ரூபாய் .5 கோடி மோசடி வழக்கு: எஸ்.ஆர்.தேவர் என்ற ராஜசேகர் தெலுங்கானா காவல்துறையினரால் கைது.
தெலுங்கானா மாநிலத்தில் ரூபாய். 5 கோடி மோசடி செய்ததாக சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வசிக்கும் ஐந்து மாவட்ட விவசாய சங்கத் தலைவர் மற்றும் அகில இந்திய மூவேந்தர் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளரான எஸ் ஆர் தேவர் என்ற ராஜசேகர் என்பவரை தெலுங்கானாவிலிருந்து வந்த ஐந்து பேர் கொண்ட காவல் துறையினர் இன்று ஆகஸ்ட் - 31 செவ்வாய்க்கிழமை கைது செய்து தெலுங்கானாவிற்கு அழைத்துச் சென்றனர்.
கைது செய்யப்பட்ட எஸ்.ஆர். தேவர் 2021 தமிழக சட்டபேரவைத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் திருச்சுழி தொகுதியில் போட்டியிட்டவர்.
இவர் தெலுங்கானாவில் உள்ள காமிநேனி மருத்துவமனைக்கு ரூபாய்.300 கோடி கடன் வாங்கித் தருவதாகக் கூறி 2018 ஆம் ஆண்டு ரூபாய். 5 கோடிக்கு டாக்குமெண்ட் சார்ஜ் என்று வாங்கி விட்டு ஏமாற்றியதாக லெட்சுமி நாரயணன் என்பவர் அளித்த புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டார். ஹைதராபாத் கிங்கோட்டி சுப்பிரமணியன் மகன் லட்சுமிநாராயணன். இவரது தொழிலை விரிவு படுத்த காரைக்குடியைச் சேர்ந்த ராஜேஷ் சந்திரன், பெருமாள்ராஜ் தங்களுக்கு தெரிந்த ஒருவரிடம் கடன் வாங்கித் தருவதாகக் கூறி, எஸ்.ஆர்.தேவர் என்ற எஸ்.ராஜசேகரை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
2018 ஆம் ஆண்டில் கடன் பெறுவதற்காக இவர்களிடம் டாக்குமென்ட் செலவாக, லட்சுமி நாராயணன் ரூ.2.70 கோடி கொடுத்துள்ளார். கடன் வாங்கித் தராததோடு, வாங்கிய பணத்தையும் திரும்பத் தர வில்லை எனக்கூறி 2020 ஆம் ஆண்டில் தெலுங்கானா காவல்துறையில் லட்சுமி நாராயணன் புகார் செய்தார்.
காரைக்குடி வந்த ஹைதராபாத் சைபர் கிரைம் எஸ்.ஐ., பால்ராஜ் தலைமையிலான காவல்துறை எஸ்.ராஜசேகரை உள்ளூர் காவல்துறை உதவியுடன் கைது செய்தனர்.
காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு பின்னர் கைது செய்து தெலுங்கானா காவல்துறையினர் கூட்டிச் சென்றனர். , விசாரணையில் இறங்கிய தெலுங்கானா போலீசார், காரைக்குடி அண்ணாநகர் வீட்டில் பதுங்கியிருந்த எஸ்ஆர் தேவரை இன்று காலை கைது செய்தனர்.
தொடர்ந்து அவரை காரைக்குடி வடக்கு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்பு காரைக்குடி முதன்மை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பாலமுருகன் முன்பு ஆஜர்படுத்தி மேல் விசாரணைக்காக தெலுங்கானாவிற்கு கூட்டிச் சென்றனர். காரைக்குடியில் வசிக்கும் எஸ்.ஆர். தேவர் ஏற்கனவே 10 லட்சம் கேட்டு மிரட்டிய வழக்கில் புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். மறைந்த பிரபல நடிகர் ஜெமினி கணேசனின் மருமகனான டாக்டர் செல்வராஜிடம் ரூபாய் 3 கோடி ஏமாற்றியதாக சிவகங்கை மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். அத்துடன் பத்திரிகையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது பிற மாவட்டங்கள், மாநிலங்கள் என 16 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்தது. இதன் காரணமாக அவர் கடந்த 2013 ஆம் ஆண்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கருத்துகள்