பிரதமரின் உணவு பதப்படுத்துதல் குறு நிறுவனங்கள் முறைப்படுத்துதல் திட்டம் ஒரு வருடத்தை பூர்த்தி செய்தது
உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம் தற்சார்பு இந்தியா இயக்கத்தின் கீழ் தொடங்கப்பட்ட பிரதமரின் உணவு பதப்படுத்துதல் குறு நிறுவனங்கள் முறைப்படுத்துதல் திட்டம் ஒரு வருடத்தை பூர்த்தி செய்தது
தற்சார்பு இந்தியா இயக்கத்தின் கீழ் தொடங்கப்பட்ட மத்திய அரசு நிதியுதவி பெற்ற பிரதமரின் உணவு பதப்படுத்துதல் குறு நிறுவனங்கள் முறைப்படுத்துதல் திட்டம் ஒரு வருடத்தை பூர்த்தி செய்துள்ளது. அமைப்புசாரா உணவு பதப்படுத்துதல் துறையில் உள்ள குறு நிறுவனங்களின் போட்டித்தன்மையை மேம்படுத்துவதும், துறையின் முறைப்படுத்தலை மேம்படுத்துவதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.
2020 ஜூன் 29 அன்று தொடங்கப்பட்ட பிரதமரின் உணவு பதப்படுத்துதல் குறு நிறுவனங்கள் முறைப்படுத்துதல் திட்டம், 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கான இணையதளம் 2021 ஜனவரி 25 அன்று தொடங்கப்பட்டது.
9000-க்கும் அதிகமான தனிநபர் பயனாளிகள் இணையதளத்தில் தங்களை பதிவு செய்துகொண்டுள்ளனர். 3500-க்கும் அதிகமான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
பிரதமரின் உணவு பதப்படுத்துதல் குறு நிறுவனங்கள் முறைப்படுத்துதல் திட்டத்தின் ஒரு மாவட்டம் ஒரு பொருள் பிரிவின் கீழ் 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 707 மாவட்டங்களில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் பரிந்துரைக்கப்பட்ட 137 பிரத்யேக பொருட்கள் உள்ளிட்டவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் தொடர்பு வங்கியாக இருப்பதற்காக யூனியன் வங்கியுடன் ஒப்பந்தமிடப்பட்டுள்ளது. கடன் வழங்கும் பங்குதாரர்களாக செயல்படுவதற்காக 11 வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.
தமிழ்நாடு, கர்நாடகா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், ஜம்மு & காஷ்மீர், மத்தியப் பிரதேசம், தெலங்கானா, சத்தீஸ்கர், ஹிமாச்சலப் பிரதேசம், கேரளா, சிக்கிம், அந்தமான் & நிகோபார், ஆந்திரப் பிரதேசம், மேகாலயா, மிசோராம், ஒடிசா மற்றும் உத்தரகாண்ட் உள்ளிட்ட 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 54 பொது வழிகாட்டுதல் மையங்கள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
2020-21 முதல் 2024-25 வரையிலான ஐந்து வருட காலத்திற்கு 10,000 கோடிக்கும் அதிகமான மதிப்பீட்டில் 2,00,000 குறு உணவு பதப்படுத்துதல் நிறுவனங்களுக்கு நேரடி உதவி வழங்குவதை இத்த்திடம் நோக்கமாக கொண்டுள்ளது.
திட்டம் குறித்த https://pmfme.mofpi.gov.in/pmfme/#/Home-Page
கருத்துகள்