தொழிலதிபரைக் கொல்ல முயன்ற ஏழு பேர் கைது, கும்பல் தலைவன் ஜான் பாண்டியனுக்கு. தனிப்படை காவல்துறை வலைவீச்சு
தொழிலதிபரைக் கொல்ல முயன்ற ஏழு பேர் கைது, கும்பல் தலைவன் ஜான் பாண்டியனுக்கு. தனிப்படை காவல்துறை வலைவீச்சு .
கோயமுத்தூர்: தொழிலதிபரைக் கொல்ல முயன்ற வழக்கில் விசாரணை நடத்த, தமிழக முன்னேற்ற கட்சியின் ஜான் பாண்டியனை விசாரிக்க தனிப்படை காவல்துறையினர் விரைந்துள்ளனர்.
கோயமுத்தார் வடவள்ளி தொண்டாமுத்தூர் சாலையில் வசித்து வரும் தீபக் அரோரா.(வயது39) . அவரது மனைவி பிரியா..
துருவ் என்டர்பிரைசஸ் எனும் இருசக்கர வாகன ங்களுக்கு எக்ஸ்ட்ரா பிட்டிங்ஸ் மற்றும் ஹெல்மெட் விற்பனை செய்யும் தீபக் அரோரா நடத்தும்
பிரியா அரோரா 2018 ஆம் ஆண்டு மணியக்காரம்பாளையம் பகுதியில் நாலரை சென்ட் மனையிடத்தை வாங்கி தனது விற்பனைக் கடை நடத்தி வருகிற நிலையில் அவரது மனைவி பிரியா அரோராவிற்கு வேறு இளைஞருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக அறிந்த தீபக் அரோரா அவரை கண்டித்ததனால், பிரியா பிரிந்து சென்றார்.
அதன்பிறகு தீபக் அரோரா, பிரியா பெயரில் வாங்கிய சொத்துக்களைக் கைப்பற்ற முயற்சித்தார்..அதனால் பிரியா நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கும் தொடர்ந்தார்.அதனால் தீபக் சொத்துக்களைக் குறித்து நீதிமன்றத்தில் பிரியா மீது சிவில் வழக்கு ம் தொடர்ந்தார். இச் சூழலில், தீபகை மிரட்டுவதற்காக, பிரியா சிலரை அணுகியுள்ளார்...
அப்போது பிரியாவின் சொத்துள்ள இடத்தில் தீபக்கின் குடோன் உள்ளதால் அதைக் காலி செய்யச் சொல்லி பிரியா அனுப்பிய சிலர் தீபக்கை வற்புறுத்தியுள்ளனர்.. கடந்த சில மாதங்களாகவே அவர்கள் தீபக்கை மிரட்டி இடத்தைக் காலி செய்யும்படி சொல்லி வந்த கட்டப்பஞ்சாயத்து கும்பலுக்கு தீபக் மறுத்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த சிலர் தீபக்கை தாக்கியுள்ளனர்.. படுகாயமடைந்த தீபக் காவல் நிலையத்தில் புகார் செய்தார். தீபக்கை தாக்கியவர்களை சரவணம்பட்டி காவல்நிலையத்தினர் தமிழக முன்னேற்ற கட்சியைச் சோ்ந்த ஜெயராஜ், சந்தேஷ், ஜெகன், தீபன், மதன், கதிரவன், கருப்புசாமி உள்ளிட்டோரைக் கைது செய்து விசாரிக்கின்றனா். அவா்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஏழு பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் காவல்துறை நடத்திய விசாரணையில் ஜான் பாண்டியன் சொல்லித்தான் அவரது தூண்டுதல் காரணமாக அவர்கள் தீபக்கை தாக்கியதாகத் தெரியவந்ததையடுத்து தமுக கட்சி நடத்தும் ஜான் பாண்டியனை விசாரிப்பதற்காக தனிப்படை காவல்துறையினர் விரைந்துள்ளனர். அவரிடம் நடத்தும் விசாரணையில் தகவல் உண்மை எனத் தெரியவந்தால் அவர் கைது செய்யப்படுவார்
இந்தக் கொலை முயற்சிக்கும் ஜான் பாண்டியனுக்கும் தொடர்பு உள்ளதா என தொடர்ந்து விசாரித்து வருவதனிடையே, தீபக் அரோரா கோயமுத்தூர் மாநகர காவல்துறை ஆணையரைச் சந்தித்து தனது உயிருக்கு பாதுகாப்பு வழங்கக் கேட்டு மனு அளித்துள்ளார்.. ஜான் பாண்டியன் மனைவி பிரசில்லா வழக்கறிஞர் மட்டுமல்லாமல் பார் கவுன்சில் பதவி வகித்த நிலையில் இதுபோன்ற செயல்களில் ஜான்பாண்டியன் பழைய நிலையில் தொடர்ந்து செய்வது பலரின் பார்வையில் விமர்சனம் செய்யும் நிலை.வருகிறது மேலும் இவரது தேர்தலுக்கு பரப்புரை செய்ய பிரதமர் வந்த நிகழ்வு குறிப்பிடத்தக்கது. இவர் அதிமுக கூட்டணியில் இருந்த நிலையில் தற்போது சமீபத்தில் விலகுவதாக அறிவித்தார்.
கருத்துகள்