பாராலிம்பிக் போட்டிகளில் உயரம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக மாரியப்பன் தங்கவேலுவுக்கு பிரதமர் தமிழ்நாடு முதல்வர் பாராட்டு
பிரதமர் அலுவலகம் பாராலிம்பிக் போட்டிகளில் உயரம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக மாரியப்பன் தங்கவேலுவுக்கு பிரதமர் தமிழ்நாடு முதல்வர் பாராட்டு
டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டிகளில் உயரம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக மாரியப்பன் தங்கவேலுவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“உயரே, உயரே எழும்புகிறீர்கள்! தொடர்சியான, சிறப்பான செயல்திறனுக்கு எடுத்துக்காட்டாக மாரியப்பன் தங்கவேலு திகழ்கிறார். வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக அவருக்கு வாழ்த்துகள். அவரது சாதனையைக் கண்டு இந்தியா பெருமையடைகிறது. @189thangavelu #Paralympics #Praise4Para,” என்று தமது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளார். மேலும் தமிழ்நாட்டின் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பதிவில்
பாரலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழகத்தின் மாரியப்பன் தங்கவேலு
இந்தியாவின் பதக்க எண்ணிக்கை பத்தாக அதிகரிப்பு
ஜப்பான் டோக்கியோவில் 16-வது பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் தொடர்ந்து தடம் பதிக்கின்றனர். இதுவரை 2 தங்கம் உட்பட 8 பதக்கங்களை வென்றுள்ளனர். நேற்று ஒரே நாளில் இரண்டு மணிநேரத்தில் இந்தியா 4 பதக்கங்களை வென்றது.
இன்று நடைபெற்ற உயரம் தாண்டுதலில் இந்தியா பதக்கம் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு உட்பட, மூவர் கலந்துகொண்டனர். இந்திய நேரப்படி மாலை 3.55 மணிக்கு தொடங்கிய போட்டியில், தமிழகத்தின் மாரியப்பன் தங்கவேலு, 1.86 மீ உயரம் தாண்டி முதலிடத்தைப் பிடித்தது பதக்கம் உறுதி செய்தார்.
தொடர்ந்து பங்கேற்றவர் வெள்ளிப்பதக்கம் வென்றார். அவருடன் சேர்ந்து இந்தியாவின் சரத்குமார், வெண்கலப் பதக்கத்தை வென்றார். இதனால் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை பத்தாக அதிகரிக்கிறது. இருவருக்கும் வாழ்த்துக்கள் குவிகிறது.
2016 ல் ரியோ-வில் நடைப்பெற்ற ‘பாராலிம்பிக்ஸ்’ போட்டியில், உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்றார். மாரியப்பன் தங்கவேலு. ஏழ்மை மற்றும் வறுமை நிலையிலிருந்து வாய்ப்புகளும் நம்பிக்கைகளும் நிறைந்த உலகிற்கு உயரமாய் தாண்டினார் மாரியப்பன். 21 வயதில் தங்கப் பதக்கம் வென்றார்.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பெரியவடாகம்பட்டி கிராமத்தின் ஏழைக் குடும்பத்தில் ஐந்து குழந்தைகளில் ஒருவர் மாரியப்பன். தாயார் சரோஜா வீட்டின் ஏழ்மை நிலையை சமாளித்து தனியாக குடும்பத்தை நிர்வாகிக்க.
சரோஜா கல் சுமந்து தினக்கூலியாக வேலை செய்தார். பின்னர் பூ மற்றும் காய்கறிகள் விற்றார். ஐந்து வயதிருக்கும் போது மாரியப்பன் பள்ளிக்கு நடந்து சென்ற போது அவருக்கு விபத்து ஏற்பட்டது. பஸ் ஓட்டுநர் மது அருந்திவிட்டு ஓட்டியதால் ஏற்பட்ட விபத்தில் மாரியப்பனின் முழங்காலுக்கு கீழ் நசுங்கியது
“இன்னும் என்னுடைய காலுக்கு ஐந்து வயதுதான் ஆகிறது. அது வளரவும் இல்லை குணமாகவும் இல்லை,” என்று ஒரு பேட்டியில் தெரிவித்தார் மாரியப்பன்.
