ஜல்சக்தி அமைச்சகம் கங்கை ஆற்றுப் படுகையின் பனிப்பாறை ஏரி அட்லஸ் வெளியீடு
கங்கை ஆற்று படுகையின் பனிப்பாறை ஏரி நிலப்பட ஏட்டை (அட்லஸ்) நீர் வளம், ஆற்று மேம்பாடு மற்றும் கங்கை புத்தாக்க துறை செயலாளர் திரு பங்கஜ் குமார் காணொலி நிகழ்ச்சி ஒன்றில் இன்று வெளியிட்டார்.
கங்கை தோன்றும் பகுதியில் இருந்து இமலாய அடிவாரம் வரை 2,47,109 சதுர கிலோமீட்டர் தொலைவுக்கு உள்ள பனிப்பாறை ஏரிகளின் அடிப்படையில் இந்த கங்கை ஆற்று படுகையின் பனிப்பாறை ஏரி நிலப்பட ஏடு உருவக்கப்பட்டுள்ளது.
என்ஆர்எஸ்சி, இஸ்ரோ மற்றும் நீர் வளம், ஆற்று மேம்பாடு மற்றும் கங்கை புத்தாக்க துறையின் என்எச்பி இணையதளங்களான https://bhuvan.nrsc.gov.in/nhp/, www.indiawris.gov.in மற்றும் www.nhp.mowr.gov.in ஆகியவற்றில் இந்த அட்லஸை காணலாம்.
என்ஆர்எஸ்சி-ன் என்எச்பி-புவன் இணையதள்த்தை விண்வெளித்துறை செயலாளரும் இஸ்ரோ தலைவருமான டாக்டர் கே சிவன் தொடங்கி வைத்தார். என்எச்பி-யின் கீழ் என்ஆர்எஸ்சி எடுத்துள்ள நடவடிக்கைகளின் தகவல் களஞ்சியமான இந்த தளத்தில், அறிக்கைகள் மற்றும் அறிவுசார் பொருட்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இணைய முகவரி: https://bhuvan.nrsc.gov.in/nhp/
கருத்துகள்