எரிசக்தி அமைச்சகம் டையூ பகுதியில் மின் விநியோகத்தை சீரமைத்தது பவர்கிரிட்
டவ்-தே புயல் காரணமாக, டையூவில் துண்டிக்கப்பட்ட மின் விநியோகத்தை, மத்திய மின்துறை அமைச்சகத்தின் பவர்கிரிட் நிறுவனம் மீண்டும் சீரமைத்தது.
டவ்-தே புயல் காரணமாக டையூ பகுதியில் திம்ப்டி-தோகத்வா மற்றும் சாவர்குண்ட்லா-தோகத்வா மின்வழித் தடத்தில் 220 கிலோ வாட் மின் பரிமாற்ற கோபுரங்கள் மற்றும் வயர்கள் பலத்த சேதமடைந்தன.
இவற்றை சரிசெய்யும் பணியில் பவர்கிரிட் நிறுவனத்தின் அவசரகால மீட்பு குழுவைச் சேர்ந்த 600 பேர் 24 மணி நேரமும் தொடர்ந்து ஈடுபட்டனர். இங்கு 10 மின்கோபுரங்கள் புதிதாக அமைக்கப்பட்டன.
திம்ப்டி-தோகத்வா மின் வழித்தடத்தில் மின்விநியோகம் கடந்த 28ம் தேதி மீண்டும் தொடங்கியது.
இதன் மூலம் டையு மற்றும் அதன் அருகேயுள்ள பகுதிகளில் கெட்கோவின் 66 கிலோ வாட் திறனுள்ள 15 துணை மின் நிலையங்களுக்கு மின்சாரம் விநியோகிக்க முடிந்தது. சாவர்குண்ட்லா-தோகத்வா மின்வழித்தடத்தில் தற்போது சீரமைப்பு பணிகள் நடைப்பெற்று வருகின்றன.
கருத்துகள்