தமிழகத்தில் அடையாள அட்டை இல்லாத நபர்களின் வாகனங்களில் ஸ்டிக்கர் அகற்றம்
உரிய அடையாள அட்டையின்றி பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், மற்றும் அரசு வாகனங்கள் அல்லாமல் தனிப்பட்ட வாகனங்களில் போலீஸ் என 'ஸ்டிக்கர்' ஒட்டப்பட்டு வலம் வந்தவர்களின் வாகனங்களிலிருந்து, அந்த ஸ்டிக்கர்களை காவல்துறையினர் அகற்றினர்.
சென்னையில், அரசு வாகனம் என குறிக்கும் வகையில், அரசு பணியாளர்கள் தங்கள் சொந்த வாகனங்களில் ஒட்டியிருந்த ஜி ஸ்டிக்கரையும் அகற்றினர். அதேபோல், போலியான அடையாள அட்டையுடன், போலீஸ், பத்திரிக்கையாளர், வழக்கறிஞர் என பலரும், தங்கள் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டி வலம் வருவதாக புகார் எழுந்ததையடுத்து, போக்குவரத்து காவல்துறை, சாலைகளில் செல்லும் வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டதில். உரிய அடையாள அட்டையின்றி, ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களிலிருந்து, அவ்வகை ஸ்டிக்கர்கள் உடனடியாக அகற்றப்பட்டன. நேற்று, மயிலாப்பூர் காவல்துறை, லஸ் சர்ஸ் சாலையில், வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது, அடையாள அட்டையின்றி போலீஸ், வழக்கறிஞர், பத்திரிகையாளர் என, ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு வந்தவர்களின் வாகனங்களிலிருந்து, உடனடியாக ஸ்டிக்கரை அகற்றினர்.
கருத்துகள்