பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம் 5 வது ஆண்டு தினத்தை அக்டோபர் 1 ஆம் தேதி கொண்டாடுகிறது ஐபிபிஐ
நொடிப்பு நிலை மற்றும் திவால் வாரியம்(ஐபிபிஐ) தனது 5வது ஆண்டு தினத்தை 2021 அக்டோபர் 1ம் தேதி கொண்டாடுகிறது. பிரதமர் திரு நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனை குழு தலைவர் டாக்டர் பிபெக் தெப்ராய், இந்த விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு, திவால் நிலை விதிமுறை ஆய்வறிக்கை குறித்து ஆண்டு தின உரை நிகழ்த்துகிறார்.
ஆண்டு விழாவை முன்னிட்டு ‘ஐந்தாண்டு நொடிப்பு நிலை மற்றும் திவால் விதிமுறை’ குறித்த புத்தகம், திவால் நிலை விதிமுறையில் எனது முத்திரை. திவால் நிலை விதிமுறையின் 5 ஆண்டு பயணம் குறித்து மின்னணு-புத்தகம் ஆகியவை வெளியிடப்படுகின்றன.
இந்நிகழ்ச்சி புது தில்லி, லோதி ரோட்டில் உள்ள இந்தியா ஹேபிடட் மையத்தில் உள்ள ஸ்டீன் அரங்கத்தில் நடைபெறும்.
இந்நிகழ்ச்சியில் காணொலி மூலம் பங்கேற்பதற்கான இணைப்பு https://ibbi.gov.in/annualday2021
கருத்துகள்