நிதி அமைச்சகம் மகாராஷ்டிராவில் உள்ள எஃகு ஆலைகளில் வருமானவரித்துறை சோதனை
மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னா பகுதியில் 4 எஃகு ஆலைகள் கொண்ட குழுமத்தில், வருமானவரித்துறை கடந்த 23ம் தேதி திடீர் சோதனை நடத்தியது. ஜல்னா, அவுரங்காபாத், புனே, மும்பை மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
அப்போது, போலி ஆவணங்கள், போலி கணக்குகளுக்கான டிஜிட்டல் ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டன. கணக்கில் காட்டப்படாத பண பரிவர்த்தனைகள் அதிகளவில் நடந்துள்ளதை இந்த ஆவணங்கள் தெளிவாக காட்டின. இந்த நிறுவனங்களின் கணக்கில் காட்டப்படாத வருவாயில், நிதி மோசடி செய்யப்பட்டதற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. கணக்கில் காட்டப்படாமல், ரூ.200 கோடி அளவுக்கு கொள்முதல் செய்யப்பட்டிருப்பதற்கான ஆவணங்களும் சிக்கின. தொழிற்சாலை வளாகத்தில், கணக்கில் காட்டப்படாத இருப்புகள் அதிகளவில் இருந்தன.
12 வங்கி லாக்கர்கள், இந்த சோதனையில் கண்டறியப்பட்டன. ரூ.2.10 கோடி அளவுக்கு கணக்கில் காட்டப்படாத ரொக்க பணம், ரூ.1.07 கோடி மதிப்பிலான நகைகள் ஆகியவை பல இடங்களில் நடந்த சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டன. கணக்கில் காட்டப்படாத வருவாய் ரூ.300 கோடியை தாண்டும் அளவுக்கு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக மேலும் விசாரணை நடக்கிறது.
கருத்துகள்