் எனத் தெரிய வந்ததாகவும் கூறினார். முதலில் ரூபாய்.3 கோடி வரை பேரம் பேசிய அந்தக் கும்பல் அதன் பின்னர் படிப்படியாக இறங்கி 30 லட்சம் வரை கொடுங்கள் என தன்னிடம் பேரம் பேசினார்கள் என்றும், தவறு செய்யாத நான் ஏன் அவர்களுக்குப் பணம் கொடுக்க வேண்டும்? பயப்படவேண்டும் என்று பணம் கொடுக்க மறுத்து விட்டேன் என்றும் கூறியுள்ளார். முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் இந்த விளக்கத்தை அடுத்து தற்போது முன்னாள் அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் மற்றும் அவரது உதவியாளர் பரணி ஆகியோருக்கு எதிராகக் குற்ற எண் 5/2021 அடையார் அனைத்து பெண்கள் காவல் நிலையம் U/S 313 பெண்கள் அனுமதியின்றி கருச்சிதைவு, 323 (தானாக முன்வந்து காயத்தை ஏற்படுத்துகிறது), 417 (மோசடி), 376 (கற்பழிப்பு), 506 (i) (குற்றவியல் மிரட்டல்), பிரிவு 67A.Section 376 அதிகபட்ச ஆயுள் தண்டனையைக் கொண்டுள்ளது போன்ற பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள்