சர்வதேச முதியவர்கள் தினத்தை முன்னிட்டு மூத்த குடிமக்களை கௌரவிக்கும் வயோ நமன் நிகழ்ச்சி: அக்டோபர் 1-ஆம் தேதி குடியரசு துணைத் தலைவர் தொடங்கி வைக்கிறார்
சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
சர்வதேச முதியவர்கள் தினத்தை முன்னிட்டு மூத்த குடிமக்களை கௌரவிக்கும் வயோ நமன் நிகழ்ச்சி: அக்டோபர் 1-ஆம் தேதி குடியரசு துணைத் தலைவர் தொடங்கி வைக்கிறார்
சர்வதேச முதியவர்கள் தினத்தை முன்னிட்டு மூத்த குடிமக்களை கௌரவிக்கும் வகையில் வயோ நமன் என்ற நிகழ்ச்சியை அக்டோபர் 1 அன்று காலை 11:55 முதல் பிற்பகல் 1:05 வரை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் நடத்தவிருக்கிறது. மூத்த குடிமக்கள் நலனுக்காக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1-ஆம் தேதியை சர்வதேச முதியவர்கள் தினமாக அமைச்சகம் கொண்டாடி வருகிறது.
குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, வயோஷேஷ்த்ர சம்மான் விருதுகளை வழங்குவார். 14567 என்ற மூத்த குடிமக்களுக்கான உதவி எண்ணையும் அவர் நாட்டிற்கு அர்ப்பணிப்பார். மேலும் இந்த நிகழ்ச்சியின் போது மூத்த குடிமக்களுக்கான இணையதளங்களையும் அவர் தொடங்கி வைப்பார்.
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் டாக்டர் விரேந்திர குமார், இணை அமைச்சர்கள் திருமதி பிரதிமா பௌமிக், திரு ராம்தாஸ் அத்வாலே, திரு ஏ. நாராயணசாமி, செயலாளர் திரு ஆர். சுப்பிரமணியம் ஆகியோரும் விழாவில் கலந்து கொள்வார்கள்.
கருத்துகள்