புதுக்கோட்டை நகர் திருக்கோகர்ணம் பகுதியில் ஒரு வீட்டிலிருந்து கஞ்சா பொட்டலங்கள் தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும் கை மாறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல்
கிடைத்ததன் பேரில் திருச்சிராப்பள்ளி சரக காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சரவணன், சார்பு ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்ட நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேல் போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுனர். திருக்கோகர்ணம் காவல் ஆய்வாளர் ரமேஷ் தலைமையில் காவலர்கள் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது கோவில்பட்டி பகுதியில் சந்தேகப்பட்டு பெண் ஒருவரை பிடித்து விசாரித்ததில் திருக்கோகர்ணம் அய்யப்பன் மனைவி ஜானகி (வயது40) எனத் தெரிந்ததில் அவர் வைத்திருந்த பையை காவலர்கள் சோதனை செய்த போது அதில் இரண்டு கிலோ கஞ்சா கண்டுபிடிக்கப்பட மேலும் ஜானகியிடம் காவல் துறை கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் அவரது வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்த நிலையில். திருக்கோகர்ணம் அபிராமி நகரிலுள்ள அவரது வீட்டில் சோதனை நடத்திய போது. பல பண்டலாக பதுக்கிய. மொத்தம் 138 கிலோ உள்ளிட்ட அவர் வைத்திருந்த 2 கிலோ கஞ்சவுடன் மொத்தம் 140 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதன்மதிப்பு ரூபாய்.14 லட்சமிருக்கும் என தகவல் மேலும் அவரது கணவர் அய்யப்பன், வினிதா, மதுரையைச் சேர்ந்த செல்வி, பாலு ஆகிய 4 நபர்களைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர். திருக்கோகர்ணம் அய்யப்பன் மனைவி ஜானகி என்பவர் ஆந்திராவிலிருந்து கஞ்சாவை வரவழைத்து மொத்தமாக தன் வீட்டில் வைத்து வெளியூர்களுக்கு அனுப்பி வைத்ததைக் கண்டுபிடித்த நிலையில். ஒரு வாரத்துக்கும் மேலாக ஜானகியைப் பின்தொடர்ந்த, ரகசிய காவலர்கள் கஞ்சா வியாபாரிகளிடம் பேசியதைத் தெரிந்துகொண்டு. மொத்தமாகக் கஞ்சாவை வீட்டுக்குள் பதுக்கி வைத்திருந்த ஜானகி 30-ம் தேதி கஞ்சாவைக் கைமாற்றத் திட்டமிட்டிருப்பது அறிந்து, ஜானகியைப் பின்தொடர்ந்த தனிப்படை கஞ்சாவைக் கைமாற்றும்போது கையும் களவுமாகப் பிடித்து
விசாரணைக்காக திருக்கோகர்ணத்திலுள்ள அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றபோது, அங்கு மேலும், பண்டல் பாண்டலாகக் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது பற்றி காவல்துறை தரப்பில், ``புதுக்கோட்டையிலிருந்து வெளியூர்களுக்கு அதிகளவில் கஞ்சா கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலின் பேரிலேயே தனிப்படை அமைத்துத் தீவிர விசாரணை நடத்தினோம். மதுரையைச் சேர்ந்த செல்வி, பாலு என்பவர்கள் ஆந்திராவிலிருந்து கஞ்சாவை வாங்கி வந்து ஜானகியிடம் ஒப்படைக்கும் பணியைச் செய்திருக்கின்றனர். திருச்சிக்குச் செல்லும் ஜானகி, திருச்சியிலிருந்து, புதுக்கோட்டைக்குக் கஞ்சாவைக் கொண்டுவந்து தனது வீட்டிற்குள் பதுக்குகிறார். தற்போது அவர் பிடிபட்டார் மேலும் சிலர் விரைவில் பிடிபடுவார்கள்.
கருத்துகள்