சட்டக்கல்வியை முறையாகப் பயிலாமல் வழக்கறிஞர்களாகினர் என. சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தெரிவித்தார்
சட்டக்கல்வியை முறையாகப் பயிலாமல் வழக்கறிஞர்களாகினர் வழக்கறிஞர் தொழில் எளிதானதல்ல; வெற்றி பெறக் கடுமையான உழைப்பும், நேர்மையும் அவசியமென சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தெரிவித்தார். சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கறிஞர்கள் நலநிதி அறக்கட்டளைத் துவக்க விழாவில் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி கலந்து கொண்டு அறக்கட்டளைக்கு முதல் நன்கொடையாக மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான் வழங்கிய ரூபாய்.10.50 லட்சத்துக்கான காசோலை வழங்கினார்.
இதை அறங்காவலர்களான ஆர்.காந்தி, ஆறுமுகம் ஆகியோரிடம் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி வழங்கினார்.விழாவில் பேசிய தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பேசுகையில்
வழக்கறிஞர் தொழில் எளிதானதல்ல. எளிதாக தங்கப் புதையல் கிடைக்கும் தொழில் வழக்கறிஞர் தொழிலல்ல. இதில் வெற்றி பெறக் கடுமையான உழைப்பும், நேர்மையும் அவசியம். இந்தியாவில் சுமார் 2,800 சட்டக் கல்லூரிகள் உள்ள நிலையில்.சமீபத்தில் சட்டக் கல்வியை முறையாகப் பயிலாமல் வழக்கறிஞர்களாக வருகின்றனர். சட்டக் கல்வியின் தரத்தை உறுதிப்படுத்த வேண்டியது தற்காலத்தின் தேவையாகும்.
கல்வி ஒரு மனிதனை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும். பட்டப் படிப்பு என்பது பெயருக்குப் பின்னால் மட்டும் குறிப்பிடுவதற்காக இருக்கக் கூடாது. கல்வி உண்மையான சமூக மாற்றத்துக்கானதாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் மறையும். நீதித்துறை என்பது நீதிபதியை மட்டும் சார்ந்ததல்ல.,
வழக்கறிஞர், நீதிமன்ற ஊழியர்கள், பொதுமக்கள் சேர்ந்தது தான் நீதித்துறை. நீதி வழங்குவது என்பது இறைபணி அல்ல. அது மற்ற அரசுப் பணிகளை போலவே சமூகக் கடமைகளை நிறைவேற்றும் ஒரு பணியாகும். இறைப் பணியை இறைவனைத் தவிர வேறு யாராலும் மேற்கொள்ள முடியாது. பொதுப் பணியில் இருப்பவர்கள் நேர்மையாக இருக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தெரிவித்தார். அறக்கட்டளைக்கு நிதி வழங்கிய நீதிபதி புகழேந்தி, மூத்த வழக்கறிஞர்களான அஜ்மல்கான், வீ.ரா.கதிரவன், வழக்கறிஞர்கள் ஆர்.காந்தி, கு.சாமிதுரை, லஜபதிராய் உள்ளிட்ட மற்றும் பல நீதிபதிகளையும், தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பாராட்டினார். விழாவில், உயிரிழந்த வழக்கறிஞர்கள் சிவகுமார், அன்பு சரவணன் குடும்பத்துக்கு பண உதவிகளும் வழங்கப்பட்டது.
கருத்துகள்