தர்மபுரி மாவட்டம் மாதேமங்கலம் குட்டூர் கிராமத்தைச் சேர்ந்த மெக்கானிக்கல் பொறியாளர் முரளிதரன் பிடெக் படித்த Er.ஞானமொழியை திருமணம்
செய்வதாக சொல்லி 13 ஆண்டுகள் காதலித்து செய்து ஏமாற்றிய நிலையில்.. அந்த பெண் முரளிதரன் வீட்டு வாசலில் விஷமருந்தி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதுகுறித்து அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட குடும்பம் புகார் அளித்து எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை, எனவும் சவக்கூறாய்வு செய்த அந்த பெண்ணின் சவத்தை வாங்க மறுத்து உறவினர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி னார்கள், அதன் விளைவாக தர்மபுரி காவல்துறை ஆய்வாளர் மற்றும்
தொப்பூர் காவல் நிலைய ஆய்வாளர் ஆகிய இருவரும் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாகவும் , சம்பவம் நடந்த மாலைக்குள் 174 ஆக பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையினை 306 ஆக பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்கின்றோம் என்ற உறுதிமொழியை அழித்ததன் காரணமாக அந்த பெண்ணின் சவத்தை பெற்று வந்து இறுதிச் சடங்குகளை உறவினர்கள்
செய்து முடித்துள்ள நிலையில் குற்றம்சாட்டப்பட்ட எதிர் தரப்பை சேர்ந்த முரளிதரனின் தங்கை கணவர் குமரன் என்பவர் தர்மபுரி மாவட்டத்தில் வட்டாட்சியராக பணி செய்து வருவதாகவும். ஆகவே அவரது செல்வாக்கை மீறி இறந்த பெண் உறவினர்களால் சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டு தமிழ்நாடு காவல்துறை தலைவரிடம் இறந்த பெண் உறவினர்களால் "எங்க வீட்டுப் பெண்ணை ஏமாற்றி இரண்டு முறை # கருக்கலைப்பு செய்து காதல் என்ற பெயரில் நாடகமாடிய முரளிதரனை கைது செய்யாமல் அவனது தந்தையை மட்டும் கைது செய்து சிறைக்கு அனுப்பி உள்ளதாக" கூறிய நிலையில் அதியமான்கோட்டை காவல்துறை மீது இறந்த பெண்ணிற்கான நியாயத்தை பெற அவரது உறவினர்கள் சார்பில் புகாரில் ஆதங்கத்தை ஆதாரங்கள் கொண்டு அளித்துள்ளார்கள். தவறு யார் செய்தாலும் நடவடிக்கை தேவை தான்.
கருத்துகள்