அவரது தாயார் தனியாக மாரியப்பனின் சிகிச்சைக்காக 3 லட்ச ரூபாய் திரட்டினார். விபத்திற்குப்பின் சிதைந்தது போன வலது காலில், கட்டைவிரல் மட்டுமே இருந்தது. அதனுடன் வாழ்கிறார் மாரியப்பன். இருப்பினும் அந்த விரலின் உதவியுடன் தான் பதக்கம் வெல்லும் அளவிற்கு அவரால் உயரம் தாண்டமுடிந்தது என்பதால் அவர் அதைக் ‘கடவுள்’ என்கிறார். தொடர்ந்து பங்கேற்றவர் வெள்ளிப்பதக்கம் வென்றார். அவருடன் சேர்ந்து இந்தியாவின் சரத்குமார், வெண்கலப் பதக்கத்தை வென்றார். இதன்மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை பத்தாக அதிகரித்தது.
2016 ஆம் ஆண்டில் ரியோ-வில் நடைப்பெற்ற ‘பாராலிம்பிக்ஸ்’ போட்டியில், உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் பெற்றார் மாரியப்பன் தங்கவேலு. ஏழ்மை மற்றும் வறுமை நிலையிலிருந்து வாய்ப்புகளும் நம்பிக்கைகளும் நிறைந்த உலகிற்கு உயரத் தாண்டினார் மாரியப்பன். எப்படிப்பட்ட மோசமான சூழலிலும் ஒரு சாதகமான அம்சம் இருக்கும் என்பதற்கேற்ப 21 வயதில் மாரியப்பன் தங்கப் பதக்கம் வென்றார். ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டியில் 3 வாய்ப்புகள் வழங்கப்படும். இதில் 1.70 மீ உயரத்துக்கான மார்க்கில் தங்கவேலு 1.73 மீட்டர் உயரம் தாண்டினார். அடுத்த சுற்றில் 1.77 மீட்டராக உயரம் அதிகரிக்கப்பட்டது. 1.77 மீட்டர், 1.80 மீட்டர் எனத் தொடர்ந்து மாரியப்பன் உயரத்தைக் கடந்து சென்றார். 1.83 மீட்டர் உயரத்தை முதல் முயற்சியிலேயே தங்கவேலு கடந்தார். 1.86 மீட்டர் உயரத்தை மூன்றாவது முயற்சியில் கடந்தார். 1.88 மீட்டர் உயரத்தைத் தாண்டுவதில் முதல் இரு முயற்சிகளிலும் இந்தியாவின் தங்கவேலுவும், அமெரிக்காவின் சாம் கிரீவும் தோல்வி அடைந்தனர். 3-வதுமுயற்சியில் இருவரும் தோல்வி அடைந்தால், தங்கப்பதக்கம் பிரித்து வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமெரிக்க வீரர் சாம் 1.88 மீட்டர் உயரம் தாண்டி தங்கம் வென்றதால், மாரியப்பன் தங்கவேலு தாண்ட முடியாததால் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இவர் சென்ற விமானத்தில் யாரோ ஒருவர் கொரானோ பாதிப்புகள் இருந்து அதன் காரணமாக ஜப்பான் டோக்கியோவில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இவர் பதக்கம் வென்று பாராட்டப்படுகிறார். டோக்கியோவில் நடைபெறும் பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் வெள்ளி பதக்கம் வென்றுள்ள தமிழ்நாட்டின் தங்கமகன் மாரியப்பனிடம் இன்று காலை மதுரை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் தொலைபேசியில் பேசி வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கின்ற வகையில் தொடர்ந்து 2 பாராலிம்பிக்கில் பதக்கம் வென்றிருப்பது வரலாற்று சாதனை.
மற்ற மாநிலங்களில் அந்த மாநில அரசுகள் Group 1 பணி கொடுத்து ஊக்கப்படுத்துவது போல், தமிழக அரசும் இரண்டு பதக்கங்களை வென்றுள்ள மாரியப்பனுக்கு Group-1 பணி வழங்க வேண்டும் என தமிழக முதல்வரை கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார்.
கருத்துகள்