பசும்பொன் தேவர் திருமகனின் ஆன்மீக, அரசியல் வாழ்க்கையை வெளிப்படுத்தும் வகையி்ல் அக்டோபர் மாதம் 28 ஆம் தேதி துவங்கியது ஆன்மீக விழாவும், 29 ஆம் தேதி அரசியல் விழாவும், 30 ஆம் தேதி குருபூஜை ஜெயந்தி விழாவும் தேவர்
நினைவாலயத்தில் கொண்டாடாடப்பட்டது. இந்த ஆண்டு பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் திருமகனின் 114 ஆவது ஜெயந்தி விழாவும், 59 ஆவது ஆண்டு குரு பூஜையும் கொண்டாடப்பட்டது
அதிமுக பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா நடராஜன் பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் பின்னர் தேவர் வாழ்ந்த இல்லத்தில் வழிபட்டு நினைவில்லத்தின் பொறுப்பாளர் தேவரின் சகோதரி மருமகள் காந்திமதி அம்மாவிடம் பேசினார்.நேற்று முன்தினம் யாகசாலை பூஜை மற்றும் லட்சார்ச்சனையுடன் ஆன்மிக விழா தொடங்கியது.
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அவரது முழு வெண்கல திருவுருவ சிலைக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் தமிழக அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள், மதுரை மாவட்ட ஆட்சியர் பங்கேற்றனர்.
பசும்பொன்னில் இன்று தேவர் நினைவிடத்தில் பல்வேறு கட்சித் தலைவர்களும் நேரில் சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
மேலும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை பதிவுசெய்துள்ளார் அதில் "தேவர் ஜெயந்தி கொண்டாடப்படும் இந்த நேரத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் சிறப்பான பங்களிப்பை நினைவு கூர்கிறேன். மிக உயர்ந்த துணிச்சலும், கனிவான உள்ளமும் கொண்ட அவர், மக்கள் நலனுக்காகவும் மற்றும் சமூக நீதிக்காகவும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் நலனுக்காக பணியாற்றியவர் எனக் கூறியுள்ளார்.இந்த நிலையில், மக்கள் நலனுக்காவும், சமூகநீதிக்காகவும் வாழ்நாளை அர்ப்பணித்தவர் முத்துராமலிங்கத் தேவர் என பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பதிவில் நினைவு கூர்ந்துள்ளார்.உசிலம்பட்டி பசும்பொன் உ. முத்துராமலிங்கத்தேவர் கல்லூரியில்
தேவர் ஜெயந்தி விழா மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினராக அகில இந்திய பார்வர்டு பிளாக் தேசிய செயலாளர் G.தேவராஜன் மாநில பொதுச் செயலாளர் என்ற முறையில் பி.வி. கதிரவன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் பசும்பொன் தேவர் திருமகனாரின் அர்ப்பணிப்பு மற்றும் தியாகங்களைப் பற்றியும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கொள்கை கோட்பாடுகள் குறித்தும் தேசிய செயலாளர் தேவராஜன் மற்றும் கதிரவன் சிறப்புரையாற்றினார்கள்.
கல்லூரியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கபட்டது.
நிகழ்வில் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி நிர்வாகிகள்
பேராசிரியர்களும் மற்றும் அகில இந்திய பார்வர்ட் பிளாக் நிர்வாகிகள், மற்றும் பொறுப்பாளர்களும் பங்கேற்றனர்.கல்லூரி நிர்வாகிகள் தலைவர் L.S. பாலகிருஷ்ணன் செயலாளர் வாலாந்தூர் P.பாண்டியன் பொருளாளர் SR.வனராஜா கல்லூரி முதல்வர் OA.ரவி மற்றும் MPR. பாஸ்கரபாண்டியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
யார் இதற்க்கு காரணம்.. பெற்றவர்கள் உண்மையான வரலாறு சொல்லிக் கொடுத்து ஒழுக்கம் கட்டுப்பாடு இல்லாமல் வளரும் இளைஞர்கள் தான்
அனைவராலும் மதிக்கப்படும் தேவர் அய்யா அவர்களை வணங்குவது எப்படி என்ற அடிப்படை கூட தெரியாத சில ஆர்வகோளாறுகளின் செயல்களே இதற்கு முழுமையான காரணம்...
சமூக பொருளாதார விடயங்களில் பாதிப்பு வரும் போது இந்த இளைஞர்கள் இருக்குமிடமே தெரியாமல் இருந்துவிட்டு
குருபூஜை யின் போது தங்களின் இருப்பை வெளிக்கட்டும் அரசியல் விளம்பரப் பிரியர்கள் அவர்கள் சார்ந்துள்ள நபர்களின் செயல்களே இதற்க்கு மூல காரணமாகும்.
மதுக்கடைகளை மூடினாலும் இவர்கள் மது அருந்தி விட்டு சாலையில் ஆடுவதும் வாகனங்களில் மேல் அமர்ந்து செல்வதும் தங்களை தாழ்த்தி மதிப்பிடக் காரணமாக அமைகிறது தேவர் திருமகனை வணங்கி பெருமை படுத்துவது நோக்கமாக இவர்கள் கருதவில்லை.
இந்த மாதிரி உள்ள ஆர்வக் கோளாறுகளை காவல்துறையினர் தடுத்து நல்வழி படுத்தினால் தவறே இல்லை. என்றாலும் இவர்கள் செயல் பலர் வேதனைப்படும் அளவில் தான் அமைகிறது. இது இனிமேல் வரும் காலங்களில் திருத்தந்தை நோக்கி இவர்கள் பயணப்பட வேண்டும். மேலும் சென்னையில் நந்தணம் தேவர் சிலைக்கு பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். விழாவில் திரளான மக்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த காவல்துறை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இன்று பாதுகாப்புப் பணிக்காக போலீசார் வாகனம் வந்தபொழுது அங்கு இருந்த சில இளைஞர்கள் காவல்துறையின் வாகனத்திலிருந்து காவலர்களைக் கீழே இறக்கிவிட்டுவிட்டு ஜீப்பின் மீது ஏறி ஆட்டம் போட்டதுடன் நிகழ்ச்சிப் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பார்வையிட்ட வட்டாட்சியரின் வாகனத்தின் மீது ஏறியும் அராஜகம் செய்து ஆட்டம் போட்டனர்.
இதை கண்டு மக்கள் பலரும் மற்றும் காவல்துறை ஆத்திரமடைந்த நிலையில் உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்த நிலையில், விழா அமைதியாக நடைபெற வேண்டும் எனவே காவலர்கள் பொறுமை காக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டதாகக் தெரிகிறது. இதனால் பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர்கள் இடையூறு ஏற்படுத்திய இளைஞர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்தனர். அரசு வாகனத்தின் மீது ஏறி இளைஞர்கள் ஆட்டம் போடும் காணொளிக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
கருத்துகள்