பாதுகாப்பு அமைச்சகம் இந்திய கடற்படை விமானத்தில் ஐசியு பொருத்தி ஏர் ஆம்புலன்ஸாக மாற்றம்
இந்திய கடற்படையின் ஏஎல்எச் மார்க் 3 ரக விமானத்தில் மருத்துவ ஐசியு வசதியை இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம்(எச்ஏலெ்) பொருத்தியுள்ளது.
இந்திய கடற்படையின் விமான தளமான ஐஎன்எஸ் ஹன்சாவில் உள்ள ‘ஏஎல்எச் மார்க் 3’ ரக விமானத்தில் ஐசியு வசதிகளை பொருத்த முடிவு செய்யப்பட்டது.
இதன் மூலம் மோசமான வானிலை சமயத்தில், ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளை கடற்படை விமானம் மூலம் கொண்டு செல்ல முடியும்.
கடற்படை விமானத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஐசியுவில் இரண்டு செட் டெஃபிரிலேட்டர்கள், மல்டி பாரா மானிட்டர்கள், வென்டிலேட்டர், ஆக்ஸிஜன் வசதி உள்பட பல வசதிகள் உள்ளன. நோயாளியின் உடலில் இருந்து திரவங்கள் மற்றும் காற்றுக்களை உறிஞ்சுவதற்கான கருவிகளும் இதில் உள்ளன. இவைகள் விமானத்தின் மின் சப்ளை மூலம் செயல்படும்.
மேலும் பேட்டரியில் 4 மணி நேரம் வரை இவை இயங்கும் திறனுள்ளவை. இந்த கருவிகளை 3 மணி நேரத்தில் பொருத்தி ஒரு விமானத்தை ஏர் ஆம்புலன்ஸாக மாற்ற முடியும். இந்திய கடற்படைக்கு, எச்ஏஎல் நிறுவனம் வழங்கவுள்ள 8 மருத்துவ ஐசியுக்களில் இது முதல் ஐசியு என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்