எரிசக்தி அமைச்சகம் திரிபுராவில் 132/33/11 கி.வா மோகன்பூர் துணை மின் நிலையத்தை நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்
திரிபுராவில் 132/33/11 கி.வா மோகன்பூர் துணை மின் நிலையத்தை நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். இந்தத் துணை நிலையம் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் மூலம் கட்டப்பட்டது.
27 ஆகஸ்ட், 2021 அன்று நடைபெற்ற இந்த தொடக்க நிகழ்ச்சியில் திரிபுரா மாநில முதல் அமைச்சர், திரு பிப்லப் குமார் தேப், திரிபுரா மாநிலத்தின் துணை முதல் அமைச்சர் திரு. ஜிஷ்ணு தேவ் வர்மா மற்றும் திரிபுரா மாநிலக் கல்வி அமைச்சர், திரு. ரதன் லால் நாத் ஆகியோர் முன்னிலையில் நிதி அமைச்சர் இந்த துணை மின் நிலையத்தைத் தொடக்கிவைத்தார்.
கருத்துகள்