மீராபாய் சானுவை கவுரவிக்க, வேலூர் தலைமை தபால் நிலையத்தில் பிரத்தியேக மின்னணு-தபால் கவுன்டர் திறப்பு
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற இந்தியாவின் மீராபாய் சானுவுக்கு ரூ.10 செலவில் மின்னணு-தபால் மூலம் வாழ்த்துகள் அனுப்பி கவுரவிக்க, ஒரு பிரத்தியேக மின்னணு-தபால் கவுன்டர் வேலூர் தலைமை தபால் அலுவலகத்தில் 29.07.2021ம் தேதி அன்று காலை 10 மணிக்கு திறக்கப்பட்டது.
நடக்கவிருக்கும் போட்டிகளுக்கு, இந்திய ஒலிம்பிக் குழுவினருக்கு, நாம் மின்னணு-தபால் மூலம் வாழ்த்துகள் தெரிவிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியை கடந்த 2011ம் ஆண்டு ஜார்கண்ட்டில் நடந்த தேசிய விளையாட்டு போட்டியில் பளுதூக்கும் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற மற்றும் 2010ம் ஆண்டு உதய்பூரில் நடந்த சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற திரு எம். தமிழ் செல்வன் தொடங்கி வைத்தார். இவர் தற்போது, தபால் துறையில் தபால்காரராக பணியாற்றுகிறார்.
இந்நிகழ்ச்சிக்கு வேலூர் பிரிவு தபால் அலுவலகங்களின் கண்காணிப்பாளர் திரு பி.கோமல் குமார் தலைமை தாங்கினார். மின்னணு-தபால் வசதியை பயன்படுத்தி, இந்தியர்களை பெருமைபட வைத்த இந்தியாவின் மீராபாய் சானுவுக்கு வாழ்த்துகள் அனுப்பும்படி அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், வெற்றியாளர்களை ஊக்குவிப்பது மற்றும் திறமையாளர்களை அங்கீகரிப்பது ஆகும்.
இவ்வாறு வேலூர் பிரிவு தபால் அலுவலகங்களின் கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்