அக்டோபர் மாதம் 29 மற்றும் 30 ஆம் தேதி நடந்த தேவர் ஜெயந்தி விழாவில் கலந்துகொள்ள வந்த கமுதி அருகே மண்டலமாணிக்கம் பகுதி இளைஞர்களில் சிலர், TN-66 G 0745 என்ற பதிவெண் கொண்ட காவல்துறை வாகனத்தின் கூரை மீது ஏறி ஆட்டம் போட்டதால், 13 பேர் மீது காவல்துறையில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
காவல்துறை வாகனத்தை வழிமறித்து, வாகனத்தின் கூரை மீது ஏறிச் சேதப்படுத்தி, ஓட்டுனரை அசிங்கமாப் பேசியதுடன் கொலை மிரட்டல் விடுத்ததாக அவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விழாவிற்கு சென்ற போது அரசு வாகனத்தின் மீது ஏறி, நடனமாடி அட்டூழியம் செய்த 13 பேர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலதரப்பட்டவர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்த நிலையில் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது மேலும் கைதுசெய்ய உத்தரவு
பசும்பொன் கிராமத்திற்கு மரியாதை செலுத்த, தனியார் வாகனங்களில் அனுமதி பெற்றுத்தான் சென்றனர். இளைஞர்கள் சிலர் வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அளவுக்கதிகமாக வாகனத்தின் கூரையின் மீதேறி ஆபத்தான முறையிலும் பயணம் செய்தனர்.
அதுமட்டுமின்றி இளைஞர்களில் சிலர் குடிபோதையில் அரசு, காவல்துறை வாகனங்களில் ,அரசு பேருந்து மற்றும் தனியார் வாகனங்களை நடுவழியில் மறித்து,பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சிலர் நடந்து கொண்டனர்.
ஓரிரு இடங்களில் அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டன. பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் முன்னர், இழிவான செயல்களிலும் ஈடுபட்டனர். மேலும் இது குறித்து பல்வேறு காணொளிக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
காணொளிக் காட்சிப் பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து,கைது செய்ய காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்..
கருத்துகள்