இந்திய கடற்படை மற்றும் ஆஸ்திரேலிய கடற்படை இடையே பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கான ஒப்பந்தம் கையெழுத்து
பாதுகாப்பு அமைச்சகம் இந்திய கடற்படை மற்றும் ஆஸ்திரேலிய கடற்படை இடையே பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கான ஒப்பந்தம் கையெழுத்து
இந்திய மற்றும் ஆஸ்திரேலிய கடற்படை உறவுகளை மேம்படுத்துவதற்கான கூட்டு வழிகாட்டுதல் ஒப்பந்தத்தில், இருநாட்டு கடற்படை தலைவர்களும் கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி கையெழுத்திட்டனர். இதைத் தொடர்ந்து, இரு நாட்டு கடற்படைகளும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான விதிமுறைகள் குறித்த ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. காணொலி காட்சி மூலம் நடந்த இந்த விழாவில், இந்திய கடற்படை சார்பில் ரியர் அட்மிரல் ஜஸ்விந்தர் சிங், ஆஸ்திரேலிய கடற்படை சார்பில் துணை தளபதி ரியர் அட்மிரல் கிரிஸ்டோபர் ஸ்மித் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தம், பரஸ்பர புரிதல், நம்பிக்கை மற்றும் வெளிப்படைத்தன்மை, மேம்பட்ட நல்லெண்ணம் மற்றும் இருதரப்பின் கவலைகள் மற்றும் எதிர்கால
செயல்பாடுகளில் புரிதல் ஆகியவற்றின் பரந்த நோக்கத்தை வலியுறுத்துகிறது. மேலும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கடற்படைகள் இடையேயான பேச்சுக்களை நடத்துவதற்கான விரிவான வழிகாட்டுதலை வழங்குகிறது. இந்த பேச்சுக்களின் முடிவுகளின் அடிப்படையில் தனி ஒப்பந்தங்களை செயல்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.
கருத்துகள்