சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம். மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் இதுவரை 85.42 கோடி கொவிட் தடுப்பூசிகள் விநியோகம்
நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய அரசு, செப்டம்பர் 28-ஆம் தேதி வரை, 85.42 கோடிக்கும் அதிகமான (85,42,35,155) கொவிட் தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், இலவசமாக வழங்கியுள்ளது. மேலும் 83.80 கோடி (83,80,140) டோஸ் தடுப்பூசிகளை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
சுமார் 4.57 கோடி (4,57,98,120) கொவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் வசம் உள்ளன.கொவிட்-19 பற்றிய அண்மைத் தகவல்
நாடு தழுவிய கொவிட் தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 87.66 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.
இந்தியா தினமும் 20,000 க்கும் குறைவான புதிய தொற்று பாதிப்புகள் பதிவாகி உள்ளன; கடந்த 24 மணி நேரத்தில் 18,870 புதிய தொற்று பாதிப்புகள் காணப்படுகின்றன.
நாட்டில் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்பில் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் விழுக்காடு 1%க்கும் குறைவாக, 0.84% ஆகும். மார்ச் 2020 பிறகு குறைந்தது
இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,82,520 ஆகும். 194 நாட்களில் குறைந்தது
மீட்பு விகிதம் தற்போது 97.83%; மார்ச் 2020 முதல் அதிகபட்சம்
கடந்த 24 மணி நேரத்தில் 28,178 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 3,29,86,180 பேர் குணமடைந்துள்ளனர்
வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு (1.82%) 96 நாட்களாக 3%க்கும் குறைவாக உள்ளது.
தினசரி தொற்று உறுதி வீதம் (1.25%) 30 நாட்களாக 3%க்கும் குறைவாக உள்ளது.
இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 56.74 கோடியாகும்.இந்தியாவின் மொத்த கொவிட் தடுப்பூசியின் எண்ணிக்கை 87.66 கோடியைக் கடந்து குறிப்பிடத்தக்க சாதனை
இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 87.66 கோடியைக் கடந்து, புதிய சாதனையைப் படைத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 54,13,332 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 85,33,076 முகாம்களில் 87,66,63,490 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் 28,178 பேர் குணமடைந்தனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,29,86,180. ஆக உயர்ந்துள்ளது.
நம் நாட்டில் குணமடைந்தவர்களின் விழுக்காடு, 97.83 சதவீதமாக உள்ளது. இது கடந்த மார்ச் 2020-க்குப் பிறகு மிக அதிகமாகும்.
தொடர்ந்து 94 நாட்களாக புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 50,000க்கும் குறைவாக ஏற்பட்டு வருகிறது.
இந்தியா தொடர்ச்சியாக இரண்டாவது நாளுக்கு 20,000 க்கும் குறைவான தினசரி புதிய வழக்குகளைப் பதிவு செய்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 18,870 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன.
இந்தியாவில் கொவிட் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,82,520 ஆக உள்ளது. இது, நாட்டின் மொத்த பாதிப்பில் 0.84 சதவீதம் ஆகும். இது 194 நாட்களில் மிகக் குறைவானது.
கடந்த 24 மணி நேரத்தில் 15,04,713 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 56,74,50,185 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு தொடர்ந்து 96 நாட்களாக 3 சதவீதத்திற்கும் குறைவாக, 1.82 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி விகிதம் 1.25 சதவீதமாகவும் இன்று பதிவாகியுள்ளது. இந்த எண்ணிக்கை 30 நாட்களாக 3 சதவீதத்திற்குக் குறைவாகவும், தொடர்ந்து 113 நாட்களாக 5 சதவீதத்திற்குக் குறைவாகவும் ஏற்பட்டுள்ளது.
கருத்துகள்