முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் அதிக பொது சரக்குகளுடன் வந்த கப்பலைக் கையாண்டு புதிய சாதனையும் வா.உ.சி வாழ்வில் நடந்த சோதனைகளும்

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 29.08.2021 அன்று அதிக பொது சரக்குகளுடன் வந்த கப்பலைக் கையாண்டு புதியசாதனை படைத்துள்ளது. சிங்கப்பூர்  கொடியுடன் எம்.வி. இன்ஸ் அங்காரா  கப்பல், அரபு நாட்டிலுள்ள மினாசர்க் துறைமுகத்திலிருந்து 93,719 டன் சுண்ணாம்புக் கற்களை செட்டிநாடு சிமெண்ட் நிறுவனத்திற்காக எடுத்து வந்தது. இதற்கு முன்பு 14.05.2021 அன்று எம்.வி. பேஸ்டியன்ஸ் என்ற கப்பலின் மூலம் 92,935 டன் நிலக்கரி கையாளப்பட்ட சாதனையை முறியடித்தது.



இக்கப்பல் சரக்குதளம் 9-ல் 26.08.2021 அன்று வருகை புரிந்து, நாள் ஒன்றுக்கு 50,000 டன் சரக்குகளை கையாளும் திறன் கொண்ட மூன்று நகரும் பளுதூக்கிகள் மூலம் சரக்குகள் கையாளப்பட்டது. இக்கப்பலின் மொத்த சரக்குகளும் 29.08.2021 அன்று கையாளப்பட்டது. இக்கப்பலின் முகவர்கள் மேக்சன்ஸ் ஷிப்பிங் பிரைவேட் லிமிடெட், தூத்துக்குடி மற்றும் சரக்கு கையாளும் முகவர்கள் தூத்துக்குடி செட்டிநாடு லாஜிஸ்டிக்,  ஆகும்.

சிறந்த சாதனைக்கு தனது முழு ஒத்துழைப்பு மற்றும் கடின உழைப்பையும் தந்த அனைத்து துறைமுக உபயோகிப்பாளர்கள், கப்பல் முகவர்கள், சரக்குகள் கையாளும் முகவர்கள், பளுதூக்கி இயந்திரம் இயக்குபவர்கள், அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அயராது உழைக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் தனது பாராட்டுதல்களை வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகத் தலைவர் தா.கி. ராமச்சந்திரன், இ.ஆ.ப., தெரிவித்தார்.

வ.உ.சிதம்பரனார் துறைமுகம் நடப்பு நிதியாண்டு 2021-22 முதல் சரக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் வளர்ச்சி கண்டு வருகிறது. வ.உ.சிதம்பரனார் துறைமுகம் நடப்பு நிதியாண்டில் ஜீலை மாதம் வரை 11.33 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டு, 2020 ஆம் நிதியாண்டு ஜீலை வரை கையாண்ட அளவான 10.58 மில்லியன் டன் சரக்குகளை விட 7.14 விழுக்காடு வளர்ச்சி கண்டது. சரக்குப் பெட்டகங்களை பொருத்தவரையில் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் குறிப்பிடத்தக்க வளர்ச்சி கண்டு வருகிறது. நடப்பு நிதியாண்டு ஜீலை மாதம் வரை 2.69 இலட்சம் டிஇயு சரக்குப் பெட்டகங்களைக் கையாண்டு, கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் 21.07 சதவிகிதம் வளர்ச்சிகண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இத் தகவலை வ.உ.சிதம்பரனார் துறைமுகப் பொறுப்புக் கழகம்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்தது.                                     இப்போது நம் நினைவுக்கு வருகிறது ஒரு நிகழ்வு ...


.வேதியன் பிள்ளைக்கு கோவில்பட்டியிலிருந்து 28 மார்ச் 1929 ல்  வ.உ.சி. எழுதிய கடிதம்:

அன்பார்ந்த தம்பியவர்களே,

நீங்கள் மார்ச் மாதம் 8–உ எழுதியனுப்பிய கடிதம் வரப்பெற்றேன். அதிற்கண்ட செய்திகளைப் பார்க்குந்தோறும் எனக்கும் என் மனைவிக்கும் மிகுந்த துக்கம் உண்டாகிறது.

சென்ற 2,3 வருஷங்களுக்குள் லைப் அஷூரன்ஸ் கம்பெனியிலிருந்து எனக்கு கிடைத்த சுமார் ரூபா இரண்டாயிரமும் செலவாகித் தமிழ்ப் பண்டிதர் சுப்பிரமனியபிள்ளையவர்களிடம் பிராம்சரி நோட்டின் பேரில் வட்டிக்கு ரூபா 250.00 ம் இவ்விடத்திலுள்ள அள. சித. அள. வட்டக்கடையில் 11/4 வட்டிக்கு ரூ 500.00 ம் கடன் வாங்கியிருக்கிறேன். முந்திய கடன்கள் வேறு இருக்கின்றன். எனது வக்கீல் வரும்படி வக்கீல்கள் மிகுதியாலும் லா டெலிட்டுகள் மிகுதியாலும் மிகக் குறைந்து விட்டது.

