இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரின் அலுவலகம்
இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரால் தற்சார்பு விவசாய செயலி அறிமுகப்படுத்தப்பட்டது
இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் கே விஜய்ராகவனால் தற்சார்பு விவசாய செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. விவசாயம் குறித்த தகவல்கள் மற்றும் வானிலை முன்னறிவிப்புகள் குறித்து விவசாயிகளுக்கு தெரிவிப்பதற்காக இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு உதவுவதற்கான தேசிய டிஜிட்டல் தளமான கிசான் மித்ரின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலி பல்வேறு தகவல்களை விவசாயிகளுக்கு அளிக்கும்.
மண்ணின் வகை, மண்வளம், ஈரப்பதம், வானிலை, நீர்பிடிப்பு, பயிர் தேர்வு, உரம் மற்றும் தண்ணீர் தேவை குறித்த விவரங்களை விவசாயிகளுக்கு இந்த செயலி வழங்கும். 12 மொழிகளில் தகவல்களை இச்செயலி வழங்கும்.
விவசாயிகளிடமிருந்து எந்த தகவல்களையும் இந்த செயலை பெறாது. ஒரு பகுதி தொடர்பான தகவலை அதன் அஞ்சல் குறியீட்டு எண்ணை பதிவு செய்வதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்
கருத்துகள்