ஜல்சக்தி அமைச்சகம் நதிகளை பாதுகாப்பதில் கவனம்
நாட்டில் வற்றாத ஜீவ நதிகள் மற்றும் மழை அல்லாத நேரங்களில் வறண்டு காணப்படும் வறண்ட நதிகள் என இரண்டு வகையான நதிகள் உள்ளன. நகரங்களிலிருந்தும், தொழிற்சாலைகளிலிருந்தும் வெளியேற்றப்படும் சுத்திகரிக்கப்படாத அல்லது பகுதி அளவாக சுத்திகரிக்கப்பட்ட கழிவுகள் நதிகளின் நீர்பிடிப்புப் பகுதிகளில் கலப்பது, கழிவுநீர் மறுசூழற்சி நிலையங்கள் சரியான வகையில் இயங்காதது, அவை முறையாகப் பராமரிக்கப்படாதது, வேகமாக அதிகரிக்கும் நகரமயமாதல் மற்றும் தொழிற்சாலைகள் ஆகியவை நதிகள் மாசுபடுவதற்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன.
நதிகளை தூய்மைப்படுத்தும் பணி மற்றும் மறுசீரமைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இது தொடர்பாக மாநிலங்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுடன் மத்திய அரசு சார்பில் கூடுதலாக நிதி உதவி, தொழில்நுட்ப உதவி வழங்கப்படுகிறது. கங்கை மற்றும் அதன் கரையை ஒட்டி அமைந்துள்ள நதிகளை தூய்மைப்படுத்த நமாமி கங்கே திட்டம், மற்ற நதிகளை தூய்மைபடுத்த தேசிய நதி பாதுகாப்புத் திட்டம் (NRCP) ஆகியவை செயல்படுத்தப்படுகிறது. மேலும், சிறிய நதிகளைப் பாதுகாக்க மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
தேசிய நதிகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இதுவரை 16 மாநிலங்களில் 77 நகரங்களில் பயணிக்கும் 34 நதிகளில் மாசடைந்துள்ள பகுதிகளில் தூய்மைப்படுத்த ரூ.5965.90 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நமாமி கங்கே திட்டத்தின் கீழ் ரூ.30235 கோடி ரூபாய் மதிப்பில் 346 திட்டங்கள் மேற்கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இவற்றுடன் அம்ருத் திட்டம் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களின் கீழ் பாதாள சாக்கடை உள்கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படுகிறது.
அட்டல் பூஜல் திட்ட நிதி
அட்டல் பூஜல் திட்டம் 2020-2021 நிதியாண்டு முதல் தொடங்கப்பட்டு, தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது, இதன்படி ஹரியானா மாநிலத்துக்கு ரூ.20.80 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் ஆந்திர மாநிலத்தில் செயல்படுத்தப்படவில்லை.
இந்த தகவல்களை மத்திய ஜல் சக்தி மற்றும் உணவு பதப்படுத்துதல் துறை இணையமைச்சர் திரு.பிரஹலாத் சிங் படேல் மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக வழங்கினார்
கருத்துகள்