என் ஸ்வாதார சொத்துக்கள் அடமானக் கடனுக்குட்பட்டிருக்கின்றன. தங்கள் கடிதம் வந்ததும் முதல் வட்டிக்காவது வட்டிக் கடையில் கடன் வாங்கலாமென்று முயற்சித்தேன். என் நிலைமைகளையும், என் முதுமையையும் அறிந்தவர்களாயிருக்கிறபடியால் , எனக்கும் கடன் கொடுக்க இஷ்டமில்லாமல் “பணம் இல்லை” என்ற பொய்க் காரணத்தைச் சொல்லி விட்டனர். நமது மூத்த மகளைச் சென்ற வருஷத்தில் ஒரு B.A.B.L. க்கு பெண் கேட்டனர். ரூ 1500.00 க்கு நகைகள் போட வேண்டுமென்கின்றனர். அதற்குச் சக்தியில்லாமல், அம் மாப்பிள்ளைக்குக் கொடுக்க நான் இசைய வில்லை. இப்பொழுதும் சில மாப்பிள்ளை வீட்டார் பெண் கேட்கத் தயாராகின்றனர். இப்போது ஞானம்பாளிடமிருக்கிற சுமார் ஆயிரம் ரூபா நகைகளுக்கு மேல் என்னால் போட முடியாதென்பதைத் தெரிந்து என்னிடம் வராமல் இருக்கின்றனர். 3 ரூபா, 2 ரூபா, 1 ரூபாவுக்குச் சில சமயங்களில்  அரிசி வாங்க வேண்டியதாகப் பொருட் கஷ்டம் ஏற்படுகின்றது. இந்த நிலைமையில் நான் என்ன செய்யக் கூடும்.! இது நிறக.

ஒரு வாரத் தமிழ்ப் பத்திரிக்கை தொடங்குவதற்குரிய விளம்பரம் முதலியன வெளிப்படுத்தி இலங்கைக்கும், பர்மாவுக்கும் எனது ஏஜெண்டாகக் தாங்கள் போய்ச்  சந்தாதாரர்களும், நன்கொடைகளும் சேர்த்து வந்து என் பெயரால் பத்திரிக்கையைத் தாங்கள் நடத்தலாமா என்று ஆலோசனை செய்யுங்கள். மேற்படி இரண்டு நாடுகளிலும் என் பெயருக்குக் கொஞ்சம் மதிப்பு உண்டு. அங்கு போவதற்குரிய செலவுக்கு என் செலவோடு செலவாகப் பணம் தருகிறேன். அங்கு தக்க உத்தியோகம் கிடைத்தாலும் , அதனை தாங்கள் பெறலாம். எனக்கு இன்ன செய்வதென்று ஒன்றும் தோன்ற வில்லை. இந்தக் கடிதம் எழுதவும் மனம் இல்லை. தங்கள் கடிதத்திற்கு பதில் எழுதாமல் இருக்கவும் முடியவில்லை. அதனால் இதனை எழுதினேன். நமது சகோதரர் ஸ்ரீமான் C. விருத்தாசலம் பிள்ளையவர்கள் சவுக்கியமாயிருக்கிறார்களா!

கடவுள் துணை

வ.உ.சிதம்பரம் பிள்ளை.

இந்தக் கடிதம் 1960  “ அமுதசுரபி “ மாத இதழில் வெளி வந்ததையடுத்து வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர். ஆ.இரா. வேங்கடாசலபதி அவர்கள் தொகுத்த வ.உ.சி. கடிதங்கள் (1902 – 1936)  என்ற பேரில் சேகர் பதிப்பகம் மூலம் 1984 ம் ஆண்டு இந்த நூலினை கொண்டு வந்துள்ளார்.

இந்தக் கடிதத்தினை படித்த என்னால் தாங்க இயலவில்லை. ஒரு பக்கம் சிறைக்குப் போய் வந்ததால் அன்றைய காலத்தின் சமூக புறக்கணிப்பும், தன்னுடைய மகளை வரதட்சனை கொடுக்க முடியாமல் அதற்கு தகுந்த மாப்பிள்ளை கிடைக்கமாட்டார்களா என்ற அவரது எதிர்பார்ப்பு, அவரிடம் பணம் கொடுத்தால் வராது என்பதை அவரது வயோதிகத்தை குறிப்பிடுவது இதற்கிடையேதான் கோவில்பட்டியில் வசித்த காலத்தில் தொல்காப்பியம் – இளம் பூரணம்- பொருளதிகாரம் ( அகத்திணையியல், புறத்திணையியல் 2ம் பதிப்பாக வெளிவருகிறது (1928)), தொல்காப்பியம் – எழுத்ததிகாரம் (1928), எந்த மனநிலையில் தமிழுக்கும் பணியாற்றி வந்துள்ளார். பெரியவருடைய இந்த கடிதம் அவர் எழுதிய வெண்பாவை காண்போம்.

வந்த கவி ஞர்க்கெல்லாம் மாரியெனப் பல்பொருளும்

தந்த சிதம்பரமன தாழ்ந்தின்று சந்தமில் வெண்

பாச்சொல்லிப் பிச்சைக்குப் பாரெல்லாம் ஓடுகிறான்

நாச்சொல்லும் தோலும் நலிந்து.

எல்லாரும் கைவிட்டார் ஏந்திழையும் துன்புற்றாள்

வல்லாரும் வல்லுநரும்  மாநிலத்துச் - செல்லா

திவன் பேச் சினியென் றென்னை யிகழ்ந்தார்

என் மெயத் தவன் பூமி நாதன் தடத்து

இந்த கடிதத்தை தட்டச்சிட்டப் போது கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. எழுதிய  வெண்பாவும்  மனதிற்குள் வந்து போகும் இப்போது அவர் பெயரில் உள்ள துறைமுகம் செல்வம் கொழிக்கும் நிலையில் இந்த கட்டுரை என்னை எழுதத் தூண்டியது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...